Translate

வியாழன், மார்ச் 05, 2015

புவி வெப்ப மாதல் ,பசுமை இல்ல வாயு ,ஓசோன் ஓட்டை

புவி வெப்ப மாதல் ,பசுமை இல்ல வாயு ,ஓசோன் ஓட்டை
**************************************************************************************
அப்படின்னு எல்லாம் சொல்றாங்களே அது உலக பிரச்சினையாமே , அதுக்கு நாம என்ன செய்ய முடியும் ?.......
இது நியாயமான கேள்வி .....
1. நாம பக்கத்து அறைக்கு போகும் போது மறக்காம எல்லா சிவிட்சும் நிறுத்தியிருக்கா அப்படின்னு பார்த்துட்டு போகணும்.
2.தேவையில்லாத இடங்களில் எரியும் விளக்குகளுக்கு ஒய்வு கொடுக்க வேண்டும்
3.கடை வீதிக்கு போனாலே கையில் பை ஒன்றை எடுத்து செல்ல வேண்டும் ....கடைகாரர் கொடுக்கும் நெகிழிப்பைகளை வேண்டாம் என்று மறுக்க வேண்டும்
3.நாம பயன்படுத்தும் எழுதுகோல் மையூற்று (inkpen )
ஆக இருந்தால் சாலச்சிறந்தது ....ஏனெனில் refil கள் மறு சுழற்சிக்கு
அதிகம் பயன்படாது....
4. மிதிவண்டி மற்றும் நடராஜா வாகனங்களில் செல்வது நமது
உடலுக்கு மிக நல்லது
5.தண்ணீர் வீணாவதை நம்மால் முடிந்த அளவு குறைக்க வேண்டும்

இவை சிலதான்
ரொம்ப எளிதுதான் இதுல ஏதாவது ஒன்ற நாம கடை பிடிக்காம இருந்திருப்போம் அதை கடைபிடிக்க முயற்சி செய்து பார்க்கலாம் அல்லவா?
-சேதுராமன் இராமலிங்கம் ,ஜெயங்கொண்டம் .

டோடோ அழிந்து போனதற்கு காரணம்

டோடோ என்ற பறவை கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு அபூர்வப் பறவை. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவில் வாழ்ந்து வந்தது. இதற்கு இறக்கைகள் கிடையாது ,தரையில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. ஒரு மீட்டர் உயரம் உடையது .இது மெதுவாகத்தான் நடந்து செல்லும் .இதற்கு என்று உணவுவலை மேலாளர் (இதை உண்ணக்கூடிய விலங்கு) இல்லை ...அதனால் இது சுதந்திரமாக தன் இனத்தை ஒருமுறைக்கு ஒரே ஒரு முட்டை மட்டுமே இட்டு பெருக்கி வாழ்ந்து வந்தது ....ஆனால் அத்தீவில் வெளியூர்காரர்கள் காலூன்றிய போது நாய்...பூனை போன்றவை உடன் வந்ததால் அவை டோடோவை உண்ணத் தொடங்கின ,மனிதனும் தன் பங்கிற்கு உண்டான் .....
டோடோ அழிந்து போனதற்கு காரணம் இயற்கை அத்தீவில் இல்லாமல் செய்திருந்த நாய்...பூனை போன்றவை அங்கே வந்ததுதான் காரணம் .....
-சேதுராமன் இராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.

உலக நாடுகளிடம் வெப்பமாதல் குறித்த செய்தி

  முகமது நசீது என்ற மாலத்தீவுகளின் முன்னாள் அதிபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதை (கைது செய்தது அவர்களது உள்நாட்டு விவகாரம்...,ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் நசீத் என்பது குறிப்பிடத்தக்கது.) பத்திரிக்கைகளில் படிக்க நேர்ந்த போது அவர் 2009-ஆம் ஆண்டு தனது அமைச்சரவை சகாக்களுடன் கடலுக்கடியில் சைகைகளின் மூலமும், வெண்ணிற அட்டைகளின் மூலமும் சுமார் அரை மணி நேரம் கூட்டம் நடத்தி உலகின் கார்பன் வெளிப்பாட்டினை குறைக்க முயற்சி எடுத்தவர்...என்ற நினைவு எனக்கு ஏற்பட்டது .
இதற்கு காரணம் கடல் மட்டத்தை விட ஏழு அடி உயரம் மட்டுமே அவர்களது நிலமட்டம் (வாழ்க்கை.....)
நமக்கெல்லாம் இது சாதாரண செய்திதான்....ஆனால் அவர்களுக்கு உலக நாடுகளிடம் வெப்பமாதல் குறித்த செய்தியை எப்படியாவது உணர்த்த வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே....அந்த கூட்டம்...
அப்போது எனக்கு இது ஒரு விளம்பரத்திற்காக என்று கூட எண்ணினேன் ஆனால் இப்போது ஏற்படும் பருவநிலை மாற்றம்...அவர்களைப் போன்றவர்கள் நிலை...... உண்மையில் பரிதாபம் தான் ......
பரிதாபப்பட இப்போது நாம் உள்ளோம்....
-சேதுராமன் இராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.