Translate

ஞாயிறு, ஜூன் 10, 2012

குழந்தைத் தொழிலாளர்

குழந்தைத் தொழிலாளர்



குழந்தைத் தொழிலாளருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பொதுவான முதல் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் அனைத்தும் 19ம் நு£ற்றாண்டின் முதல் பாதியில் பிரிட்டனில் அமல்படுத்தப்பட்டது.ஒன்பது வயதுக்குட்பட்பட்ட குழந்தைகள் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஒருநாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
        குழந்தைத் தொழிலாளர் (child labour) என்பது தொடர்ந்து, நீடித்தப் பணியில் குழந்தைகள் தொழிலாளர்களாக ஈடுபடுவதைக் குறிக்கிறது. எல்லா நாடுகளிலும் சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரிய சர்வதேச நிறுவனங்களில் கூட இக்கொடுமை நடைபெறுகிறது. கஹதோதக் குழந்தைத் தொழிலாளர் பணியமர்த்தப்படுவது வரலாற்றுக் காலத்தில் கூறப்பட்டாலும், உலகளாவிய கல்வி முறை, தொழில்துறையில் ஏற்பட்ட வேலை மாற்றம், வேலையாளர்களுக்கும், குழந்தைகளின் உரிமைகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துக்களால் குழந்தைத் தொழிலாளர் முறை தற்போது உலகெங்கும் பரவியுள்ளது.
              வளர்ச்சியடைந்த பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளரின் வயது மாறுபட்டதாக உள்ளது. பள்ளி வேலை மற்றும் வீட்டு வேலை தவிர பிற வேலைகளுக்கு குழந்தைகள் பணியமர்த்தக்கூடாதென வளர்ச்சியடைந்த நாடுகள் கூறுகின்றன.[1] குறிப்பிட்ட வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கண்டிப்பாக பணியமர்த்தக்கூடாது. இந்த குழந்தைத் தொழிலாளர் வயது வித்தியாசமும் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, 16 வயது நிறைவு பெறுவதற்கு முன்பாக குழந்தைகளைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதுடன், பெற்றோரின் சம்மதமில்லாமல் வேலைக்கு அனுமதிக்கக்கூடாது என்பதாகும்.


 தற்போதைய நிலை

2006ம் ஆண்டில் வியட்நாம், ஹோ சி மின் நகரத்தில் கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்யும் இளஞ்சிறுவன்
குழந்தைத் தொழிலாளர் முறை உலகின் பல்வேறு பகுதிகளிலும், தொழிற்சாலை[2] மற்றும் சுரங்கங்களிலும் உள்ளது. பாலியல் தொழில், குவாரி, விவசாயம், பெற்றோரின் தொழிலில் உதவுதல் மற்றும் சிறிய வணிகத்தில் (உணவுப் பொருள் விற்பனை) குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். சில குழந்தைகள் சுற்றுலா வழிகாட்டியாகவும், ஓட்டல் மற்றும் கடைகளில் வெயிட்டர்களாகவும் வேலை செய்கின்றனர். சில குழந்தைகள் அட்டை தயாரித்தல், ஷூக்களை பாலீஷ் செய்தல், குடவுனில் பொருட்களை அடுக்குதல், சுத்தம் செய்தல் போன்ற கடினமான பணிகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். தொழிற்சாலை மற்றும் இனிப்புகடைகளில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் முறைப்படுத்தப்படாமல், மறைமுகமாக பணிக்கு உட்படுத்தப்படுகின்றனர். தெருக்களில் பொருட்களை விற்பனை செய்தல், விவசாயப் பணி செய்தல் போன்ற மறைமுகப் பணிகளில், தொழிலாளர் ஆய்வாளர்களின் கண்காணிப்பு இல்லாத இடங்களிலும், பத்திரிக்கைகளின் கண்களுக்கு எட்டாத வகையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். எந்த தட்பவெப்பநிலையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் குறைந்த சம்பளத்தில் குடும்பச் சூழ்நிலைக்காக பணிபுரிகின்றனர்.[3]
யுனிசெப்அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட, 158 மில்லியன் சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைத் தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.[4]ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புகள் குழந்தைத் தொழிலாளரின் உழைப்புச் சுரண்டலை கவனத்தில் கொண்டுள்ளது.[4][5] ஐ.நா., குழந்தைகள் உரிமை பாதுகாப்பின் உடன்படிக்கை 32வது விதியில் கூறப்பட்டுள்ளதாவது,
... அபாயகரமான தொழல்கள் அல்லது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் தொழில்கள், குழந்தைகளின் உடல், மனம், பழக்கவழக்கத்தில் அபாயம் தரும் தொழில்கள் மற்றும் சமூகமேம்பாட்டைத் தடுக்கும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுவதை மாநிலக் கட்சிகள் கண்டறிய வேண்டும். ஏற்கனவே உலகம் முழுவதிலும் 250 மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.[4]
         1990 ஆம் ஆண்டுகளில் சோமாலியா மற்றும் ஐக்கிய நாடுகளைத் தவிர உலகில் உள்ள பிற நாடுகள் அனைத்தும் குழந்தைகள் உரிமைக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. சோமாலியாவை வழிநடத்தும் அரசாங்கம் இல்லாததால், தாமதமாக 2002 ஆம் ஆண்டு சோமாலியா அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உறுதியான சர்வதேச  மொழிகளில் சட்ட விரோதமான குழந்தைத் தொழிலாளர் முறையை ஒத்த  விதியை சி.ஆர்.சி வழங்கியது. எப்படி இருந்தாலும் அந்த உடன்படிக்கை குழந்தைத் தொழிலாளர் விதி மீறலை உருவாக்கவில்லை. .
காம்பியாவில் டயரை (சக்கரம்) சரிசெய்யும் சிறுவன்
ஏழைக்குடும்பங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் வருமானத்தைச் சார்ந்துள்ளனர். சிலநேரங்களில் குடும்பத்திற்கான வருமானமே குழந்தையிடமிருந்து தான் என்ற நிலையில் உள்ளனர். தொழில்துறையில் இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால் மறைக்கப்பட்டு விடுகிறது. குழந்தைத் தொழிலாளர் விவசாயம் தொடர்பான பிற பணிகளிலும், நகர்ப்பகுதிகளில் வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையானது குழந்தைகளுக்கான குறுகிய கால வருமானம் மற்றும் நீண்ட கால பயன்கள் என்ற இரண்டு சவால்களை வலியுறுத்த வேண்டியுள்ளது. குறிப்பிட்ட வயது வரை வேலை பார்க்கக்கூடாது என்பதை சில இளையோர் உரிமை குழுக்கள் எதிர்க்கின்றன. அவர்களின் விருப்பங்கள் மறுக்கப்படுவதாகவும், மனித உரிமை மீறலாகவும், பணத்திற்காக வேலை செய்யவும் இளையோர்கள் விரும்புகின்றனர்.
            1999 ஆம் ஆண்டு உலகளவில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான ஓர் இயக்கம் உருவெடுத்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். 1998 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த இயக்கம் உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, அதிகளவு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் பங்கேற்க வைத்தது. ஜெனிவாவில் நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் அமைப்பு கருத்தரங்கில் இந்த இயக்கம் நிறைவுபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் குழந்தைத் தொழிலாளர் அமைப்பு உடன்படிக்கையை ஆதரித்தும், குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான அணுகுமுறையும் எதிர்த்தும் பேசினர். தொடர்ந்த ஆண்டில் இந்த உடன்படிக்கையானது ஜெனிவாவில் நடந்த குழந்தைத் தொழிலாளர் அமைப்பு கருத்தரங்கில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் அமைப்பு வரலாற்றில், இன்று 169 நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்டதற்கு உலகளவில் நடந்த விழிப்புணர்வே மிகப்பெரிய காரணமாகும்.
குழந்தைத் தொழிலாளர் பொருளாதாரம் என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதார மறுபார்வையில் கவுசிக் பாசு மற்றும் பாம் ஹோவாங் வான் ஆகியோர், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முக்கியக் காரணம் குடும்ப வறுமையே என்ற வாதத்தை முன்வைத்தனர். மேலும் குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டத்துக்கு எதிராக, முதலாளிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் முறையை தடைசெய்யும் போது பெரியோர்களுக்கு அதே வேலைக்கு அதிக சம்பளம் தரவேண்டியுள்ளது. இந்தியா மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. சிஏசிஎல் (CACL) மதிப்பீட்டின் படி இந்தியாவில் மட்டும் 70 முதல் 80 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய அளவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்தப்படுவதை தடைசெய்யும் சட்டம் இருந்தாலும், அவ்வப்போது சட்டம் புறக்கணிப்புக்குள்ளாகிறது ஹேன்ஸ், வால் மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் இனிப்பகங்களில் 11 வயது குழந்தைகள் கூட ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலை செய்கின்றனர்.
          ஆசியாவில் 61 சதவீதமும், ஆப்பிரிக்காவில் 32 சதவீதமும், லத்தீன் அமெரிக்காவில் ஏழு சதவீதமும், அமெரிக்காவில் ஒரு சதவீதமும், கனடா, ஐரோப்பா மற்றும் செழிப்பான நாடுகளிலும் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆசியாவில் நடைபெறும் வேலையில் 22 சதவீத வேலையானது, குழந்தைத் தொழிலாளர்களாலும், லத்தீன் அமெரிக்காவில் 17 சதவீத வேலை, குழந்தைத் தொழிலாளர்களாலும் செய்யப்படுகின்றன. குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை விகிதம் நாட்டுக்கு நாடும், நாடுகளுக்குள்ளேயும் நிறைய அளவில் வேறுபட்டு காணப்படுகின்றன.
குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க வேண்டுமானால் காவல்துறையினர், தொழிற்சாலைகளுக்கு அடிக்கடிச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

 தற்போதைய குழந்தைத் தொழிலாளர் சம்பவங்கள்

மொராக்கோவில் உள்ள அயிட் பென்ஹாடோவில் தறி வேலை செய்யும் இளஞ்சிறுமி (மே 2008)
      பி.பி.சி., சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. பி.பி.சி.யின் பனோரமா தொலைக்காட்சித் தொடரில் துணிகள் உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர் ஈடுபடுத்துவதை பிரைமார்க் குறும்படமாக வெளியிட்டுள்ளது. பி.பி.சி.யின் பனோரமா தொலைக்காட்சித் தொடரில் நான்கு டாலர் மதிப்புள்ள எம்பிராய்டரி சட்டையை மையமாக வைத்து குறும்படம் தயாரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர்கள் கேள்வி கேட்கின்றனர். கையினால் செய்யப்பட்ட எம்பிராய்டரி சட்டைக்கு நான் ஏன் நான்கு டாலர் பணம் தரவேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இது கையால் தயாரிக்கப்பட்டது என்பது பதில். இவ்வளவு குறைந்த விலைக்கு இதை தயாரித்தது யார் என்பது அடுத்த கேள்வி... எனத் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வன்முறையும், அதிகளவில் நடைபெறுவதையும் விளக்கியது. நிகழ்ச்சியின் முடிவில் தொடர்புடைய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்கு சப்ளை செய்யும் கம்பெனிக்கான விதிகள் மறுஆய்வு செய்யப்பட்டன.
          லிபேரியாவில் பயர்ஸ்டோன் டயர் அன்ட் ரப்பர் கம்பெனியின் ரப்பர் தோட்டத்துக்கு எதிராக உலகளவில் பிரச்சாரம் வெடித்தது. ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள், அதிகளவு உற்பத்தி செய்வதற்கு வற்புறுத்தப்பட்டனர். ஆனால் சம்பளம் மிகவும் பாதியாகப் பெற்றனர். இதனால் பல தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை பணிக்கு அழைத்து வந்தனர். சர்வதேச குழந்தைகள் உரிமை நிதியானது பயர்ஸ்டோன் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. நவம்பர் 2005 ஆம் ஆண்டு ரப்பர் தோட்டத்தில் வேலைபார்த்த தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்காக இந்த [[பயர்ஸ்டோன் டயர் மற்றும் ரப்பர் கம்பெனிக்கு எதிரான (வெர்சஸ்) சர்வதேச குழந்தைத் தொழிலாளர் நிதியம்|வழக்கு]] தொடரப்பட்டது. 2007 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி, நீதிபதி தனது தீர்ப்பில் பயர்ஸ்டோன் நிறுவனத்தின் இயக்கத்தை நிறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் குழந்தைத் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான வழக்கு பதிய அனுமதித்தார்.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனப் பிரதிநிதி ஜூன்னத் கான் என்பவர் காவல்துறை, தொழிலாளர் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகச் செயல்பட்டார். அதனால் டில்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் சோதனையிடப்பட்டன. டில்லி, சீலாம்பூரில் மக்கள் நெருக்கம் மிகுந்த சேரிப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட நூறு எம்பிராய்டரி தொழிற்சாலைகளில் இருந்து 480 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அடுத்த சில வாரங்களில் அரசு, பத்திரிக்கைத் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் தீவிரமாக கிளர்ந்தெழுந்தனர். 5 முதல் 6 வயதுடைய குழந்தைத் தொழிலாளர்களை அடிமை முறையிலிருந்து விடுவித்தனர். இந்த மிகப்பெரிய சோதனையானது மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை இருப்பதை, உலகத்தின் கண்களைத் திறக்கச் செய்தது.
எம்பிராய்டரி தொழிற்சாலையில் நடந்த மிகப்பெரிய சோதனையானது (2007 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி) சண்டே அப்சர்வர் பத்திரிக்கையில் வெளியிடப்படவில்லை. பி.பி.ஏ., இயக்கத்தினர் இதைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். காப் கிட்ஸ் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக காப் நிறுவனம் தனது அறிக்கையில் ஒத்துக்கொண்டது. குழந்தைத் தொழிலாளர் குறித்த இத்தனை பதிவுகள் இருந்தாலும், எல்லா கட்சிகளும் அக்கறை காட்டினாலும், எஸ்.டி.எம்., மட்டும், குழந்தைத் தொழிலாளர் அடிமைகளாக, பிணையமாக இருப்பதை கண்டுகொள்ளவில்லை. இந்த மோதல்களால் பிபிஏ நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான குளோபல் மார்ச் அமைப்புத் தலைவர் டில்லி உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதிக்கு இரவு 11 மணிக்கு தங்களது கடிதம் மூலம் முறையிட்டனர். http://www.globalmarch.org/gap/appeal_letter_KS.php குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு மேம்போக்காக செயல்பட்டது. மேலும் குழந்தை உரிமை அமைப்புகளின் மீது அரசு பழிவாங்கும் போக்கை கடைபிடித்தது.http://www.globalmarch.org/gap/High_Court_order.php
குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான குளோபல் மார்ச் அமைப்பும் பி.பி.ஏ., அமைப்பும் காப் இன்க் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களிடம் ஒப்பந்தம் செய்தன. இனிப்பகங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை தடுத்து நிறுத்தவும், புதிய வழிமுறைகளை ஏற்படுத்தவும் செயல்பாட்டை உருவாக்கின. இதன்படி காப் இன்க் நிறுவனத்தில் மூத்த துணைத்தலைவர் டான்ஹென்கே தனது அறிக்கையில், நாங்கள் தெளிவாக அறிக்கையை உருவாக்கி வருகிறோம். இந்த குழந்தைகள் தற்போது உள்ளூர் அரசாங்கத்தின் கண்காணிப்பில் உள்ளன. தற்போது குழந்தைகளுக்கு பள்ளியில் வேலைக்கான பயிற்சி அளித்து, அதற்கான சம்பளம் வழங்கப்படும். மேலும் அக்குழந்தைகள் முறையாக பணிபுரிவதற்கான வயதை அடையும் வரை இம்முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். நாங்கள் உள்ளூர் அரசாங்கத்துடனும், குளோபல் மார்ச்சுடனும் இணைந்து செயல்பட்டு, எங்களது விற்பனையாளரின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்றார். http://www.globalmarch.org/gap/letter_to_VP_GAP.php http://www.globalmarch.org/gap/gap_statement.php
அக்டோபர் 28 ஆம் தேதி, வடஅமெரிக்காவில் உள்ள காப் நிறுவனத்தின் தலைவர் மார்க்கா ஹான்சேன் கூறுகையில், நாங்கள் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்கிறோம். இது எங்களுக்கு பேரம் பேசும் விஷயமல்ல. நாங்கள் ஆழ்ந்த அக்கறை செலுத்துகிறோம். இக்குற்றத்திற்காக வருந்துகிறோம். நாங்கள் தவறிழைத்தவர்களாக நிரூபிக்கப்பட்டுள்ளோம். காப் நிறுவனம், தனது வரலாற்றில் இம்மாதிரியான சலால்களை சந்தித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் எங்களது அணுகுமுறையும் தவிர்க்க முடியாதது. 2006 ஆம் ஆண்டில் காப் நிறுவனம் 23 தொழிற்சாலைகளுடன் மூடப்பட்டது. எங்களது விற்பனையாளர்கள் 90 பேர் உற்பத்தியில் குறைபாடு இருப்பதாகவும் சொல்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் நாங்கள் எச்சரிக்கையுடன், வேலைக்கான ஆர்டரை நிறுத்தி விட்டு, குறைபாடுடைய பொருட்கள் விற்பனைக்குச் செல்வதற்கு முன்பாக நிறுத்திவிட்டோம். நாங்கள் எங்களது சப்ளையர்களுடன் உடனடி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து எங்களது கொள்கைகளை வலுவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
             ஆகஸ்டு 2008 ஆம் ஆண்டு அயோவா தொழிலாளர் ஆணையர் டேவிட் நெய்ல் ஒரு அறிவிப்பு செய்தார். எங்களது துறையானது விவசாயம் தொடர்பான துறையிலும், இறைச்சி பேக்கிங் செய்யும் நிறுவனத்திலும் இமிக்ரேஷன் மற்றும் கஸ்டம்ஸ் துறையினர் சோதனையிட்ட போது, 57 சிறுவர்கள் வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறைச்சி பேக்கிங் செய்யும் நிறுவனத்தில் விதிமுறைக்கு எதிராக 14 வயது சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. நெய்ல் தனது அறிவிப்பில் இந்த வழக்கை மாநில அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பினார். தனது துறை விசாரணையில், நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாத, அதிர்ச்சியான விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளன என்றார். குற்றச்சாட்டை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட நஷ்டம் தான் இது என்று விவசாயம் செய்பவர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள் வாதிட்டு தங்கள் உரிமைகளை கோரினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டுநெசவுத் தொழிற்சாலையில் அதிகளவில் 40,000 குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என கண்டறியப்பட்டது. குழந்தைத் தொழிலாளர்களை தறி உரிமையாளர்கள் அடிமைகளாக நடத்தினர். கிராமப்புற கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது ரைட் நிறுவனத்துடன் இணைந்து குழந்தைத் தொழிலாளர்களுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 2007 ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைத்துள்ளது.
குழந்தைத் தொழிலாளர்கள் சாக்லேட் செய்யப் பயன்படும் கோகோ பவுடர் தயாரிப்பில் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கோகோ பொருளாதாரத்தைக் காண்க

 குழந்தைத் தொழிலாளர்களை பாதுகாத்தல்

மைனேவில் உள்ள பண்ணையில் குழந்தைத் தொழிலாளர்கள் (அக்டோபர் 1940 ஆண்டு)
மக்களின் மனப்பாங்கு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் குழந்தைத் தொழிலாளர் குறித்த அக்கறை தற்போது அதிகரித்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த பொருட்களை வாங்குவதை புறக்கணித்தால் அது இன்னும் கூடுதல் விளைவை ஏற்படுத்தி விடும். ஏனென்றால் தற்போது பார்த்து வரும் சாதாரண வேலையை விட்டு, உடல், மன ரீதியாக வேதனை தரும் பாலியல் மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவில் குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு, வங்கதேசத்தில் உள்ள ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்த 50 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு அந்த குழந்தைகள் கல் வெட்டுதல், கடினமான பணி மற்றும் பாலியல் தொழிலுக்குச் சென்றனர். இந்த தொழில்கள் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையை விட மிக மிக அபாயகரமானது. இதை யுனிசெப்ஆய்வு செய்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்களைப் புறக்கணிப்பது என்பது அவர்களின் நீண்ட கால வாழ்வியல் முறைகளை சிதைக்கிறது என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
மில்டன் பிரைட்மான் கூற்றின் படி, தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பாக எல்லாக் குழந்தைகளுமே விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். தொழிற்புரட்சியின் போது பண்ணைத் தொழிலில் இருந்து தொழிற்சாலைக்கு இடம்பெயர்ந்தனர். கூடுதல் நேரத்துக்கான சம்பளம், மற்றும் சம்பள உயர்வால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவதற்கு பதிலாக பள்ளிக்கு அனுப்பினர். சட்டம் இயற்றுவதற்கு முன்பாகவும், பின்பாகவும், குழந்தைத் தொழிலாளர் முறை மெல்ல குறைந்தது.

            ஆஸ்திரேலியன் பள்ளி பொருளாதார நிபுணர் முர்ரே ரோத்பார்டு தனது அறிக்கையில், பிரிட்டீஸ் மற்றும் அமெரிக்க குழந்தைகள் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னும், பின்னும் வேலை கிடைக்காத போது எண்ணற்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் விருப்பப்பட்டு, மகிழ்ச்சியுடன் தொழிற்சாலை பணிகளுக்குச் சென்றனர்.
               எப்படியிருந்தாலும் பிரிட்டீஸ் வரலாற்று சமூக ஆர்வலர் இ.பி. தாம்சன், வீட்டு வேலை செய்யும் சிறுவர்களுக்கும், தொழிலாளர் சந்தையில் பங்கேற்கும் சிறுவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்கியுள்ளார். தொழிற்புரட்சி அனுபவத்தால் ஏற்பட்ட பயனால் தற்போதைய நடைமுறைகள் -குறித்தும் விவாதிக்கப்பட்டன.[15] மேற்கத்திய சமூகத்தில் குழந்தைகளின் நிலை பற்றி எழுதிய பொருளாதார வரலாற்று ஆய்வாளர் ஹியூஜ் கன்னிங்ஹாம் கூறுகையில்,
20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில், வளர்ந்த நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை குறையும் என 50 ஆண்டுகளுக்கு முன்பான கணிப்பில் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அப்படியில்லை. மீண்டும் வளர்ந்த நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பெருகியுள்ளனர். இது தேசிய அளவிலான அல்லது உலகளாவிலான பொருளாதாரத்தைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறது.
தொழிலாளர் ஒருங்கிணைப்பாளரும், மேற்கத்திய குழந்தைகள் அமைப்பின் தலைவரும், தொழிற்சாலை தொழிலாளர் அமைப்பின் நிறுவன உறுப்பினருமான பிக் பில் ஹேவுட் கூறுகையில், குழந்தைகளின் விளையாட்டு நேரத்தை, உழைப்பாக சுரண்டுபவர்கள் தான் மிக மோசமான திருடர்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
       ஹூஸ்டன் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் தாமஸ் டி கிரிகாரி, கேட்டோ நிறுவனத்தில் வெளியிட்ட கட்டுரையில், தொழில்நுட்பமும், பொருளாதார மாற்றமும் குழந்தைகளை தொழில்துறையிலிருந்து விலக்கி, பள்ளிகளுக்கு மாற்றும் சிறந்த ஆக்கப் பொருளாகும். ஹூஸ்டன் பல்கலைக்கழகம் இதனால் அக்குழந்தைகள் பெரியவர்களாக நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழமுடியும். ஆனால் வங்கதேசம் போன்ற ஏழைநாடுகளில், 19 ஆம் நுற்றாண்டின் கடைசி வரையில், குடும்பப் பொருளாதாரத் தேவைக்காக குழந்தைகள் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தேவைக்கான போராட்டம் நிறைவுபெறும் போது, அவை வெவ்வேறு அரசியல் காரணங்களால் மீண்டும் குழந்தைத் தொழிலாளர் முறை தலைதூக்குகின்றன.


டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல்   

         மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இந்நோய் 200 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது.
     Aedes எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகைக் கொசுக்களால் (இலங்கை வழக்கு: நுளம்பு), குறிப்பாக ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது, ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பரவுவதில்லை. நோய் பாதித்தவரைக் கடித்த (குத்திய) கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு மூலமும் பரவலாம். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது. இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோயாகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும். இந்த நோய் பெரும்பாலும் வறண்ட, உலர் வெப்ப வலயங்களில் பெருகும். உதாரணமாக:வடக்கு ஆர்ஜென்டினா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஷ்ட ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கோடேமலா, குயான, ஹைடி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை. போன்ற நாடுகளில் பரவி வருகின்றன.

 நோயின் அறிகுறிகள்

  • நல்ல காய்ச்சல்
  • தீவிர கண்வலி (கண்ணிற்குப் பின்)
  • கடும் தலைவலி
  • கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
  • வாந்தி
  • தோல் சிவத்தல் (rash)
  • வெள்ளை அணுக்கள், இரத்தவட்டுகள் குறைதல்
  • மிதமான இரத்தப்போக்கு வெளிப்பாடு (மூக்கில் இரத்தப்போக்கு, இரத்தப்புள்ளிகள் -- petechiae)
  • அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்

 நான்கு நிலைகள்

  • அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலை
  • ஆரம்ப நிலை டெங்கிக் காய்ச்சல் நிலை
  • இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்கிக் காய்ச்சல் நிலை
  • டெங்கி அதிர்ச்சி அறிகுறி நிலை

 பண்டுவ (மருத்துவ) முறை

         நோய்க்கான குறிப்பிட்ட மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் பெரும்பாலும் இந்நோய் இரண்டு வாரங்களில் குணமாகி விடுகிறது. நல்ல ஓய்வு, நிறைய நீர்ம உணவு உட்கொள்ளுதல், காய்ச்சலுக்குத் தகுந்த மருந்து உட்கொள்தல் போன்றவை நோயின் கடுமையைக் குறைக்க உதவும்.

 தடுப்பு முறைகள்

       கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ளல், கொசு உருவாகாமல் தடுக்க சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல் போன்றவை இந்நோயைத் தடுக்க உதவும்.
      டெங்கு நோயைத் தடுக்க அல்லது ஒழிக்க பல ஆராச்சிகள் உலகின் பல பாகங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன. நோய்க்காவிகளின் கட்டுப்பாடு, வைரசுக்கான தடுப்பு மருந்து உருவாக்கம், வைரசுக்கேதிரான மருந்துகள் கண்டுபிடிப்பு என பல வழிகளிலும் ஆராச்சியாளர்கள் தமது முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

Oral sex can result in mouth cancer.

        The number of mouth cancer cases in Britain went above 6000 last year, driven partly by oral sex, new figures suggest.

        The number of cases rose to 6,200 in the last decade, up from 4,400 in 2001. Two-thirds of the cases are in men.

      The condition is often linked to smoking and excessive drinking.

      But experts have said the dramatic increase is down to a virus called HPV (human papillomavirus) which can be spread during sex.

       Richard Shaw, a Cancer Research UK expert in head and neck tumours, said patients with HPV-related oral cancers tend to be younger and less likely to smoke.

Habits raise cervical cancer risk.

           New Delhi: Every fourth death due to cervical cancer occurs in India, and by 2025 the death rate could increase by 70%, data published by Internal Agency for Research on Cancer shows. The reasons for this surge in cervical cancer cases range from unprotected sex with multiple partners to early sexual activity and poor genital hygiene. Doctors say a few precautions can help women avoid the disease.

          "Cervical cancer is mainly caused by the human papilloma virus (HPV); it's sexually transmitted. Women who have had more than one sexual partner in their lifetime or have intercourse with a man who has had more than one partner, are likely to be infected," said Dr GK Rath, who heads the BRA Institute Rotary Cancer Hospital at AIIMS. "Practising good genital hygiene can lower the risk by more than 50%," he added.

           According to Dr Aasha Sharma, head of the gynaecology department at Rockland Hospital, girls who have sex at a young age are also at higher risk. "Early exposure to HPV increases the risk of cervical cancer as it increases the overall time frame that the virus has to influence the development of abnormal cancerous cells," she said. Sharma stressed the need for HPV vaccination.

        Dr Suversha Khanna, executive director of Dharmshila Cancer Hospital and Research Centre, said early diagnosis has made fighting cervical cancer easier in developed nations. "Regular gynaecological checkups and specific tests like pap smear after a woman becomes sexually active can help in early diagnosis."

         Early stages of the cancer bring on symptoms like abnormal vaginal bleeding or spotting between periods, pain during intercourse or bleeding afterwards, pelvic pain and weight loss. Treatment depends on the stage of the cancer. "In the early stages, it can be treated by a cone biopsy, which involves removing a part of the cervix. However, in advanced cases, a major surgery involving removal of the uterus is necessary. This may be combined with radiation and chemotherapy," said an expert.

     He added that in some cases the entire treatment revolves around radiation therapy, with or without chemotherapy.

H1N1 returns

Man held for cheating people on holding H1N1 vaccination camp

A 26-year-old man was held in Hadapsar on Wednesday for cheating people on the pretext of holding an H1N1 influenza vaccination camp.

H1N1 plea only seeks to serve private interests: Madras high court

The Madras high court has thrown out a petition seeking a direction to the authorities concerned that H1N1 henceforth not be referred to as ‘swine flu’.

Not vaccinated for H1N1, health workers at risk

On Wednesday, four of the six cases reported in Chennai were doctors, medicos and paramedical staff. Many doctors, nurses and paramedical staff in cities like Pune, Mumbai, Bangalore and Jaipur said they were yet to take the first dose of the anti-flu vaccine.

H1N1 claims woman; third death in 1 month

A 35-year-old woman from Tiruporur in Kancheepuram district died of A H1N1 at the Government General Hospital, Chennai, on Monday. This is the third such death in the last one month in the state.

7 new cases of H1N1 in Tamil Nadu, 4 from Chennai

Four more people tested positive for the H1N1 virus in the city on Sunday, along with three others in the districts, taking the number of people affected in Tamil Nadu to 64 this year.  Courtesy-The Times Of India 

            

ஆரோக்கியமான குழந்தைகளே படிப்பில் சாதிக்கின்றனர்!

         பள்ளி குழந்தைகளின் கல்வித்திறனை வளர்ப்பதில், அவர்கள் படிக்கும் நேரத்தைவிட, அன்றாட சுகாதார செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கின்றன என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்ததுள்ளது.
         இந்திய மருத்துவக் கழகம், சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா ஆகிய பெருநகரில், "பள்ளி குழந்தைகளின் கல்வித்திறனில், அவர்களின் அன்றாட சுகாதார செயல்பாடுகளின் பங்கு" எனும் தலைப்பில், ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தியது.
        500 பேரிடம் சோதனை: ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின், 500 பெற்றோரிடம், 40 குழந்தை நல மருத்துவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள்:
         * தேர்வுகளில், 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் மற்றும் பள்ளி வருகைப்பதிவு கொண்ட மாணவர்கள் ஒரு குழுவாகவும் (குழு 1); 80 சதவீதத்திற்கு குறைவானவர் மற்றொரு குழுவாகவும்(குழு 2) பிரித்து ஆய்வு செய்ததில், பள்ளி வருகைப்பதிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
        * தினமும் குளித்தல், உணவு அருந்தும் முன் கை கழுவும் பழக்கம், உறங்கும் கால அளவு, வெளிப்புற விளையாட்டு ஆகிய காரணிகள், இவ்விரு குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளின் உடல் சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது, மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் எதிரொலிப்பதும் தெரிய வந்துள்ளது.
தொற்று நோய் பாதிப்பு:
       * அதாவது, தினமும் குளிப்பது, அவ்வபோது கை கழுவுவது போன்ற அடிப்படை சுகாதாரத்தை, குழு 1ல், 68 சதவீதம் பேர் மற்றும் குழு 2ல், 19 சதவீதம் பேர் பின்பற்றுவது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, இரண்டாவது குழுவைச் சேர்ந்த மாணவர்கள், உடல்நல பாதிப்பால், குறிப்பாக குடல் சார்ந்த தொற்றால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கு அதிகம் விடுப்பு எடுத்துள்ளனர்.
     * குழு 2ல், 43 சதவீதம் பேர் மட்டும், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் படிப்பது, 39 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாறாக, குழு 1ல், 63 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் படிப்பது, 15 சதவீதம் பேர் மட்டும், ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குகின்றனர். இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
   விழிப்புணர்வு தேவை: இந்திய மருத்துவ கழக பொதுச் செயலர் ஜதீன்தர் குமார் கூறும்போது, "ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க, அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை சுகாதார பழக்க வழக்கங்கள் குறித்து, பள்ளி குழந்தைகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Himalayan glaciers dwindle each year

         SHIMLA: Global warming is diminishing the Chhota Shigri glacier in the Pir Panjal ranges of Himachal at 0.67 metres a year, report French and Indian researchers.

        The study, jointly supported by the department of science and technology, India's space agency ISRO and the Indo-French Centre for Promotion of Advanced Research, concluded that the glacier mass was thinning more rapidly this century.

         The researchers, including those from New Delhi's Jawaharlal Nehru University and glaciologists from France, said that the glacier was losing ice due to rising atmospheric temperatures.

       The decrease is measured in terms of the ice flux, or the volume of ice passing a point per year.

       "Our data suggests that the ice fluxes have diminished by 24 per cent to 37 per cent below 4,750 metres above sea level between 2003 and 2010," said Pottakkal George Jose from the JNU School of Environmental Studies and a member of the research team.

      Team leader A L Ramanathan said the thinning of Chhota Sigri glacier, located about 100 km from the hill resort of Manali, had picked up speed this centu

ITI students scholarship

           தொழிற் கல்வி அளிக்கும் அரசு கல்வி நிறுவனமான ஐடிஐயில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை கல்வி உதவித் தொகை அளிக்கிறது. அதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
          தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஐடிஐயில் படித்து வரும், சேர்ந்துள்ள மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
Scholarship :  ஐடிஐ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :     பி-1, நறுமுகை அடுக்ககம், பிருந்தாவன் நகர் விரிவு, ஆதம்பாக்கம், சென்னை - 88 என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். 

scholarship for science studying students

            அறிவியல் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கிஷோர் வைக்யானிக் புரோட்சஹன் யோஜ்னா என்ற கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
            அறிவியல் பாடத்தை எடுத்துப் படிக்கும் பிளஸ்1, 2 மாணவர்களுக்கும், பி.எஸ்சி, பி.எஸ்., எம்.எஸ்சி., படிக்கும் பட்டதாரிகளுக்கும், பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற தொழில் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கும், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் இந்த கல்வித் தொகை வழங்கப்படுகிறது.
            இது குறித்த விவரங்களை அறிய http://www.kvpy.org.in இணையதளத்தைப் பார்க்கவும்.

நேரத்தை நிர்வகித்து செயல்படுங்கள்

       காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.
     இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? என்பதற்கான டிப்ஸ் பற்றி கீழே காணலாம்.
    * ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான் என்ற கால அளவு மாறப் போவதில்லை. அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
    *உங்களுடைய பயனுள்ள நேரம் எங்கு வீணாக செலவிடப்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக சிலர் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவார்கள் அல்லது இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பார்கள் அல்லது டிவி பார்ப்பதில் நேரத்தை செலவிடுவார்கள். இவற்றில் எவ்வகையில் உங்களுடைய நேரம் வீணாகசெலவிடப்படுகிறது என்பதை அறிந்து தவிர்த்து விடுங்கள்.
   *நீங்கள் சரியான கால அளவை பின்பற்றுவதை, இலக்காக வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது நடத்தையில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, நான் காலை 10 மணிக்கு இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என உங்களது நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் மட்டும் போடாமல், அதை செயல்படுத்த முனையுங்கள்.
   *தினமும் எழும் நேரம் மற்றும் உறங்கும் நேரம் உள்ளிடவற்றை சரியான முறையில் வகைப்படுத்தி கொள்ளுங்கள்.
    *மற்றர்வர்கள் கிண்டல் செய்வார்களோ என அஞ்சி, உங்களது கால அளவை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களது வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்யுங்கள்.
   *இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்.