Translate

செவ்வாய், நவம்பர் 18, 2014

சாமானியனின் நினைவுகள்-1

         சின்னஞ் சிறு வயதுகளில் நமக்கு நடந்தவை எதுவும் சரியாக நினைவுக்கு வருவதில்லை ஆனால் சில நினைவுகள் எவ்வளவு வயதானாலும் மறக்காது போல இருக்கின்றது...இது எல்லோருக்கும் சாதாரணமாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன் .
        எனக்கு 3 அல்லது 4 வயது இருக்கும் எனது சகோதரி ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது  அதில் நான் மணமக்களுடன் சேர்ந்து அவர்களது கைகளில் பொரி  அள்ளிப்போட்டேன் ...வேறெந்த சம்பவமும் அந்நிகழ்வில் நினைவிலில்லை .
      ஒருமுறை உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றபோது அவர்கள் உபசரித்து அருந்த பால் கொடுத்தனர் ..அதனை வாங்கி குடித்தவுடன் பால் ரொம்பவும் தண்ணீராக இருக்கின்றது என என் அப்பாவிடம் அவர்கள் எதிரிலேயே கூற அப்பா என்னை அதுமாதிரி எல்லாம் கூற கூடாது என்று அறிவுறுத்தினார்...இது அப்போது எனக்கு ஒன்றும் தெரியவில்லை ஆனால் இப்போது நினைத்துப்பார்க்கும்போது சங்கடமாக உள்ளது. எனது அப்பாவிற்கும் , அந்த உறவினருக்கும் தர்மசங்கடமாக இருந்திருக்கும் ..
       அதே வயதில்தான் ஒரு தீபாவளிக்கு பட்டாசுக்கடை வைத்திருந்தார் எனது அப்பா. அங்கிருந்து பட்டாசுகளை என்னிடம் அப்பா கொடுத்து வெய்யிலில் காயவைக்க சொன்னார் அதை எடுத்து வந்து வீட்டில் வைத்துவிட்டு பெரியவர்கள் போல ராக்கெட் வெடியை கையில் வைத்து விட வேண்டும் என்ற ஆசையில் கையில் வைத்து பற்றவைத்து ராக்கெட்டை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டேன் கையில் காயம் ஏற்பட்டது அப்புறம் என்ன தீபாவளிக்கு சிறப்புதான் எனக்குமறக்கமுடியாத தீபாவளி அது ....
    படிப்படியாக நினைவுகள்...வளரும்... 

-சேதுராமன் ராமலிங்கம்.






1 கருத்து: