Translate

ஞாயிறு, டிசம்பர் 06, 2015

மழைக்காலத்தை சமாளிக்க எளிய வழிகள் பத்து.........

மழைக்காலத்தை சமாளிக்க எளிய வழிகள் பத்து.
(சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து )
இநத அடைமழைக்காலத்தில் வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு, ஃப்ளு சுரங்கள் மற்றும் டெங்கு வர வாய்ப்பு உண்டு. உணவிலும் வாழ்வியலிலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை அவசியம்.
1. நன்கு தரதரவென காய்ச்சி அருந்திய நீரை மட்டுமே. இளவெதுவெதுப்பான சூட்டோடு மட்டுமே பருகுங்கள்
2. இளவெதுவெதுப்பான நீரை மட்டும் குளிக்க பயன்படுத்துங்கள்.
3. ஆவியில் வெந்த எளிதில் சீரணிக்க கூடிய இட்லி, இடியாப்பம், சோறு, புட்டு, பொங்கல், சாப்பிடவும். கோதுமைச் சப்பாத்தியும் கொடுக்கலாம். மிளகுதூவிய கிழங்கு மதியம் மட்டும் கொஞ்சமாக எடுக்கலாம். பிற மாவுப்பண்டங்கள் வேண்டாம். மிளகு, பூண்டு, சீரகம் போட்ட ரசம் சோறு நல்லது.
4. நோய் எதிர்ப்பாற்றலை உடலில் அதிகரிக்க காரம் தேவைப்படும் இடத்திலெல்லாம் மிளகுத் தூள் பயன்படுத்துங்கள். அன்னாசிப்பூ எனும் star anise-ஐ குருமா போன்ற உணவில் போட்டு சாப்பிடவும். தேநீரில் இலவங்கப்பப்ட்டை, துளசி இலை போட்டு தேநீர் அருந்தலாம்.
5. நிலவேம்புக் குடிநீர் வீட்டில் கண்டிப்பாக இருக்கட்டும். இந்த பொடியைப் போட்டு 250 மிலி நீர் விட்டு சூடாக்கி 60 மிலியாக்க் குறுக்கி கஷாயமாக்கி உணவுக்கு முன்னதாக பருகுங்கள். 6 வய்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30மிலி கொடுக்கலாம். 3-6 வயதில் 15-30மிலி கொடுக்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் எப்போதும் கிடைக்கும்.
6. செஞ்சில் சளி கட்டி இருமலுடன் துன்பப பட்டால், துளசி (ஒருகைப்பிடி அளவு), வெற்றிலை( 2 இலை), மிளகு( 4 எண்ணிக்கை), கற்பூரவல்லி(ஒருகைப்பிடி அளவு) –இதனை போட்டு 250 மிலி நீர் விட்டு சூடாக்கி 60மிலியாக குறுக்கி கஷாயமாக்கி உணவுக்கு முன்னதாக பருகுங்கள்.
7. வெறும் தரையில் படுக்க வேண்டாம். படுக்கை தலையணை உறையை வெயில் தெரியும் போது வெயிலில் போட்டு எடுங்கள். ஈரமான நாட்களில் ஒவ்வாமைத் தும்மல் வர மிக முக்கிய காரணம் ஈரம் பாய்ந்த துவைக்காத தலையணை உறை என்பதை மறக்க்க் கூடாது
8. குழந்தைகளை காது, தலைப்பகுதியை அணைத்த (குரங்கு குல்லா மாதிரி) ஆடை அணிவியுங்கள். இருசக்கர வாகன முன் பகுதியிலோ, சாலையைப் பார்த்த படியோ குழந்தையை உட்கார வைக்காதீர்கள்.
9. வயிற்றுப் போக்கை நிறுத்த கறிவேப்பிலை, சித்த மருந்துகளான சுண்டை வற்றல் பொடி, தயிர்சுண்டிச் சூரணம் பயனளிக்கும். கூடவே உடலில் நீர்த்துவம் குறைந்திடாது இருக்க உப்பு, பனைவெல்லம் கலந்த நீர், இள நீர், நீர்த்த மோர், அருந்துங்கள்.
10. சுரம் 2 தினங்களைத் தாண்டி படிப்படியாக அதிகரித்தாலோ, தோலில் சிவந்த படைகள் இருந்தாலோ, சுரத்தில் துவளும் சூழல் வருவது போலிருந்தாலா, அருகாமையில் உள்ள குடும்ப மருத்துவரை தாமதிக்காது அணுகுங்கள்.
(முடிந்தவரை நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.)

வியாழன், மார்ச் 05, 2015

புவி வெப்ப மாதல் ,பசுமை இல்ல வாயு ,ஓசோன் ஓட்டை

புவி வெப்ப மாதல் ,பசுமை இல்ல வாயு ,ஓசோன் ஓட்டை
**************************************************************************************
அப்படின்னு எல்லாம் சொல்றாங்களே அது உலக பிரச்சினையாமே , அதுக்கு நாம என்ன செய்ய முடியும் ?.......
இது நியாயமான கேள்வி .....
1. நாம பக்கத்து அறைக்கு போகும் போது மறக்காம எல்லா சிவிட்சும் நிறுத்தியிருக்கா அப்படின்னு பார்த்துட்டு போகணும்.
2.தேவையில்லாத இடங்களில் எரியும் விளக்குகளுக்கு ஒய்வு கொடுக்க வேண்டும்
3.கடை வீதிக்கு போனாலே கையில் பை ஒன்றை எடுத்து செல்ல வேண்டும் ....கடைகாரர் கொடுக்கும் நெகிழிப்பைகளை வேண்டாம் என்று மறுக்க வேண்டும்
3.நாம பயன்படுத்தும் எழுதுகோல் மையூற்று (inkpen )
ஆக இருந்தால் சாலச்சிறந்தது ....ஏனெனில் refil கள் மறு சுழற்சிக்கு
அதிகம் பயன்படாது....
4. மிதிவண்டி மற்றும் நடராஜா வாகனங்களில் செல்வது நமது
உடலுக்கு மிக நல்லது
5.தண்ணீர் வீணாவதை நம்மால் முடிந்த அளவு குறைக்க வேண்டும்

இவை சிலதான்
ரொம்ப எளிதுதான் இதுல ஏதாவது ஒன்ற நாம கடை பிடிக்காம இருந்திருப்போம் அதை கடைபிடிக்க முயற்சி செய்து பார்க்கலாம் அல்லவா?
-சேதுராமன் இராமலிங்கம் ,ஜெயங்கொண்டம் .

டோடோ அழிந்து போனதற்கு காரணம்

டோடோ என்ற பறவை கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு அபூர்வப் பறவை. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவில் வாழ்ந்து வந்தது. இதற்கு இறக்கைகள் கிடையாது ,தரையில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. ஒரு மீட்டர் உயரம் உடையது .இது மெதுவாகத்தான் நடந்து செல்லும் .இதற்கு என்று உணவுவலை மேலாளர் (இதை உண்ணக்கூடிய விலங்கு) இல்லை ...அதனால் இது சுதந்திரமாக தன் இனத்தை ஒருமுறைக்கு ஒரே ஒரு முட்டை மட்டுமே இட்டு பெருக்கி வாழ்ந்து வந்தது ....ஆனால் அத்தீவில் வெளியூர்காரர்கள் காலூன்றிய போது நாய்...பூனை போன்றவை உடன் வந்ததால் அவை டோடோவை உண்ணத் தொடங்கின ,மனிதனும் தன் பங்கிற்கு உண்டான் .....
டோடோ அழிந்து போனதற்கு காரணம் இயற்கை அத்தீவில் இல்லாமல் செய்திருந்த நாய்...பூனை போன்றவை அங்கே வந்ததுதான் காரணம் .....
-சேதுராமன் இராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.

உலக நாடுகளிடம் வெப்பமாதல் குறித்த செய்தி

  முகமது நசீது என்ற மாலத்தீவுகளின் முன்னாள் அதிபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதை (கைது செய்தது அவர்களது உள்நாட்டு விவகாரம்...,ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் நசீத் என்பது குறிப்பிடத்தக்கது.) பத்திரிக்கைகளில் படிக்க நேர்ந்த போது அவர் 2009-ஆம் ஆண்டு தனது அமைச்சரவை சகாக்களுடன் கடலுக்கடியில் சைகைகளின் மூலமும், வெண்ணிற அட்டைகளின் மூலமும் சுமார் அரை மணி நேரம் கூட்டம் நடத்தி உலகின் கார்பன் வெளிப்பாட்டினை குறைக்க முயற்சி எடுத்தவர்...என்ற நினைவு எனக்கு ஏற்பட்டது .
இதற்கு காரணம் கடல் மட்டத்தை விட ஏழு அடி உயரம் மட்டுமே அவர்களது நிலமட்டம் (வாழ்க்கை.....)
நமக்கெல்லாம் இது சாதாரண செய்திதான்....ஆனால் அவர்களுக்கு உலக நாடுகளிடம் வெப்பமாதல் குறித்த செய்தியை எப்படியாவது உணர்த்த வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே....அந்த கூட்டம்...
அப்போது எனக்கு இது ஒரு விளம்பரத்திற்காக என்று கூட எண்ணினேன் ஆனால் இப்போது ஏற்படும் பருவநிலை மாற்றம்...அவர்களைப் போன்றவர்கள் நிலை...... உண்மையில் பரிதாபம் தான் ......
பரிதாபப்பட இப்போது நாம் உள்ளோம்....
-சேதுராமன் இராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.




புதன், டிசம்பர் 17, 2014

மைனஸ் முப்பது டிகிரி செல்சியசில் பயற்சி எடுக்கும் சீன வீரர்கள் உறையவைக்கும் படங்கள் -Frost-covered Chinese soldiers show rigours of training regime – in temperatures as low as MINUS 30C


 இவர்களின் கண் இமைகளில்  பனி படர்ந்துள்ளதைப் பார்த்தாலே நமக்குப்புரியும்......

The air is so cold that their breaths have created a small cloud around their heads and frost has grown on their eyelashes.
These soldiers are part of a frontier guards company in China's People's Liberation Army, and their daily training sessions are not halted over something as pesky as a couple of centigrade below freezing.
The crew could be seen during a practice drill in temperatures of about minus 30C in Heihe, Heilongjiang province on Tuesday.
Last month, China's defence ministry was forced to shut down speculation that the Asian nation is seeking to establish military facilities abroad.
The People's Liberation Army is considered the world's largest military force, employing around 2.3million Chinese.

Army friends: The People's Liberation Army is considered the world's largest military force, employing around 2.3million personnel



 

வெள்ளி, நவம்பர் 21, 2014

போதைப்பொருட்கள் உபயோகித்த முன்பும் பின்பும் நமது மனித இன முகங்கள்


இதெல்லாம் இங்கிலாந்தில்


 போதைப்பொருட்கள்
உபயோகிக்கும்  முன்பு-உபயோகித்த பின்பு...இவர் முன்னால்  அழகு ராணியாம்

Why crystal meth is (Breaking) Bad! Police release before and after pictures of former beauty queen to warn others of dangers of drug




  • Jame Lynn France won the Miss Teen Oregon-World pageant in 2009
  • This week she was found in a motel room littered with drugs
  • Police released stark before and after images of the 23-year-old
  • In one she is a fresh-face beauty and in the other she's gaunt and pale 


   
போதைப்பொருட்கள்
உபயோகிக்கும்  முன்பு-உபயோகித்த பின்பு

Erin Wells, before she started using drugs, left, and right, looking pale and spotty, after being arrested




போதைப்பொருட்கள்
உபயோகிக்கும்  முன்பு-உபயோகித்த பின்பு
Jarrod Wells, left, before he started using drugs, and right, after his arrest, faces charges including possession of methamphetamine, delivery of methamphetamine within 1000 feet of a school, child neglect, heroin possession, frequenting a place where controlled substances are used

செவ்வாய், நவம்பர் 18, 2014

சாமானியனின் நினைவுகள்-1

         சின்னஞ் சிறு வயதுகளில் நமக்கு நடந்தவை எதுவும் சரியாக நினைவுக்கு வருவதில்லை ஆனால் சில நினைவுகள் எவ்வளவு வயதானாலும் மறக்காது போல இருக்கின்றது...இது எல்லோருக்கும் சாதாரணமாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன் .
        எனக்கு 3 அல்லது 4 வயது இருக்கும் எனது சகோதரி ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது  அதில் நான் மணமக்களுடன் சேர்ந்து அவர்களது கைகளில் பொரி  அள்ளிப்போட்டேன் ...வேறெந்த சம்பவமும் அந்நிகழ்வில் நினைவிலில்லை .
      ஒருமுறை உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றபோது அவர்கள் உபசரித்து அருந்த பால் கொடுத்தனர் ..அதனை வாங்கி குடித்தவுடன் பால் ரொம்பவும் தண்ணீராக இருக்கின்றது என என் அப்பாவிடம் அவர்கள் எதிரிலேயே கூற அப்பா என்னை அதுமாதிரி எல்லாம் கூற கூடாது என்று அறிவுறுத்தினார்...இது அப்போது எனக்கு ஒன்றும் தெரியவில்லை ஆனால் இப்போது நினைத்துப்பார்க்கும்போது சங்கடமாக உள்ளது. எனது அப்பாவிற்கும் , அந்த உறவினருக்கும் தர்மசங்கடமாக இருந்திருக்கும் ..
       அதே வயதில்தான் ஒரு தீபாவளிக்கு பட்டாசுக்கடை வைத்திருந்தார் எனது அப்பா. அங்கிருந்து பட்டாசுகளை என்னிடம் அப்பா கொடுத்து வெய்யிலில் காயவைக்க சொன்னார் அதை எடுத்து வந்து வீட்டில் வைத்துவிட்டு பெரியவர்கள் போல ராக்கெட் வெடியை கையில் வைத்து விட வேண்டும் என்ற ஆசையில் கையில் வைத்து பற்றவைத்து ராக்கெட்டை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டேன் கையில் காயம் ஏற்பட்டது அப்புறம் என்ன தீபாவளிக்கு சிறப்புதான் எனக்குமறக்கமுடியாத தீபாவளி அது ....
    படிப்படியாக நினைவுகள்...வளரும்... 

-சேதுராமன் ராமலிங்கம்.






வெள்ளி, நவம்பர் 07, 2014

குறைந்த விலை பிரெய்லி பிரிண்டர் தயாரித்த இந்திய வம்சாவழி மாணவன் சுபம் பானர்ஜி -Indian-origin boy Shubham Banerjee gets Intel funding for Braille printer

குறைந்த விலை பிரெய்லி பிரிண்டர் தயாரித்த இந்திய வம்சாவழி மாணவன் சுபம்  பானர்ஜி.
Shubham Banerjee was 12 when he closed an early-stage funding round with Intel Capital
இன்டெல் நிறுவனத்திடம் நிதி உதவி பெற்று பார்வையற்றோருக்கு உதவக்கூடிய வகையில் இருபது ஆயிரத்திற்குள்ளாக விலை பெறும் ப்ரெய்லி பிரிண்டரை வடிவமைத்துள்ளார்.
மிக இளவயதில் இன்டெல் நிருவனத்திடம் இத்தொகையைப்பெறுகிறார் 
வயது பன்னிரண்டு முடிந்துள்ளது..ஏழாவது தரநிலையை முடித்துள்ளார்.
இவர் Champion School in San Jose, California வில் படித்து வருகிறார் 

Banerjee and a spokesman for Intel Capital declined todisclose the size of the investment.

இவர் பல கூட்டங்களில் ,மாநாடுகளில் கலந்து கொள்ள இவரது பள்ளியால் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இருந்த பொழுதிலும் தனது பள்ளிப்படிப்பை தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

After reading a fundraising flyer about the blind, Banerjeefelt inspired to turn a high-tech version of Legos, the toybuilding blocks, into a device that could print in Braille. One day, he wants to mass-produce the printers and sell them forabout $350, far less than Braille printers cost now.


Banerjee says he gets mostly As and Bs as a student at the Champion School in San Jose, California. 
Teachers have given him time off to attend events like the conference in India and the Intel Global Capital summit this week in Huntington Beach, California. 
-சேதுராமன் இராமலிங்கம்.

புதன், நவம்பர் 05, 2014

வீடற்றவர்களுக்கு உணவு வழங்கியதால் 90-வயது மனித நேயர் கைது ..Florida charity worker, 90, is arrested for FEEDING the homeless...

   இந்த 90-வயதிலும் ஏழைகளுக்கு உணவளிப்பதையே வேலையாக கொண்டுள்ள இந்த இளைஞர் கூ றுகிறார்  "இந்த ஏழைகளிலும் ஏழைகளிடம் ஒன்றும் இல்லை..கூரையாக அவர்களது தலைகளைத்தவிர .....  அவர்களை எவ்வாறு புறக்கணிப்பீர்கள் " 

இவருக்கு வழங்கப்பட்டது அறுபது நாட்கள் சிறை மற்றும் $5௦௦ டாலர்கள் அபராதம்...

# அர்னால்டு அபோட்  கடந்த   23-ஆண்டுகளாக 
   வீடற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

#புளோரிடா மாகாணத்தில் போடப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி பொது
  இடத்தில் மறைமுகமாக மீன் மற்றும் அப்பம் உணவுடன் சேர்த்து வழங்கக்
  கூடாது.

#முன்பொருமுறை கடற்கரையில் உணவு வழங்கக்கூடாது என்று கைது
  செய்யப்பட்டு  பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று  சாதகமாக தீர்ப்பு
  பெற்றார்.

Hands off that plate! Officers demanded that Mr Abbott stop feeding the homeless people at once
உணவைக்கீழே போடுங்கள்....கைகளை எங்களிடம் கொடுங்கள் எனும் காவல்துறையினர்...

 He was arrested and charged along with two ministers from the Sanctuary Church, which prepares hundreds of meals to dish out every week in their kitchen.

Familiar fight: In 1999, the city tried to stop Abbott from feeding the homeless on Fort Lauderdale Beach, prompting a lawsuit, which he won. Now he said he will fight the new law and take the city back to court

அறுபது நாட்கள் சிறை மற்றும் $5௦௦ டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

We will eat! Abbott said he won't turn homeless people away and is planning to bring food to the beach this Wednesday evening with the expectation that he may be hit with another charge
 மக்களோ அதிகாரிகளைப்பார்த்து வெட்கப்படுவதாக கோஷமிடுகின்றனர்

 Onlookers were outraged and shouted 'shame on you!' to officers.

   தான் இந்த வழக்கிலும் வெற்றிபெற்று மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன் என்று தன்னை அர்ப்பணிக்கிறார்..... 

Onlookers were outraged and shouted 'shame on you!' to officers.
At one point an officers yelled at Mr Abbott to 'drop that plate right now!' as if it were a loaded weapon.
'These are the poorest of the poor, they have nothing, they don't have a roof over their heads. How do you turn them away?'

-சேதுராமன் இராமலிங்கம்.