Translate

வியாழன், அக்டோபர் 30, 2014

இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர் அழகிய பறவை

      இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். ஆங்கிலத்தில் இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" Horn bill என அழைப்பார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஒரு உலங்கு வானூர்தி [Helicopter] பறப்பதைப் போல இருக்கும். அதே போல ஒலி எழுப்பக்கூடியவை. பெரிய அலகை உடையது. அலகுக்கு மேலே கொண்டை (காஸ்க்) போன்ற அமைப்பு இருக்கும். இது பறவைக்கு இருவாய்கள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தரும். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள்  வாழக்கூடியது. 


A pair of Knobbed Hornbills (also known as Sulawesi Wrinkled Hornbill) at Walsrode Bird Park, Germany. The female is in the foreground and the male is behind.

கூடு

   இருவாச்சி பறவைகள் இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். கூடு என்பது மரங்களில் உள்ள பொந்துகள்தான். பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும்.

Indian Grey Horn bill
   பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன் மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். சுமார் 7வாரம் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை சிறிய துவாரம் வழியே பெண் பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாக கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் பொரிந்தபின்னர் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும். இப்பறவைகளை மழைக்காட்டின் குறியீடு என்பர்.

Greater Indian Hornbill [Buceros bicornis]

இனப்பெருக்க காலம்

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இனப்பெருக்க காலமாகும்
Helmeted Horn bill-Buceros

உணவு

அனைத்துண்ணிகளான இருவாச்சிகள் பழங்கள் ,பூச்சிகள் , சிறு விலங்குகள் முதலியவற்றை உண்ணும். மேலும் இவற்றின் நாக்கு குட்டையாக இருப்பதால் இவற்றால் இரையை விழுங்க இயலாது.  
 Drawing of two great Indian hornbills (Buceros bicornis). One is completely visible (the male) and with its bill is reaching a fig to its mate through a small opening in a tree out of which the mate's bill is partially visible.

எனவே உணவை அலகின் நுனியில் இருந்து தூக்கிப்போட்டு சிறிது சிறிதாக அலகின் உட்பகுதிக்கு நகர்த்தும்.

Philippines Horn bill

   கேரள மாநிலத்தில் இருவாச்சிகளை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர். இலக்கியங்களில் இவற்றை மலை முழுங்கான் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மலபார் இருவாச்சி

   தமிழகத்தில் காணப்படும் நான்கு வகை இருவாச்சிப்பறவைகள் 1. பெரும் பாத இருவாச்சி, 2. மலபார் இருவாச்சி, 3.சாம்பல் நிற இருவாச்சி, 4. மலபார் பாத இருவாச்சி. இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்னிந்தியாவில் காணப்படுபவை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக