Translate

செவ்வாய், ஏப்ரல் 07, 2020

கரும்பலகையிலிருந்து மனிதம்

கரும்பலகையிலிருந்து மனிதம்-1(தொடர்).......
சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பாக 27-07-1999 அன்று முதன் முதலாக நான் இப்போது என்னை முழு ஈடுபாட்டுடன் என்பால் தன்னை ஈர்த்துக்கொண்ட ஆசிரியராக இச்சமுதாயம் நியமித்தது.அன்றே அன்னையின் கைகளில் காலை 7மணிக்கே உணவு உண்டு,பகலுணவு பெற்றுக்கொண்டு குறித்த நேரத்தில் செல்ல மிதிவண்டியில் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பேருந்தில் சென்று மற்றுமொரு பேருந்து மீண்டும் என்னை சுமந்து பள்ளிக்கு 5கிமீ தொலைவில்  இதற்கு மேல் நீயே செல் என்று பேருந்து தன் வழியே சென்றது.(வீட்டிலிருந்து 42கி.மீ.தூரம்)அங்கே காத்திருந்த எனது TVS CHAMP(Blue) திரு.புகழ்மணி தலைமை ஆசிரியர் அவர்களின் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றடையும் வழியில் கத்தரி,தக்காளி,மிளகாய் செடிகள் என்னைப்பார்த்து தலையாட்டி வரவேற்று தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இந்தச் சமுதாயத்தில் நல்ல மனிதனாக வாழும் முறையை கற்பிக்க வந்துள்ள என்னை வரவேற்பது போன்ற  மகிழ்ச்சி என்னை உற்சாகப்படுத்தியது.மண்மணம் கமழும் மிகச்சிறிய கிராமமாகிய கோவில் சீமை என்னை தன் பள்ளியின் ஒரு அனுபவமற்ற சிற்பியாக மகிழ்ச்சியுடன் தன் தலைமை ஆசிரியர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்களின் மூலமாக அன்புடன் கூடிய மரியாதையுடன் என்னை வரவேற்று நெகிழச்செய்தது.அன்றே எனது முதல் கற்றல், மற்றும் கற்பித்தல் பணி மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. எனக்கு அளிக்கப்பட்ட நிலைகள்-1,2,3.சின்னஞ்சிறிய மலர்ந்தும் மலராத பூக்கள் போன்ற மாணவர்கள்.அவர்கள் என்னை முதன்முதலில் பார்த்து சற்று தயக்கத்துடன் குழம்பியது  ஏன் என்று எனக்கு புரியவில்லை.அவர்களை அழைத்து சில பாடல்கள் பாடி நானும் மகிழ்ந்தேன்....அப்போதுதான் ஒரு 3ம் நிலை மாணவன் தயக்கத்துடன் அருகே வந்து சார் முதன்முதலில் உங்களை பார்த்த உடன் போலீஸ் என்று எண்ணி விட்டோம் சார் ....அதனால்தான் நீங்க அடிப்பீர்களோ என்று பயந்தோம்....ஆனால் இப்போ எங்களுக்கு பயமில்லை சார்...ஏன்னா எங்களோடயே சேர்ந்து நீங்களும் பாடி ஆடுறீங்களே..............கரும்பலகையிலிருந்து மனிதம் தொடரும்... -சேதுராமன் ராமலிங்கம்,செயங்கொண்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக