Translate

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

செட் தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு

கோவை: பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தும் செட் தேர்வுக்கான விண்ணப்ப தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள செட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஆகஸ்ட் 31 கடைசி தேதி எனவும், விண்ணப்பம் தபால் மூலமாக, பாரதியார் பல்கலைக்கழகம் சென்றடைவதற்கான கடைசித்தேதி செப்டம்பர் 7 எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அந்த தேதி நிபந்தனைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசித்தேதி செப்டம்பர் 7 எனவும், பல்கலைக்கு, விண்ணப்பம் சென்றுசேரும் கடைசித்தேதி செப்டம்பர் 14 எனவும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்வுத் தேதியில் இதுவரை மாற்றம் இல்லை.

வியாழன், ஆகஸ்ட் 30, 2012

தமிழகத்தில் முதல் ஐஐஐடி

தமிழகத்தில் முதல் ஐஐஐடி அமைப்பதற்கு, திருச்சிக்கு அருகே இடம் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூடுதல் முதன்மை செயலர் டி.எஸ்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
International institute of information technology எனப்படும் 20 புதிய ஐஐஐடி -களை நாட்டில் ஏற்படுத்துவதற்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை நாம் அறிவோம். ஐஐஐடி -களை, பொது மற்றும் தனியார் பங்களிப்பில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீதர் மேலும் கூறியதாவது: முதல் ஐஐஐடி, திருச்சி அருகேயுள்ள சேதுராப்பட்டியில் அமைக்கப்படும். டி.சி.எஸ், காக்னிசன்ட் மற்றும் இன்போசிஸ் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள், தமிழகத்தில் ஐஐஐடி அமைக்க ஆதரவு தெரிவித்தன. மேலும், வேறுசில ஐடி நிறுவனங்களையும் திட்டத்தில் கொண்டுவர வேண்டிய தேவை இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

புதன், ஆகஸ்ட் 29, 2012

திட்டப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, ஆக.,29: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்டப் பணியாளர் (I), (II) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: திட்டப் பணியாளர் (I) - பி.இ.,(கம்யூட்டர் சயின்ஸ்) அல்லது எம்சிஏ., படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு குறைந்தபட்சம் 1 வருடம் சாப்ட்வேட் டெவலப்மென்ட் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வி.பி., டாட் நெட், எச்.டி.எம்.எல் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். திட்டப் பணியாளர் (II) - எம்.பி, எம்.டெக்., (கம்யூட்டர் சயின்ஸ்) படிப்புடன் 1 வருடம்  சாப்ட்வேட் டெவலப்மென்ட் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வி.பி., டாட் நெட், எச்.டி.எம்.எல் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், தங்களை பற்றிய சுயவிவரம், கல்வி சான்றிதழ்கள், பணிஅனுபவம் போன்றவை இணைத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும். செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் அறிய http://www.annauniv.edu/pdf/recru_ctdt_1.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம். 

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்ஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ராய்பூரில் உள்ள இந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்(ஐஐடி), காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்ஸ் (தற்காலி) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: பி.டெக்., (பயோ-டெக்னாலஜி) / கேட், எம்.எஸ்சி., (பயோ-டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி) /நெட், அல்லது எம்.டெக்., பயோ- டெக்னாலஜி, பயோ-கெமிக்கல் போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.nitrr.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தபால் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் மற்றும் திட்டத்தின் பெயர் ஆகியவை எழுதி செப்டம்பர் 13ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விரிவான தகவல்களை அறிய http://www.nitrr.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Being Fit in Middle Age Can Lower Risk of Disease Later in Life

Working out in middle age can result in fewer chronic diseases, including heart problems, diabetes, stroke, Alzheimer's disease and cancer
altrendo images / Getty Images
altrendo images / Getty Images
We all know that exercise is good for you — it keeps the heart healthy, works out the muscles and prepares you to take the stairs at work without fainting from exhaustion. But does all that activity actually prevent you from getting sick?
According to a study published online by the Archives of Internal Medicine, the answer is yes. Researchers say that people who are more fit when they are middle-aged have a lower rate of chronic diseases, including heart problems, diabetes, stroke, kidney disease, obstructive pulmonary conditions, lung cancer, colon cancer and Alzheimer’s disease.
Previous studies have shown that people who are more physically fit have a lower risk of dying early than those who aren’t as in shape, but the current analysis, led by Dr. Jarrett Berry of the University of Texas Southwestern Medical Center, is the first to expose a connection with chronic diseases. Berry and his colleagues compared data on fitness levels of 18,670 healthy men and women in their 40s and 50s to Medicare claims for chronic disease treatments a couple of decades later, when the participants became eligible for coverage after age 65. Each of the volunteers performed a treadmill test, during which the researchers measured the length of time they exercised to exhaustion as an indicator of their fitness. For every one-unit improvement in fitness, measured as metabolic equivalents, the volunteers enjoyed a 20% drop in the incidence of the eight conditions the scientists tracked.
MORE: Fit Vs. Fat : Which Matters More for Longevity?

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

ராகிங் - தடுப்பது, தப்பிப்பது எப்படி?

கல்வி நிறுவனங்களில், சீனியர் மாணவர்களால், ஜுனியர் மாணவர்களின் மீது இழைக்கப்படும் பல்வேறான சட்டவிரோத இன்னல்களே ராகிங் எனப்படுகிறது. ராகிங் என்பது பலவிதங்களில் நடத்தப்படுகிறது.


* ஜுனியர் மாணவர் எந்த உடை அணிய வேண்டும் என கட்டளையிடும் உடைரீதியான ராகிங்.
* குடும்ப பின்னணி, ஜாதி மற்றும் பிற ஏற்றத்தாழ்வுகளை வைத்து நிகழ்த்தப்படும் வார்த்தைக் கொடுமைகள்.
* மரத்தில் ஏறு, சத்தம் போடு போன்ற செயல்களை செய்ய வற்புறுத்தும் சில்லரைத்தனமான ராகிங்.
* உடைகளை கழட்டு என்று மிரட்டும் பாலியல் ரீதியான ராகிங்.
* கேன்டீன் பணத்தைக் கட்டு, சிகரெட் மற்றும் மது வாங்கி வா போன்ற பொருளாதார ரீதியிலான சுரண்டல் ராகிங்.
* இந்த பையை தூக்கி வா, இந்த அசைன்மென்டை நீ செய்துவிடு போன்ற உடல்ரீதியிலான துன்புறுத்தல்.
* ஜுனியர் மாணவர்களை மொத்தமாக பென்ச் மீது ஏறி நிற்கச்சொல்லுதல் போன்ற மாஸ் ராகிங்.
இதுபோன்ற பலவித ராகிங் செயல்பாடுகளால், ஒரு மாணவர், உடல்ரீதியாக பாதிக்கப்படுவதோடு, மனரீதியாகவும் மோசமாக பாதிக்கப்படுகிறார். அவர்களின் தன்னம்பிக்கை உடைந்து, மனச்சிதைவு ஏற்படுகிறது.
இந்த ராகிங் செயல்பாடுகள் பல நேரங்களில் கொலைகளிலும், தற்கொலைகளிலும் சென்று முடிந்துள்ளன. பலர், வாழ்வில் தடம் மாறி சென்றுள்ளனர்.
மாணவர்களுக்கான 24மணி நேர ஹெல்ப்லைன்
கடந்த 2009ம் ஆண்டின் ராகவன் கமிட்டி பரிந்துரைப்படி, ராகிங் தடுப்பு தொடர்பான ஒரு வழிகாட்டு நெறிமுறையை உச்சநீதிமன்றம் வழங்கியது. வாரத்தின் அனைத்து நாட்களும், 24 மணிநேரமும் புழக்கத்திலிருக்கும், மாணவர்களுக்கான ஒரு ஹெல்ப்லைன் ஏற்படுத்தப்பட்டது. ராகிங்கால் தன் மகனை இழந்த ராஜேந்திர கச்ரூ எனும் ஒரு பேராசிரியர், இந்த ஹெல்ப்லைன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். அவர், அமன் சத்யா கச்ரூ டிரஸ்ட்(ASKT) -ஐ உருவாக்கினார். ஆனால், அந்த ஹெல்ப்லைனில் பல குறைபாடுகள் இருந்தன.
புகார்கள் 24 முதல் 48 மணி நேரங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. மேலும், பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றமிழைப்பவர் ஆகியோரின் உண்மையான அடையாளத்தை தெரிவிக்க வேண்டியிருந்தது. இதைத்தவிர, தாமதத்தினால், ஒரு சில மாணவர்களுக்கே பயன் கிடைத்தது.
ஹெல்ப்லைனை சரிசெய்தல்
2012ம் ஆண்டு ஜனவரி மாதம், கால் சென்டர் கண்காணிப்பிற்கு, ASKT -க்கு அனுமதி வழங்கியது. எனவே, தற்போதைய நிலையில், ஒரு மாணவர், தனது அடையாளத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் புகார் பதிவுசெய்ய முடியும் மற்றும் புகாரானது, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு 15 நிமிடத்திற்குள் தெரிவிக்கப்படும். மேலும், Caller recording machine இயந்திரம் மற்றும் மாணவர் மற்றும் கல்லூரி ஆகியவற்றின் தகவல் தரவுதளத்தை உருவாக்க ஒரு மென்பொருளும் தற்போது நிறுவப்பட்டுள்ளது என்று ராஜேந்திர கச்ரூ தெரிவிக்கிறார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் நிரப்பப்படும் கட்டாய அபிடவிட்டுகளால்(mandatory affidavit), குற்றம் இழைப்பவர்களை, ஹெல்ப்லைன் நெருக்கமாக கண்காணிக்கும்.
எங்கே ராகிங் அதிகம்?
நகர் அல்லது ஊரிலிருந்து மிகவும் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் கல்லூரிகளிலேயே ராகிங் நடவடிக்கைகள் மிகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கல்லூரிகளை மீடியாவும், ராகிங் தடுப்புக் குழுக்களும் எளிதாக அணுக முடிவதில்லை. மேலும், பல கல்லூரிகளும், தங்களின் இமேஜ் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ராகிங் குற்றங்களை மறைத்து விடுகின்றன.
ராகிங் கொடுமைப் பற்றி பெரும்பாலான புகார்கள், ஒரிஸா, பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தே வருகின்றன என்பதாக கச்ரூ தெரிவிக்கிறார். மேலும், ராகிங் நடவடிக்கைகள், மாணவர்கள் எப்போதும் ஒன்றாகவே தங்கியிருக்கும் ரெசிடென்ஷியல் வகையிலான கல்லூரிகளிலேயே அதிகம் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனியாரிட்டி போதை
பொதுவாக, பொறியியல் கல்லூரிகளை ஒப்பிடுகையில், மருத்துவ கல்லூரிகளிலிருந்துதான் ராகிங் புகார்கள் அதிகம் வருகின்றன. உதாரணமாக, 250 மருத்துவக் கல்லூரிகளை எடுத்துக்கொண்டால், அவற்றில் 100 கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகள் உள்ளன. ஏன், மருத்துவக் கல்லூரிகளில் அதிகம் என்றால், அங்கே, சீனியர் டாக்டர்களை, ஜுனியர் டாக்டர்கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் சீனியர்களுக்கு மனதில் ஒரு போதை ஏற்பட்டு விடுகிறது. நாம் என்ன சொன்னாலும் அவர்கள் செய்தாக வேண்டும் மற்றும் அவர்கள் நம் ஆதிக்கத்தின் கீழ் என்ற எண்ணம் ஏற்பட்டு, பல முறைதவறிய நடவடிக்கைக்கு வழி வகுக்கிறது. இதனைத் தடுக்க, கல்லூரி ஆசிரியர்களும், ஊழியர்களும் தொடர்ந்த கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் நடவடிக்கை
சில கல்வி நிறுவனங்கள் ராகிங் விஷயத்தில் கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. தமிழகத்திலுள்ள விஐடி பல்கலை மற்றும் ஐஐடி-கான்பூர் போன்றவைகளை இவற்றுக்கு உதாரணமாக கூறலாம். கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், தனி கண்காணிப்பாளர்களை பணியமர்த்தல், மாணவர்களிடம் தொடர்ச்சியாக குறைகளைக் கேட்டு, அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல், ஆசிரியர்கள், மாணவர்களின் மீது தனி கவனம் செலுத்துதல், பிடிபடும் மாணவர்களை இடைநீக்கம் செய்தல் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
ராகிங் செய்வோரின் மறுபக்கம்
ஒருவகையில் பார்த்தால் ராகிங்கில் ஈடுபடுபவர்களும் மனநலம் சரியில்லாதவர்களே. அவர்கள் ராகிங்கை தங்களுக்கான ஒரு வடிகாலாக நினைக்கின்றனர். தெளிவான அறிவும், தெளிந்த சிந்தனையும் உடையவர்கள் அந்த நடவடிக்கையில் ஈடுபடும் வாய்ப்பில்லை.
எனவே, அதுபோன்றவர்களை, தொழில்துறை சார்ந்த ப்ராஜெக்ட்டுகள் மற்றும் Extra curricular activities போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
நீங்கள் எவ்வாறு உதவலாம்?
ராகிங்கால் பாதிக்கப்பட்டவர்களை கண்டால், அவர்களுக்கு காயமிருப்பதை கண்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும். பாதிக்கப்பட்டவருக்கு சிறிது ஓய்வும், மன ஆறுதலும் தேவை. ஆனால், ராகிங்கை தடுப்பதற்கான தொடர் கண்காணிப்பும், கடுமையான தண்டனைகளும் உண்டு என்பதை பாதிக்கப்பட்டவர் அறிந்தால்தான், அவர் விரைவில் சகஜ நிலைக்கு வருவார்.
ராகிங் புகாரை பதிவுசெய்வது எவ்வாறு?
Anti-ragging helpline, anti-ragging online NGOs மற்றும் internal college helplines ஆகியவற்றில் அழைக்கவும்.
24 மணி நேரத்திற்குள், காவல்துறையிடம் எப்ஐஆர் பதிவு செய்யவும்.
அடையாளத்தை வெளிக்காட்டி கொள்ளாமல், நண்பர் உதவியுடன் ஆர்டிஐ பதிவு செய்து, அபிடவிட் நகலைப் பெற்று, ராகிங் செய்வோரின் பெற்றோரிடம் தெரியப்படுத்தவும். www.no2ragging.org/samplerti.doc என்ற வலையிலிருந்து RTI மாதிரியைப் பெறவும்.
சர்வதேச ராகிங் தடுப்பு ஹெல்ப்லைன் எண் - 1800-180-5522. இ-மெயில் - helpline@antiragging.net
ஆன்லைன் அபிடவிட்டை www.antiragging.in மற்றும் www.amanmoment.org ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யவும்.
கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி வழங்கியுள்ள வழிகாட்டல்கள்
சேர்க்கை கையேட்டில், ராகிங் தடுப்பு ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட வேண்டும்.
ராகிங்கில் ஈடுபட மாட்டோம் என்று பெற்றோரும், மாணவர்களும் உறுதியளித்த அபிடவிட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் தொலைபேசி எண் மற்றும் முகவரி அடங்கிய நோட்டீசை விநியோகிக்க வேண்டும்.
புகார் கொடுப்பவரின் அடையாளம் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.
முடிந்தளவிற்கு, புதிதாக சேர்பவர்களை, சீனியர்களுடன் அல்லாமல், தனி ஹாஸ்டலில் தங்க வைக்க முயற்சிக்க வேண்டும்.

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

Heavy Women May Be More Likely to See Breast Cancer Recur

Overweight and obese women may have a tougher battle in store when it comes to breast cancer: a new study published inTetra Images / Getty Images the journal Cancer finds that carrying extra pounds is linked with a higher risk of cancer recurrence and death.



Previous studies have linked obesity with breast cancer recurrence, but the new study is among the first to find the same trend even among women who are overweight but not obese. The researchers found that having higher body mass index increased women’s risk of breast cancer recurrence and death, even if they had state-of-the-art treatment like chemotherapy and hormonal therapy.
“We found that obesity at diagnosis of breast cancer is associated with about a 30 percent higher risk of recurrence and a nearly 50 percent higher risk of death despite optimal treatment,” said lead study author Dr. Joseph Sparano of the Albert Einstein College of Medicine’s Montefiore Medical Center, in New York City, in a statement.
(MORE: Good News for Women With Dense Breasts: No Higher Risk of Breast Cancer Death)

                                                                           COURTESY--TIME

Smart solar inverter launched in Kerala

 HIRUVANANTHAPURAM: Ronds Innotech Saturday launched a home inverter here that runs on solar power and if attached to home appliances like fans and televisions can considerably reduce electricity bills.

"The product ('Smart Solar Inverter') will be available initially in south India and then expanded to other markets. The price range begins from Rs.29,000 for the base model," said Sijo Joseph, CEO, Ronds Innotech. The company is based in Technopark, a technology hub in Thiruvananthapuram.

The device, the first of its kind, is equipped with an inbuilt embedded performance tracking system and can communicate with a remote PC.

Joseph said the device is developed to support all home appliances such as lights, fans, televisions and all household electrical equipments.

The 'Smart Solar Inverter' is an innovative and patented technology that can reduce electricity bills considerably. It works both on solar and normal mode.

Moreover, the company has also developed a facility to convert existing inverters at home to a smart solar inverter by adding Rond Solar Hybrid Automated Power Controlling Unit (APCU).

The inverter's automated power source selection mechanism (APSS) automates the power selection between AC mains and solar power.

If there is sufficient power from the sunlight, APSS will directly run the applications from sunlight without taking power from AC mains supply, thus reducing the electricity bill to a great extent and if the load connected requires more power, APSS will change power source to AC mains supply.

"There is always a growth and scope of innovative ideas like these which are helping us making our lives better, these new innovations bring in a positive array of thoughts in minds of other entrepreneurs," said K.C. Chandrashekharan Nair, Registrar, Technopark TBI, launching the device.

இணையதள கல்வித் தேடல்: இந்தியாவுக்கு 2ம் இடம்

டெல்லி: கூகிள் இணையதளத்தில் கல்வி சம்பந்தப்பட்ட தேடல்களில் இந்தியா உலகளவில் இரணடாம் இடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள உள்ள இணையதள உபயோகிப்பாளர்களில், 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் கல்வி தொடர்பான தேடல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கூகிள் மூலம் கல்வி தொடர்பான கேள்விகளுக்கு விடைகள் பெற முடிவதாகவும் சொல்லப்படுகிறது.
கைப்பேசியில் இணையதளத்தை உபயோகித்து கல்வி நிறுவனங்களை பற்றி தேடுவதும் 66 சதவீதம் அதிகரித்து உள்ளது. கல்வி நிறுவனங்களின் வீடியோ பதிவுகளை 46 சதவீதம் பார்க்க விரும்புகின்றனர்.
கூகிள் இந்தியா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நடத்தப்பட்ட இதேபோன்ற கருத்துக் கணிப்பில் உலகளவில் 8வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது
                                                    Courtesy--Dinamalar

வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 75 லட்சம்

தமிழகத்தில், 75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கின்றனர். இவர்களில், 36,85,000 பேர் பெண்கள். இந்த புள்ளி விவரம், கடந்த மார்ச், 31ம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்கள்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரில், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோரின் விவரங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமா, ஆசிரியர் பயற்சி முடித்தவர்கள், இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் என, கல்வித் தகுதி வாரியாகவும் விவரங்கள் வேலைவாய்ப்பு இயக்குனரகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் கல்வியில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், 1,79,000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் பொறியியல் இளம்நிலை பட்டம் (பி.இ.,) பெற்றவர்கள், 1,39,000 பேர். முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்
மருத்துவத்தில் இளம்நிலை (எம்.பி.பி.எஸ்.,) பட்டம் பெற்றவர்கள், 12,932 பேர். முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், 4,444 பேர். வேளாண்மைக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், 2,132 பேர். முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், 1,156 பேர். பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள், 8,18,000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வேண்டி பதிவு செய்துள்ளனர்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 29,29,000 பேரும், பிளஸ் 2 முடித்தவர்கள், 20,62,000 பேரும், டிப்ளமாதாரர்கள், 1,74,000 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.