சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 11ம் தேதியுடன்
முடிவடைகிறது. ஜூன் முதல் வாரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
ஏப்ரல் 4 முதல், 23ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள், கடந்த 26ம் தேதியில் இருந்து, 66 மையங்களில் நடந்து வருகின்றன. 40 ஆயிரம் ஆசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 11ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வழக்கமாக மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும். ஆனால், இம்முறை பிளஸ் 2 தேர்வு முடிவுகளே தள்ளிப் போயிருப்பதால், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் 20 நாட்கள் வரை தள்ளிப்போகின்றன.
இந்த ஆண்டு, ஜூன் முதல் வாரத்தில் தான் முடிவுகள் வெளியாகும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் முதல் தேதியன்றே பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிளஸ் 1 சேர்க்கை மட்டும் தாமதமாகவே நடைபெற உள்ளன.
---Dinamalar