Translate

ஞாயிறு, மே 06, 2012

Thousands of Japanese marched to celebrate

Japan nuclear power-free as last reactor shuts
Thousands of Japanese marched to celebrate the switching off of the last of their nation's 50 nuclear reactors on Saturday.

TOKYO: Thousands of Japanese marched to celebrate the switching off of the last of their nation's 50 nuclear reactors on Saturday, waving banners shaped as giant fish that have become a potent anti-nuclear symbol.
Japan will be without electricity from nuclear power for the first time in four decades when the reactor at Tomari nuclear plant on the northern island of Hokkaido goes offline for routine maintenance.
After last year's March 11 quake and tsunami set off meltdowns at the Fukushima Dai-ichi plant, no reactor halted for checkups has been restarted amid public worries about the safety of nuclear technology.
"Today is a historical day," Masashi Ishikawa shouted to a crowd gathered at a Tokyo park, some holding traditional "koinobori" carp-shaped banners for Children's Day that have become a symbol of the anti-nuclear movement.
"There are so many nuclear plants, but not a single one will be up and running today, and that's because of our efforts," Ishikawa said.
The activists said it is fitting that the day Japan is stopping nuclear power coincides with Children's Day because of their concerns about protecting children from radiation, which Fukushima Dai-ichi is still spewing into the air and water.
The government has been eager to restart nuclear reactors, warning about blackouts and rising carbon emissions as Japan is forced to turn to oil and gas for energy.
Japan now requires reactors to pass new tests to withstand quakes and tsunami and to gain local residents' approval before restarting.
The response from people living near nuclear plants has been mixed, with some wanting them back in operation because of jobs, subsidies and other benefits to the local economy.
Major protests, like the one Saturday, have been generally limited to urban areas like Tokyo, which had received electricity from faraway nuclear plants, including Fukushima Dai-ichi.
Before the nuclear crisis, Japan relied on nuclear power for a third of its electricity.
The crowd at the anti-nuclear rally, estimated at 5,500 by organizers, shrugged off government warnings about a power shortage. If anything, they said, with the reactors going offline one by one, it was clear the nation didn't really need nuclear power.
Whether Japan will suffer a sharp power crunch is still unclear.
Electricity shortages are expected only at peak periods, such as the middle of the day in hot weather, and critics of nuclear power say proponents are exaggerating the consequences to win public approval to restart reactors.
Hokkaido Electric Power Co. spokesman Kohei Ofusa said Saturday's shutdown was proceeding as planned. Power generation was gradually being reduced, with all operations expected to end at 11 p.m. (1400 GMT), he said.
Yoko Kataoka, a retired baker who was dancing to the music at the rally waving a small paper Koinobori, said she was happy the reactor was being turned off.
"Let's leave an Earth where our children and grandchildren can all play without worries," she said, wearing a shirt that had, "No thank you, nukes," handwritten on the back.
                                                                             Courtesy Times of India.

GLOBAL WARMING STARTING IT"S DUTY

பனி ஏரி உடைந்து 10 பேர் சாவு; 60 பேரை காணவில்லை

            காத்மாண்டு, மே 5: நேபாளத்தின் வட மேற்குப் பகுதியில், இமயமலையின் உயரமான பகுதியில் அமைந்துள்ள பனி ஏரி உடைந்தது. இதனால் அப்பகுதியில் பாயும் சேடி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் நிகழ்வால் பொகாடா பகுதியில் உள்ள வீடுகள், பண்ணைகள், கால்நடைகள் ஆகியன வெள்ளத்தில் மூழ்கின. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 60 பேரைக் காணவில்லை.தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கஸ்கி மாவட்டத்தில் இந்த நதி பாய்கிறது. இதில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், மசாபுசாரே மலைமுகடில் அமைந்துள்ள சர்திகோலா கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது.ராணுவத்தினரும், காவல்துறையும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்படுகின்றன. நதிக்கரையிலிருந்து இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நதியில் நீர்மட்டம் மிகவும் உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.இந்த வெள்ளப்பெருக்கில் 60 பேர் காணாமல் போயுள்ளனர். அதில் ரஷியாவைச் சேர்ந்த 3 சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். நதிக்கரையோரம் நின்றிருந்த லாரிகளையும், பஸ்களையும் வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. அன்னப்பூர்ணா சிகரத்தின் கீழ் அமைந்துள்ள காராபானி கிராமமும் இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டது. இங்குள்ள இரண்டு பெரிய கட்டடங்களும், பல குடில்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.எந்தத் தாமதமுமின்றி மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பாபுராம் பட்டாராய் உத்தரவிட்டுள்ளார். வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடத்தில் அன்னப்பூர்ணா, தவளகிரி, நீலகிரி ஆகிய சிகரங்கள் உள்ளன. இவற்றின் உயரம் 8000 ஆயிரம் மீட்டருக்கும் அதிகம் என்பதால் சாகச சுற்றுலாப் பயணம் செய்வோரை இப்பகுதி கவர்ந்திழுக்கிறது. சாகச சுற்றுலாவுக்கான சீசன் இன்னும் தொடங்கவில்லை என்பதால் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாகவே உள்ளது.

சனி, மே 05, 2012

Minimum Balance is not must for S.B.A/C FOR S.B.I. Branches

                    ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது கிளைகளில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பாலன்ஸ்) விதிமுறையை கைவிடுமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கித் துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வீட்டு கடனை முன்கூட்டி திருப்பி செலுத்தினால் அபராத வட்டி கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக, 0 பாலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்குகளை தொடங்க அனைவரையும் அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக, நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது கிளைகளுக்கு ஏப்ரல் 25ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி எல்லா வகையான சேமிப்பு கணக்குகளிலும் மினிமம் பாலன்ஸ் விதியை நீக்கி விடுமாறு கூறியுள்ளது. இதை உடனடியாக அமல்படுத்தவும், ஏப்ரல் 25ம் தேதிக்கு பிறகு மினிமம் பாலன்ஸ் குறைந்ததாக யாருக்காவது பணம் பிடித்திருந்தால் அதை  மீண்டும் அவர்களது கணக்கில் வரவு வைக்கவும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கடிதங்கள் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் எஸ்பிஐ தலைமை அலுவலகம் அனுப்பியுள்ளது. மேலும், இனி சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பாலன்ஸ் விதிமுறை கிடையாது என்று வாடிக்கையாளர்கள் எளிதில் பார்க்கும் வகையில் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்யவும் எஸ்பிஐ வலியுறுத்தியுள்ளது.

குக்கர் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்



நவீன சமையல் உபகரணங்கள் வேலைப்பளுவை குறைக்க உதவினாலும், அவற்றால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதுண்டு. வாழ்க்கை முறை சார்ந்த பிரச்னைகளை அவை தரும் என புகழ்பெற்ற மருத்துவர்களே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘குக்கரில் சமைக்கப்படும் சாதத்தை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்’ என்கிற தகவல் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

‘‘லைஃப்ஸ்டைல் காரணமாக சமையலிலும் பெரும் மாற்றங்கள். ஆபீசுக்குப் போகிற அவசரத்தில் சீக்கிரம் எப்படி சமையலை முடிப்பது என கவலைப்படும் பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்கள் பெரும் வரம் என்பதை மறுக்கமுடியாது. சமையலை எளிதாகவும் விரைவாகவும் செய்ய ஏராளமான பொருட்கள் வந்துவிட்டன. அதன் மூலம் செய்யப்படும் உணவுப்பொருட்களே பல நோய்களுக்குக் காரணமாகிறது’’ என்கிறார் லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட்டைச் சேர்ந்த வயது நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா.

‘‘குக்கரில் சாப்பாடு செய்வது எளிதானதுதான். ஆனால், அதனால் உடல் பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவிகிதம் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) குறைந்து விடும். ரத்த சர்க்கரை அளவை உடனடியாகவும் அது கூட்டாது. ஆனால், குக்கரில் சமைக்கும்போது அந்தச் சத்துகள் அப்படியே சாப்பாட்டில் முழுமையாக இருக்கும்.

குக்கரில் வேக வைக்கப்படுகிற அரிசியில் கஞ்சி (மாவுச்சத்து) நீக்கப்படுவதில்லை. அதனால் கலோரி, குளுக்கோஸ் அளவு அதிகம். திடீரென ரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் இருக்கிறது. நார்ச்சத்து நிறைந்த, கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.

அரிசி வேக எவ்வளவு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதோ, அந்த அளவுக்கு அது சாப்பிட நல்லது. குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் பிரச்னைதான். அதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். வேகமாக தயாரான சாப்பாட்டை 2 மடங்கு எடுத்துக்கொண்டால்தான் வயிறு நிரம்பும். இப்படி வயிற்றுக்குள் உணவைத் திணிக்கத் திணிக்க பிரச்னைகளும் அதிகமாகும்.   எண்ணெய் வகைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தக்காலத்தில் செக்கில் ஆட்டிய எண்ணெயில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிரம்பியிருக்கும். அது ஜீரணத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்ததாக இருந்தது. இப்போது அல்ட்ரா ரீஃபைண்ட் ஆயில், டபுள் சூப்பர் ரீஃபைண்ட் ஆயில் என நிறைய வந்து விட்டது. அதிகமாக ரீஃபைண்ட் செய்வதால் வைட்டமின் சத்துகள் குறைந்து விடும்.   சூடாக்கிய எண்ணெயையும் திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடாது. அந்த எண்ணெயால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் ஆபத்து இருக்கிறது. இதனால் வயிற்றுப் புற்றுநோய் வரும் அபாயமும் உண்டு.

பருமனும் ஏற்படலாம். முடிந்தவரை இவற்றையெல்லாம் தவிர்த்தல் நல்லது’’ என்கிறார் டாக்டர் கௌசல்யா. ‘‘நாம் பயன்படுத்தும் அரிசியும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணம். 30 வருடங்களுக்கு முன் இருந்த கைக்குத்தல் அரிசி இப்போது இல்லை. இப்போது பாலீஷ்ட் ரைஸ், பாஸ்மதி ரைஸ், டபுள் ரீஃபைண்ட் ரைஸ் என எத்தனையோ வகை அரிசிகள். அரிசியை அதிகம் பாலீஷ் செய்து வெண்மையாக்குவது நல்லதல்ல. அப்படிப்பட்ட அரிசியில் நார்ச்சத்து குறைந்து, கலோரி அதிகமாகி, பருமனை அதிகமாக்கி சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும்.

நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் பாதி ‘டீத் ப்ரௌன் க்ரோத்தன் ஃபுட்’. அதுல 60 சதவீதம் நியூட்ரிஷன் சத்துகள் இருக்காது. வெறும் டேஸ்ட் மட்டும்தான் இருக்கும். இந்தப் பொருட்களால் பருமன், இன்சுலின், ஹார்மோன், வயிற்றுப் பிரச்னைகள், முடி கொட்டுதல் என பல பிரச்னைகள் ஏற்படும்.  ஒரு நாளைக்கு 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் பயன்படுத்துவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது.

இப்போது உள்ள எண்ணெய்களில் கெமிக்கல் மாற்றம் ஏற்பட்டு, அவை இதய நோய்களை ஏற்படுத்தி விடுகின்றன. முன்பெல்லாம் செக்கில் ஆட்டிய எண்ணெய் ஒரு ஸ்பூன் பயன்படுத்தினால் போதும். இப்போதுள்ள எண்ணெய் பத்து ஸ்பூன்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இது கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி தேவையில்லாத நோய்கள் வர காரணமாகி விடுகிறது.   ஆக, ஈஸி என்று நினைப்பதே நமக்கு பாதகமாகி விடுகிறது. சமையலில் சில வகைகளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படையான சிலவற்றை அவசியம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்’’ என்கிறார் நாளமில்லாச் சுரப்பி நிபுணர் ஜெயஸ்ரீ கோபால். 
                                                                            Courtesy-Dinakaran.

வெள்ளி, மே 04, 2012

Tri-Semester Syllabus for the standards 1 to 8

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் இருந்து முப்பருவ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பாடத்திட்டத்தின் கீழ் ஒரு பருவத் தேர்வுக்கு அதாவது காலாண்டு வரை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு புத்தகத்திலேயே 5 பாடங்கள் அமைந்திருக்கும். அரையாண்டுத் தேர்வுக்கு இரண்டாவது பருவப் புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அது முடிந்ததும் 3வது பருவப் பாடப்புத்தகத்தை எடுத்துச் சென்று படிக்க வேண்டும்.
பாடச் சுமையும், பாடப்புத்தகங்களின் சுமையும் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ள முப்பருவப் பாடத்திட்டத்தின் சாராம்சம் குறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.1 முதல் 8ம் வகுப்பு வரையிலான முப்பருவப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடங்கள் குறித்து அறிந்து கொள்ள இங்கே கிளிக்செய்யவும்.

வியாழன், மே 03, 2012

அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி

info.kalvisolai.com: அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இராமம்பாளையம் , காரமடை ஒன்றியம் மேட்டுப்பாளையம் வட்டம் , கோயம்புத்தூர்   மாவட்டம் . பள்ளி பற்றிய ...

புதன், மே 02, 2012

UGC EXTENDEDUPTO MAY FOURTH FOR EXAM

யூ.ஜி.சி நடத்தும் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதி தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 4 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

02-05-2012 அன்று வெளியிட்டது
கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவுசெய்வதில் பட்டதாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைக் குறித்து யூ.ஜி.சி.யின் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புதிய தலைமுறை விளக்கம் கேட்டது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்க முற்படுவதால் இணையதளத்தில் நெரிசல் ஏற்படுவதாக யூ.ஜி.சி விளக்கம் அளித்தது. இந்தப் பிரச்னை காரணமாக விண்ணப்ப தேதியை மே நான்கு வரை நீட்டிப்பதாகவும் யூ.ஜி.சி தெரிவித்தது. மே இரண்டாம் தேதிக்குள் வங்கி வரைவோலை எடுத்தவர்கள், ஆஃப்லைன் முறையில் விண்ணப்ப படிவத்தை எடுத்து, பின்னர் அதனைப் பூர்த்தி செய்து அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தேர்வு மையத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் யூ.ஜி.சி தெரிவித்தது. விரிவுரையாளர் தகுதித் தேர்வை எழுத இதுவரை கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த தேர்வில் முதல் முறையாக பதிலை தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

பி.எஸ்.சி. கணிதம் ஓராண்டு (இரட்டைப்பட்டம்) முறையில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியர் கணிதம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஒ.மு.எண். 14436 / சி 3 / இ 1 / 2012, நாள். 24.03.2012 * *10+2+3+1 கல்வித் தகுதியுடன் கூடுதலாக பி.எஸ்.சி. கணிதம் ஓராண்டு (இரட்டைப்பட்டம்) முறையில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியர் கணிதம் பதவி உயர்விற்கு விதிகளின் படி பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. * *தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஒ.மு.எண். 14436 / சி 3 / இ 1 / 2012,

புதன், ஏப்ரல் 18, 2012

AGNI TEST PRESTIGIOUS

அக்னி ஏவுகணை சோதனை: திருச்சிக்கு வரும் விமானத்தின் ‌நேரம் மாற்றம்


திருச்சி, ஏப்.18: அக்னி 5 ஏவுகணை சோதனை‌யை முன்னிட்டு வங்க கடல் வான் வழியாக திருச்சிக்கு வரும் விமானங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இருந்து காலை 9 மணிக்கு திருச்சி வர வேண்டிய ஏர் ஏசியா விமானம் பகல் 1.30 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.