Translate

ஞாயிறு, நவம்பர் 15, 2020

தீபாவளி குழந்தைகள் தினம் -முககவசம்,குளிருக்கான சால்வை வழங்குதல்





 இன்று தீபாவளி, குழந்தைகள் தினம்  14-11-2020 செயங்கொண்டம் நகரில் ,மகிமைபுரம் பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கி வயது மூத்தோர் மற்றும் பிறரைப் சார்ந்து வாழ்வோரை தேடிக் கண்டறிந்து குளிருக்கான சால்வையும், முகக்கவசமும் ரூபாய் 4500/ மதிப்பில் மகிழ்ச்சியுடன் IRCS-செயங்கொண்டம் ஒன்றியம், அரியலூர் மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டன.உதவ வாய்ப்பளித்த அனைவருக்கும் மனமார்ந்து, மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொள்கின்றோம்🙏🏻

வியாழன், செப்டம்பர் 17, 2020

மகிழ்ச்சியுடன் வாழ

 *மகிழ்ச்சியாக வாழ*

1.அனைவரையும் உன்     சக மனிதனாக   

     நினை.

2.அனைவரையும் நம்பு.

3.மற்றவர்களின் நல்ல செயல்களை 

   புகழ்,பாராட்டு,வாழ்த்து.

4.நேர்மறையானவற்றை மட்டுமே 

  மனதில் கொள்க, மற்றும் பேசுக.

5.மாற்றத்தை எல்லா இடத்திலும் 

    விரும்பக.

6.நிகழ் காலத்தை உணர்ந்து வாழ்க.

7.மற்றவர்களின் ஒப்புதலுக்காக 

    காத்திராமல் உன் மனதிற்கு 

    தோன்றும் நல்லவற்றை செய்.

8.மற்றவர்கள் உன்னை பிரதிபலிக்க 

    வேண்டும் என்று ஆசைப்பட 

    வேண்டாம்.

           -சேதுராமன் ராமலிங்கம்,    செயங்கொண்டம்.





செவ்வாய், ஏப்ரல் 07, 2020

கரும்பலகையிலிருந்து மனிதம்

கரும்பலகையிலிருந்து மனிதம்-1(தொடர்).......
சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பாக 27-07-1999 அன்று முதன் முதலாக நான் இப்போது என்னை முழு ஈடுபாட்டுடன் என்பால் தன்னை ஈர்த்துக்கொண்ட ஆசிரியராக இச்சமுதாயம் நியமித்தது.அன்றே அன்னையின் கைகளில் காலை 7மணிக்கே உணவு உண்டு,பகலுணவு பெற்றுக்கொண்டு குறித்த நேரத்தில் செல்ல மிதிவண்டியில் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பேருந்தில் சென்று மற்றுமொரு பேருந்து மீண்டும் என்னை சுமந்து பள்ளிக்கு 5கிமீ தொலைவில்  இதற்கு மேல் நீயே செல் என்று பேருந்து தன் வழியே சென்றது.(வீட்டிலிருந்து 42கி.மீ.தூரம்)அங்கே காத்திருந்த எனது TVS CHAMP(Blue) திரு.புகழ்மணி தலைமை ஆசிரியர் அவர்களின் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றடையும் வழியில் கத்தரி,தக்காளி,மிளகாய் செடிகள் என்னைப்பார்த்து தலையாட்டி வரவேற்று தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இந்தச் சமுதாயத்தில் நல்ல மனிதனாக வாழும் முறையை கற்பிக்க வந்துள்ள என்னை வரவேற்பது போன்ற  மகிழ்ச்சி என்னை உற்சாகப்படுத்தியது.மண்மணம் கமழும் மிகச்சிறிய கிராமமாகிய கோவில் சீமை என்னை தன் பள்ளியின் ஒரு அனுபவமற்ற சிற்பியாக மகிழ்ச்சியுடன் தன் தலைமை ஆசிரியர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்களின் மூலமாக அன்புடன் கூடிய மரியாதையுடன் என்னை வரவேற்று நெகிழச்செய்தது.அன்றே எனது முதல் கற்றல், மற்றும் கற்பித்தல் பணி மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. எனக்கு அளிக்கப்பட்ட நிலைகள்-1,2,3.சின்னஞ்சிறிய மலர்ந்தும் மலராத பூக்கள் போன்ற மாணவர்கள்.அவர்கள் என்னை முதன்முதலில் பார்த்து சற்று தயக்கத்துடன் குழம்பியது  ஏன் என்று எனக்கு புரியவில்லை.அவர்களை அழைத்து சில பாடல்கள் பாடி நானும் மகிழ்ந்தேன்....அப்போதுதான் ஒரு 3ம் நிலை மாணவன் தயக்கத்துடன் அருகே வந்து சார் முதன்முதலில் உங்களை பார்த்த உடன் போலீஸ் என்று எண்ணி விட்டோம் சார் ....அதனால்தான் நீங்க அடிப்பீர்களோ என்று பயந்தோம்....ஆனால் இப்போ எங்களுக்கு பயமில்லை சார்...ஏன்னா எங்களோடயே சேர்ந்து நீங்களும் பாடி ஆடுறீங்களே..............கரும்பலகையிலிருந்து மனிதம் தொடரும்... -சேதுராமன் ராமலிங்கம்,செயங்கொண்டம்.

ஞாயிறு, டிசம்பர் 06, 2015

மழைக்காலத்தை சமாளிக்க எளிய வழிகள் பத்து.........

மழைக்காலத்தை சமாளிக்க எளிய வழிகள் பத்து.
(சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து )
இநத அடைமழைக்காலத்தில் வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு, ஃப்ளு சுரங்கள் மற்றும் டெங்கு வர வாய்ப்பு உண்டு. உணவிலும் வாழ்வியலிலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை அவசியம்.
1. நன்கு தரதரவென காய்ச்சி அருந்திய நீரை மட்டுமே. இளவெதுவெதுப்பான சூட்டோடு மட்டுமே பருகுங்கள்
2. இளவெதுவெதுப்பான நீரை மட்டும் குளிக்க பயன்படுத்துங்கள்.
3. ஆவியில் வெந்த எளிதில் சீரணிக்க கூடிய இட்லி, இடியாப்பம், சோறு, புட்டு, பொங்கல், சாப்பிடவும். கோதுமைச் சப்பாத்தியும் கொடுக்கலாம். மிளகுதூவிய கிழங்கு மதியம் மட்டும் கொஞ்சமாக எடுக்கலாம். பிற மாவுப்பண்டங்கள் வேண்டாம். மிளகு, பூண்டு, சீரகம் போட்ட ரசம் சோறு நல்லது.
4. நோய் எதிர்ப்பாற்றலை உடலில் அதிகரிக்க காரம் தேவைப்படும் இடத்திலெல்லாம் மிளகுத் தூள் பயன்படுத்துங்கள். அன்னாசிப்பூ எனும் star anise-ஐ குருமா போன்ற உணவில் போட்டு சாப்பிடவும். தேநீரில் இலவங்கப்பப்ட்டை, துளசி இலை போட்டு தேநீர் அருந்தலாம்.
5. நிலவேம்புக் குடிநீர் வீட்டில் கண்டிப்பாக இருக்கட்டும். இந்த பொடியைப் போட்டு 250 மிலி நீர் விட்டு சூடாக்கி 60 மிலியாக்க் குறுக்கி கஷாயமாக்கி உணவுக்கு முன்னதாக பருகுங்கள். 6 வய்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30மிலி கொடுக்கலாம். 3-6 வயதில் 15-30மிலி கொடுக்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் எப்போதும் கிடைக்கும்.
6. செஞ்சில் சளி கட்டி இருமலுடன் துன்பப பட்டால், துளசி (ஒருகைப்பிடி அளவு), வெற்றிலை( 2 இலை), மிளகு( 4 எண்ணிக்கை), கற்பூரவல்லி(ஒருகைப்பிடி அளவு) –இதனை போட்டு 250 மிலி நீர் விட்டு சூடாக்கி 60மிலியாக குறுக்கி கஷாயமாக்கி உணவுக்கு முன்னதாக பருகுங்கள்.
7. வெறும் தரையில் படுக்க வேண்டாம். படுக்கை தலையணை உறையை வெயில் தெரியும் போது வெயிலில் போட்டு எடுங்கள். ஈரமான நாட்களில் ஒவ்வாமைத் தும்மல் வர மிக முக்கிய காரணம் ஈரம் பாய்ந்த துவைக்காத தலையணை உறை என்பதை மறக்க்க் கூடாது
8. குழந்தைகளை காது, தலைப்பகுதியை அணைத்த (குரங்கு குல்லா மாதிரி) ஆடை அணிவியுங்கள். இருசக்கர வாகன முன் பகுதியிலோ, சாலையைப் பார்த்த படியோ குழந்தையை உட்கார வைக்காதீர்கள்.
9. வயிற்றுப் போக்கை நிறுத்த கறிவேப்பிலை, சித்த மருந்துகளான சுண்டை வற்றல் பொடி, தயிர்சுண்டிச் சூரணம் பயனளிக்கும். கூடவே உடலில் நீர்த்துவம் குறைந்திடாது இருக்க உப்பு, பனைவெல்லம் கலந்த நீர், இள நீர், நீர்த்த மோர், அருந்துங்கள்.
10. சுரம் 2 தினங்களைத் தாண்டி படிப்படியாக அதிகரித்தாலோ, தோலில் சிவந்த படைகள் இருந்தாலோ, சுரத்தில் துவளும் சூழல் வருவது போலிருந்தாலா, அருகாமையில் உள்ள குடும்ப மருத்துவரை தாமதிக்காது அணுகுங்கள்.
(முடிந்தவரை நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.)