Translate

ஞாயிறு, ஜூன் 10, 2012

நேரத்தை நிர்வகித்து செயல்படுங்கள்

       காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.
     இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? என்பதற்கான டிப்ஸ் பற்றி கீழே காணலாம்.
    * ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான் என்ற கால அளவு மாறப் போவதில்லை. அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
    *உங்களுடைய பயனுள்ள நேரம் எங்கு வீணாக செலவிடப்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக சிலர் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவார்கள் அல்லது இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பார்கள் அல்லது டிவி பார்ப்பதில் நேரத்தை செலவிடுவார்கள். இவற்றில் எவ்வகையில் உங்களுடைய நேரம் வீணாகசெலவிடப்படுகிறது என்பதை அறிந்து தவிர்த்து விடுங்கள்.
   *நீங்கள் சரியான கால அளவை பின்பற்றுவதை, இலக்காக வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது நடத்தையில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, நான் காலை 10 மணிக்கு இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என உங்களது நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் மட்டும் போடாமல், அதை செயல்படுத்த முனையுங்கள்.
   *தினமும் எழும் நேரம் மற்றும் உறங்கும் நேரம் உள்ளிடவற்றை சரியான முறையில் வகைப்படுத்தி கொள்ளுங்கள்.
    *மற்றர்வர்கள் கிண்டல் செய்வார்களோ என அஞ்சி, உங்களது கால அளவை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களது வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்யுங்கள்.
   *இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்.

பல மணிநேரம் எப்படி படிப்பது?

           ஒரு மாணவர் ஒரு நாளில் 4 மணி நேரங்கள் படிக்கலாம் என்று நினைப்பார். ஆனால் அவரால் தொடர்ச்சியாக 4 மணி நேரம் அமர்ந்து படிக்க முடியுமா? பொதுவாக,பலராலும் இது இயலாத காரியம். ஒரு தட்டில் இருக்கும் சோறு முழுவதையும் நாம் உண்டு முடிக்க வேண்டும் என்ற நிலையில், அந்த சோறு முழுவதையும் நாம் அப்படியே வாயில் கொட்டிக் கொள்வதில்லை. அது முடியாத காரியமும்கூட.
           எனவே நாம் சிறிது சிறிதாக எடுத்து உண்கிறோம். முடிவில், முழு சோறும் காலியாகிறது. இதுபோலத்தான் படிப்பும். 4 மணிநேரம் படிக்க வேண்டும் என்று இருக்கையில், நாம் ஒரேடியாக அமர்ந்து தொடர்ந்து படித்தால் நாம் ஒருவழியாகி விடுவோம். மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டுமே சோர்ந்துவிடும். படித்த விஷயங்களும் நினைவில் பதியாமல் போகலாம். எனவே அந்த 4 மணி நேரத்தை சில அல்லது பல பகுதிகளாக பிரித்து, அதற்கேற்ப உட்கார்ந்து படிக்க வேண்டும்.
         அந்த மொத்த நேரமான 4 மணி நேரத்தை குறைந்தபட்சம் 30 நிமிடத்திலிருந்து அதிகபட்சம் 40 நிமிடங்கள் வரை பிரித்துக்கொள்ளலாம். அப்போது உங்களது மூளையும் நன்கு சுறுசுறுப்புடன் ஒத்துழைக்கும். அத்தகைய இடைவெளிகளுக்கு மத்தியில், சில எளிமையான பயிற்சிகள் செய்து, உடலையும், மனதையும் ரிலாக்சாக மாற்றலாம். உங்களின் கைகள், விரல்கள், கழுத்து மற்றும் தோள்பட்டைகள் போன்ற உறுப்புகளுக்கு சில எளிமையான பயிற்சிகளை தரலாம்.
        மேலும் சிறிதுநேரம் கண்களை மூடி அமரலாம். சில சமயங்களில் லேசான மூச்சுப் பயிற்சியும் செய்யலாம். இடைவெளி சமயங்களில் நீர் அருந்தலாம். ஏதேனும் ஜூஸ் அல்லது தேநீர் கூட அருந்தலாம். ஒரே பாடத்தை படிக்காமல், பாடங்களை மாற்றி மாற்றி படிக்கலாம். அதேசமயம், இடைவேளையின்போது, டி.வி. பார்த்தல், விளையாடுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடக் கூடாது.
        அத்தகைய நடவடிக்கைகள் படிப்பை பாதித்துவிடும். தேவைப்பட்டால், இடைவெளி நேரங்களில் முகத்தினை கழுவலாம். இதுபோன்ற செயல்முறையில் நீங்கள் ஈடுபடும்போது, உங்களின் மனமும், உடலும் சுறுசுறுப்பாகி 4 மணிநேரம் என்பது, 5 அல்லது 6 மணிநேரமாகவும் அதிகரிக்கலாம்.

FREE IS NOT FREE

பழநி: அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய "குரூப் -2' தேர்வில், ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தை சேர்ந்த 400 பேர் வெற்றி பெற்று உள்ளனர். ஜூலையில் நடந்த தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. இதில், 6695 பணியிடங்களுக்கு 6949 பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ""ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தை சேர்ந்த 2000 பேரில் 400 பேர் வெற்றி பெற்றுள்ளனர்,'' என, மைய இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை-09-06-2012

சென்னை: குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாத அரசு பள்ளிகள் பற்றிய விவரங்களை வரும் 15ம் தேதிக்குள் மாவட்ட அதிகாரிகள் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த நடவடிக்கைகளை, 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை அவசியம் இருக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, இத்தகைய வசதிகள், அரசுப் பள்ளிகளில் இருக்கிறதா என்பதை, நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.
இந்த வசதிகள் இல்லாத, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இருந்தால், அதைப் பற்றிய விவரங்களை, 15ம் தேதிக்குள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, சம்பந்தபட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு கருத்துருக்கள் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், சிறப்புத் திட்டத்தின் கீழ், ஒரு கழிப்பறைக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், மே 08, 2012

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்-08-05-2012

                    சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 11ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் முதல் வாரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

ஏப்ரல் 4 முதல், 23ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள், கடந்த 26ம் தேதியில் இருந்து, 66 மையங்களில் நடந்து வருகின்றன. 40 ஆயிரம் ஆசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 11ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வழக்கமாக மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும். ஆனால், இம்முறை பிளஸ் 2 தேர்வு முடிவுகளே தள்ளிப் போயிருப்பதால், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் 20 நாட்கள் வரை தள்ளிப்போகின்றன.
இந்த ஆண்டு, ஜூன் முதல் வாரத்தில் தான் முடிவுகள் வெளியாகும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் முதல் தேதியன்றே பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிளஸ் 1 சேர்க்கை மட்டும் தாமதமாகவே நடைபெற உள்ளன.
                                                                                      ---Dinamalar

சாதி, வருமான, இருப்பிட சான்றுகளை 6ம் வகுப்பிலேயே பெறலாம்!-08-05-2012

 
          சென்னை: எதிர்கால சிரமங்களைத் தவிர்க்க, 6ம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சட்டசபையில் முதல்வர் தெரிவித்ததாவது: பள்ளி மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கும், பல்வேறு வகையான உதவித் தொகைகளைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கும், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் போன்றவை தேவைப்படுகின்றன.
இத்தகைய சான்றிதழ்களை தேவையான நேரத்தில் பெறுகையில், மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, அவர்களின் 6ம் வகுப்பிலேயே, இத்தகைய சான்றிதழ்களை பெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதன்மூலம், மாணவர்கள் அந்த ஆண்டிலேயே மேற்கூறிய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய திட்டத்தின் மூலம், 6ம் வகுப்பில் படிக்கும் சுமார் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
                                                                               - Dinamalar

திங்கள், மே 07, 2012

4G-Launched AIRTEL

Bharti Airtel launches 4G services in Bangalore
Bharti Airtel has launched broadband wireless access (BWA) services based on 4G technology in Bangalore followed by the recent inaugural launch of the services in Kolkata.

                 NEW DELHI: Bharti Airtel has launched broadband wireless access (BWA) services based on 4G technology in Bangalore followed by the recent inaugural launch of the services in Kolkata.
Airtel has also introduced 'Smartbytes' for 4G -- thus allowing customers to buy these add-on packs and use 4G services even after exhausting their monthly data limits.
"As seen the world over, the total data usage is exploding and is doubling each year to grow to nearly 3.6 hexabytes by 2014. With the launch of 4G, India will move from being a follower in technology to matching the world in this domain," said Sanjay Kapoor, chief executive officer (CEO) - India and South Asia, Bharti Airtel.
The service was inaugurated by Karnataka Chief Minister DV Sadananda Gowda.
A successor to the 3G and 2G families, 4G is expected to be five times quicker than 3G services. It would offer services such as high-definition mobile TV and video conferencing.
Airtel, which had bagged BWA spectrum in four telecom circles -- Kolkata, Maharastra, Punjab and Karnataka -- for Rs.3,314.36 crore in 2010, selected Chinese telecom equipment maker ZTE to manage its services in Kolkata.
The other players are yet to announce plans to rollout 4G services.
As part of an introductory offer by Airtel, customers subscribing to 4G services will now be given a cash back for the dongle -- thus bringing device-cost to customers zero and paving way for mass adoption of 4G services.
Airtel 4G is now also available in an all new 30 GB pack priced at Rs 2,999.

                                                                                                          -Times Of India

"survival-of-the-fittest "

         Darwinian "survival-of-the-fittest " laws continue to shape human evolution in the modern age, research led by the University of Sheffield has confirmed.

        A popular misconception is that humans stopped evolving when they took up farming and embraced monogamy. But evidence from detailed church records of almost 6,000 Finns born between 1760 and 1849 suggests this is not so.

       Researchers analysed data on economic status, births, deaths and marriages to examine four key natural selection factors: survival to adulthood, mate access, mating success, and fertility.

       They found that the Finns' natural selection opportunities were on a par with those seen in the wild. Differences in early survival and fertility were responsible for most of the variation in fitness, even among wealthy individuals. Strict adherence to monogamy did not limit the potential for natural selection.

    Dr Virpi Lummaa, from the University of Sheffield's department of animal and plant sciences, said: "We have shown advances have not challenged the fact that our species is still evolving, just like all the other species 'in the wild' . It is a common misunderstanding that evolution took place a long time ago, and that to understand ourselves we must look back to the hunter-gatherer days of humans ."

                                                                -Times of India

14-Thousands TET APPLICATIONS NOT FILLED IN PROPERLY

14 ஆயிரம் மனுக்களில் பெயர்களே இல்லை: தேர்வு வாரியம் அதிர்ச்சி-07-05-2012


         சென்னை: டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்த 6.50 லட்சம் பேரில், 14 ஆயிரம் பேர், விண்ணப்பங்களில் தங்களது பெயர்களைக் கூட பூர்த்தி செய்யாமல் கோட்டை விட்டுள்ளனர்.
          மேலும், 28 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்திருப்பதைக் கண்டு, ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விண்ணப்பங்களைக் கூட ஒழுங்காக பூர்த்தி செய்யாதவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக வந்து என்ன செய்யப் போகிறார்களோ என, ஆசிரியர் தேர்வு வாரியம் கவலை அடைந்துள்ளது.
ஜூன் 3ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்காக 7.50 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதில், 6.50 லட்சம் விண்ணப்பங்கள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை, "ஸ்கேன்&' செய்யும் பணிகள், சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தன.
டி.ஆர்.பி., அதிர்ச்சி: விண்ணப்பங்கள், "ஸ்கேன்' செய்யப்பட்டு, பரிசீலனை செய்த ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆசிரியர்களாக இருப்பவர்களிலும், ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்களிலும், பல ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதது தான், அலுவலர்களின் அதிர்ச்சிக்கு காரணம். குறிப்பாக, ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்கள் தான், அதிகளவில் தவறுகள் செய்துள்ளனர்.
      14 ஆயிரம் பேர்... : மொத்த விண்ணப்பதாரர்களில், 14 ஆயிரம் பேர், மிகவும் முக்கியமான தங்களது பெயர்களையே பூர்த்தி செய்யவில்லை. மேலும், 28 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்திருப்பதாகவும், தேர்வு வாரியம் கண்டுபிடித்துள்ளது. பல ஆயிரம் பேர், முக்கிய பாடத்தை தவறாக குறிப்பிட்டுள்ளனர். இதேபோல், பல்வேறு தவறுகளை செய்திருக்கின்றனர்.
      நிராகரிப்பு இல்லை: விண்ணப்பத்தில் முக்கியமான தவறுகள் இருந்தால், விதிமுறைப்படி அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டும். இப்படி, பல தேர்வுகளில் தவறான விண்ணப்பங்கள் நிராகரிக்கவும் செய்யப்படுகின்றன. ஆனால், டி.இ.டி., தேர்வைப் பொறுத்தவரை, தவறான விண்ணப்பங்களை நிராகரிக்காமல், அந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது என, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பக்கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்திய நிலையில், விண்ணப்பங்களை நிராகரித்தால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைவர். முக்கியமாக, இதோடு அடுத்த ஆண்டுதான் டி.இ.டி., தேர்வு நடைபெறும். எனவே, ஒரு ஆண்டு வீணாகும்.
குறிப்பாக, கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்த தேதிக்குப் பின் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவரும், ஐந்து ஆண்டுகளுக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், தவறான விண்ணப்பங்களை நிராகரித்தால், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு ஒரு ஆண்டு வீணாக நேரிடும். இதை மனதில் கொண்டு தான், தவறான விண்ணப்பங்களையும் ஏற்பது என, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு எடுத்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
     தேர்வு தள்ளி வைப்பா?: டி.இ.டி., தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்றும் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாடப்புத்தகங்கள் தற்போது தான் கிடைத்து வருகின்றன. பி.எட்., தேர்வுகள் ஒரு பக்கம், மறுபக்கம் டி.இ.டி., தேர்வுகள் என்பதால், தேர்வர்கள் தவித்து வருகின்றனர். ஆனால், டி.இ.டி., தேர்வுக்கான ஏற்பாடுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முழுவீச்சில் நடந்து வருகின்றன. எனவே, தேர்வு தள்ளி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிகிறது.

பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை-07-05-2012 

             சென்னை: "பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய
வேண்டும்' என, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில், கட்டாயக்கல்விச் சட்டம் குறித்த கருத்தரங்கு மற்றும் மாநாடு ஆகியவை, சென்னையில் நேற்று நடந்தன. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, 1,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பல்வேறு ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.