Translate

சனி, ஜூன் 25, 2022

English Lesson plan forVI, VII , VIII, IX, and X June 2nd week.


Greetings to all the teachers. 

       Use the English lesson plans shared here for your better teaching.  This kalvikoodal is a blogspot that aims only at a service without advertising.  

Thank you so much for giving me the opportunity to help of your superior teaching. Post here your best comments to improve myself.

Thank you 🙏🏻.

Sethuraman Ramalingam,MA,BEd, (MSW),

BT Assistant, (Eng),

Model School, A.Kumaramangalam ,Ulundurpet Edn Dt, Kallakurichi Dt-606107.

6 th std English lesson plan for June 2nd week,

7th std English lesson  plan for June 2nd week,

8th std English lesson plan for June 2nd week,

9th std English lesson plan for June 2nd week,

                                  &

10th std English lesson plan for June 2nd week.

திங்கள், ஜூன் 20, 2022

English Lesson plan forVI, VII , VIII, IX, and X June first week.

Greetings to all the teachers. 

       Use the English lesson plans shared here for your better teaching.  This kalvikoodal is a blogspot that aims only at a service without advertising.  

Thank you so much for giving me the opportunity to help of your superior teaching. Post here your best comments to improve myself.

Thank you 🙏🏻

Sethuraman Ramalingam,MA,BEd, (MSW),

BT Assistant,(Eng)

Model School,

A.Kumaramangalam,

Ulundurpet Edn Dt,

Kallakurichi Dt-606107.

6th lesson plan for June 1st week


7th lesson plan for June 1 st week


8th lesson plan for June 1 st week

9th lesson plan for June 1st week

https://drive.google.com/file/d/1nQ9nNPTkXJRUgr_do5o0WZBx3-27E8kX/view?usp=sharing


10th lesson plan for June 1st week

திங்கள், செப்டம்பர் 20, 2021

கரும்பலகையிலிருந்து மனிதம்-3.......(தொடர்)

நேரமும் நாட்களும்  வெகு விரைவாக ஓடிக்கொண்டே இருந்தன.மாணவர்களிடம் இருந்த தயக்கமும், ஒருவித அறியாமையையும் அவர்களிடமிருந்து வெகு தூரம் ஓடிவிட்டன. முதல் பணி நியமனம் என்பதால் பல புதிய அனுபவங்கள் நேர்மறையாகக்கிடைத்தன. 
  ஒரு முறை வட்டார மாவட்ட தொடக்கக்கல்வி திட்டத்தினுடைய வட்டார மேற்பார்வையாளர் எங்களது பள்ளியினை பார்வையிட வந்திருந்தார்.
அப்போது சில மாணவர்கள் எழுத்து கூட்டி படிக்க சிரமப்பட்டனர். அவர் என்னிடம் அம்மாணவர்களின் ”அறிவுக்கண் திறக்காமலேயே இருக்கின்றது, அவைகளை திறந்து இவ்வுலகினை காணச்செய்ய வைக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு” என்றார். 
      அவரது அறிவுரையை சிரமேற்கொண்டு குறைதீர் கற்பித்தலில் குறைவேகக்கற்றல் உடைய மாணவர்களுக்கென சிரத்தையெடுத்து அவர்களையும் மிதவேக கற்கும் மாணவர்களாக மாற்ற 100% முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டேன்.
 தலைமை ஆசிரியர் கூட்டம் வட்டார தலைமையகமான தா.பழூரில் நடை பெரும்.அதில் கலந்து கொள்ள எங்களது தலைமை ஆசிரியர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் சென்று விட்டார்.அன்று முழுமையும் 5 வகுப்புகளையும் மகிழ்ச்சியுடன் மணவர்களோடு மணவர்களாக பாட்டு, விளையாட்டு, நாடகம், பாடம் என பள்ளிக்கூடமே கலைகட்டியது.
எங்களது பள்ளி நேரம் முடிந்த பிறகு , பள்ளி பூட்டப்பட்டு டிவிஎஸ் சேம்ப்பில்
கிளம்பி விட்டேன்.ஒரு 500 மீட்டர் தூரம் சென்றிருப்பேன் ஒரு மஹேந்திரா ஜீப் எனக்கு எதிரே வந்தது. அதில் உள்ளவரை நான் உற்று கவனித்தேன், எனக்கு பணி நியமன ஆணை வழங்கிய  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மரியாதிக்குரிய திரு. ஸ்டீபன் பரமானந்தம் அவர்கள் இருந்தார். ஒஹோ...எங்களது பள்ளிக்குத்தான் செல்கின்றார் என எனது இருசக்கர வாகனத்தை பள்ளியை நோக்கி திருப்பினேன்.
அவர்களும்  இறங்கி என்னை விசரித்தார்கள், பிறகுபள்ளியை திறக்கச்செய்து பள்ளி கடிகாரத்தினையும், அவரது கைக்கடிகாரத்தினையும் ஒப்பிட்டு நேரம் உங்களது பள்ளி கடிகாரத்தில் வேகமாக ஓடுகின்றது என்றார்.அதனை சரி செய்து கொள்ள வேண்டும் என்றார்.உள்ளே சென்று ஆசிரிய் வருகைப்பதிவேடு பார்வையிட்டு அதில் தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி என்று குறிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
 அப்பொது நான் எங்கிருந்து வருகிறேன் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.பதிலலித்துக்கொண்டு இருந்தேன். அங்கே கூடிய ஊர் மக்கள், எங்கள் பள்ளி ஆசிரியரை எங்கும் மாற்றம் செய்து விடாதீர்கள் என்றனர். அதற்கு மா.தொ.க.அலுவலரோ உங்கள் ஆசிரியர் வெகு தூரத்தில் இருந்து வருகின்றார், அவரே மாறுதல் வாங்கிக்கொண்டு சென்று விடுவாரே தவிர, நான் ஒருபோதும் அவரை மாற்றம் செய்ய மாட்டேன் என்றார்.
தொடரும்,
சேதுராமன் ராமலிங்கம்,
ப.ஆ,
செயங்கொண்டம்.

ஞாயிறு, நவம்பர் 15, 2020

தீபாவளி குழந்தைகள் தினம் -முககவசம்,குளிருக்கான சால்வை வழங்குதல்





 இன்று தீபாவளி, குழந்தைகள் தினம்  14-11-2020 செயங்கொண்டம் நகரில் ,மகிமைபுரம் பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கி வயது மூத்தோர் மற்றும் பிறரைப் சார்ந்து வாழ்வோரை தேடிக் கண்டறிந்து குளிருக்கான சால்வையும், முகக்கவசமும் ரூபாய் 4500/ மதிப்பில் மகிழ்ச்சியுடன் IRCS-செயங்கொண்டம் ஒன்றியம், அரியலூர் மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டன.உதவ வாய்ப்பளித்த அனைவருக்கும் மனமார்ந்து, மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொள்கின்றோம்🙏🏻

வியாழன், செப்டம்பர் 17, 2020

மகிழ்ச்சியுடன் வாழ

 *மகிழ்ச்சியாக வாழ*

1.அனைவரையும் உன்     சக மனிதனாக   

     நினை.

2.அனைவரையும் நம்பு.

3.மற்றவர்களின் நல்ல செயல்களை 

   புகழ்,பாராட்டு,வாழ்த்து.

4.நேர்மறையானவற்றை மட்டுமே 

  மனதில் கொள்க, மற்றும் பேசுக.

5.மாற்றத்தை எல்லா இடத்திலும் 

    விரும்பக.

6.நிகழ் காலத்தை உணர்ந்து வாழ்க.

7.மற்றவர்களின் ஒப்புதலுக்காக 

    காத்திராமல் உன் மனதிற்கு 

    தோன்றும் நல்லவற்றை செய்.

8.மற்றவர்கள் உன்னை பிரதிபலிக்க 

    வேண்டும் என்று ஆசைப்பட 

    வேண்டாம்.

           -சேதுராமன் ராமலிங்கம்,    செயங்கொண்டம்.





செவ்வாய், ஏப்ரல் 07, 2020

கரும்பலகையிலிருந்து மனிதம்

கரும்பலகையிலிருந்து மனிதம்-1(தொடர்).......
சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பாக 27-07-1999 அன்று முதன் முதலாக நான் இப்போது என்னை முழு ஈடுபாட்டுடன் என்பால் தன்னை ஈர்த்துக்கொண்ட ஆசிரியராக இச்சமுதாயம் நியமித்தது.அன்றே அன்னையின் கைகளில் காலை 7மணிக்கே உணவு உண்டு,பகலுணவு பெற்றுக்கொண்டு குறித்த நேரத்தில் செல்ல மிதிவண்டியில் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பேருந்தில் சென்று மற்றுமொரு பேருந்து மீண்டும் என்னை சுமந்து பள்ளிக்கு 5கிமீ தொலைவில்  இதற்கு மேல் நீயே செல் என்று பேருந்து தன் வழியே சென்றது.(வீட்டிலிருந்து 42கி.மீ.தூரம்)அங்கே காத்திருந்த எனது TVS CHAMP(Blue) திரு.புகழ்மணி தலைமை ஆசிரியர் அவர்களின் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றடையும் வழியில் கத்தரி,தக்காளி,மிளகாய் செடிகள் என்னைப்பார்த்து தலையாட்டி வரவேற்று தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இந்தச் சமுதாயத்தில் நல்ல மனிதனாக வாழும் முறையை கற்பிக்க வந்துள்ள என்னை வரவேற்பது போன்ற  மகிழ்ச்சி என்னை உற்சாகப்படுத்தியது.மண்மணம் கமழும் மிகச்சிறிய கிராமமாகிய கோவில் சீமை என்னை தன் பள்ளியின் ஒரு அனுபவமற்ற சிற்பியாக மகிழ்ச்சியுடன் தன் தலைமை ஆசிரியர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்களின் மூலமாக அன்புடன் கூடிய மரியாதையுடன் என்னை வரவேற்று நெகிழச்செய்தது.அன்றே எனது முதல் கற்றல், மற்றும் கற்பித்தல் பணி மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. எனக்கு அளிக்கப்பட்ட நிலைகள்-1,2,3.சின்னஞ்சிறிய மலர்ந்தும் மலராத பூக்கள் போன்ற மாணவர்கள்.அவர்கள் என்னை முதன்முதலில் பார்த்து சற்று தயக்கத்துடன் குழம்பியது  ஏன் என்று எனக்கு புரியவில்லை.அவர்களை அழைத்து சில பாடல்கள் பாடி நானும் மகிழ்ந்தேன்....அப்போதுதான் ஒரு 3ம் நிலை மாணவன் தயக்கத்துடன் அருகே வந்து சார் முதன்முதலில் உங்களை பார்த்த உடன் போலீஸ் என்று எண்ணி விட்டோம் சார் ....அதனால்தான் நீங்க அடிப்பீர்களோ என்று பயந்தோம்....ஆனால் இப்போ எங்களுக்கு பயமில்லை சார்...ஏன்னா எங்களோடயே சேர்ந்து நீங்களும் பாடி ஆடுறீங்களே..............கரும்பலகையிலிருந்து மனிதம் தொடரும்... -சேதுராமன் ராமலிங்கம்,செயங்கொண்டம்.