Translate

சனி, செப்டம்பர் 27, 2014

Bunker-joke



                                                                                 

A:மன்னர் ஏன் அரண்மனைக்குள்ளேயே பதுங்கு குழி கட்டியிருக்கிறார் ?

B:போர் நேரத்திலே பதுங்கு குழியிலே இருக்க இப்பவே      

    பயிற்சி எடுத்துகிறாராம்...                          

A:அட நீ வேறப்பா அடிக்கடி   பதுங்கு குழிக்கு  போயிடுறாரே...

B:அதுவா....புலவர்களையும் ,ராணிகளையும் சமாளிக்க முடியலேன்னாலும்
   
    அவரை அங்கே பார்க்கலாம்..........  

   
-சேதுராமன் ராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.

வியாழன், செப்டம்பர் 25, 2014

விண்ணின் இரகசியங்கள்.....



விண்ணின் இரகசியங்கள்
தெரியாமல் இருக்க
புவிக்கு வரும் வழியிலேயே
எரிக்கப்படுகின்றன
விண்கற்கள்.......

-சேதுராமன் ராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.

புதன், செப்டம்பர் 24, 2014

கிள்ளியளிக்கும் கடாட்சமே



பருக்கையளவு அல்ல 
புள்ளியின் உட்புள்ளியளவாவது
கிள்ளியளிக்கும்
கடாட்சமே
எறும்பிலும் கீழானவனுக்கு
போதும்.........

-சேதுராமன் ராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.