Water A.T.M.S
மாதம்
மும்மாரி பெய்த தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை என்று தவித்து வருகிறோம்.
ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய பாலைவன பூமியான ராஜஸ்தானில் இப்போது தண்ணீர்
பிரச்னை அவ்வளவாக இல்லையாம். காரணம் வாட்டர் ஏ.டி.எம்., (water ATM)
-கள்தான் என்கிறார்கள்.
முன்பெல்லாம் இந்தப் பகுதிகளில் தண்ணீர் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், அசுத்தமாகவும் குடிப்பதற்கு தகுதியற்றதாகவும் இருககும். ஆனால் இப்போது அப்பகுதி கிராமங்களில் தண்ணீர் பஞ்சமே இல்லை. 24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. அதற்கு காரணம் வாட்டர் ஏ.டி.எம்.தான் என குடித்து.... மன்னிக்கவும், அடித்து சொல்கிறார்கள். (water ATMs). 24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் சப்ளை செய்யும் இந்த 'ஜீவன் அம்ருத்' திட்டத்தை இன்னும் பல கிராமங்களில் விரிவு படுத்த ராஜஸ்தான் பப்ளிக் ஹெல்த் இன்ஜினீரிங் டிப்பார்ட்மெண்ட் திட்டம் தீட்டி வருகிறது. ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் மேலும் பல தண்ணீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளில் 'பரிமல் பவுன்டேஷன்' நவீன விஞ்ஞான முறையில் சுத்தமான தண்ணீர் ஏ.டி.எம்-கள் மூலம் சப்ளை செய்துவருகிறது. இந்த திட்டத்திற்கு 'சர்வஜல்' என்று பெயர். ஹிமாச்சல் பிரதேஷ் தலை நகர் சிம்லாவில் தற்போது வாட்டர் ஏ.டி.எம்.கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் 50 பைசாவுக்கு 1 லிட்டர் சுத்தமான நீர் கிடைக்கிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து விரிவுபடுத்த அரசாங்கம் யோசித்து வருகிறது. டெல்லியில் வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்லி அரசாங்கமும் வாட்டர் ஏ.டி.எம்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது. போகிறபோக்கைப் பார்த்தால் நாடு முழுக்க பணம் எடுக்கும் வங்கி ஏ.டி.எம்களுக்கு இணையாக வாட்டர் ஏ.டி.எம் வந்துவிடும்போல் இருக்கிறது. எது எப்படியோ ஏடிஎம்களிலிருந்து எடுக்கும் தண்ணீரை பணம் போல(!?) மக்கள் செலவு செய்யாமல் இருந்தால் சரி! -என்.மல்லிகார்ஜுனா, கே.ஆர். ராஜமாணிக்கம் -Courtesy-Vikatan. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக