Translate

புதன், ஜனவரி 11, 2012

சித்தி எனும் அரக்கியிடம் சிக்கிய குழந்தை : சுற்றிய கிரைண்டர் கல் மீது முகத்தை தேய்த்த கொடூரம்


திருப்பூர்: நான்கு வயது குழந்தை முகத்தை கிரைண்டரில் வைத்து அரைத்த சித்தி கொடுமை, திருப்பூரில் நடந்துள்ளது. திருப்பூர், நல்லூர் பொன்கோவில் நகரில் வசிப்பவர் சரவணன்; மனைவி சங்கீதா. இவர்களின் 4 வயது குழந்தை லோசனி; எல்.கே.ஜி., படிக்கிறார். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், சங்கீதா, திருவண்ணாமலையை அடுத்த ஆத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சரவணன், விஜி என்ற பெண்ணை திருமணம் செய்து, அதே பகுதியில் வசித்து வந்தார். சங்கீதாவுக்கு பிறந்த லோசனியை, விஜி துன்புறுத்தியுள்ளார். இதையறிந்து சங்கீதா குழந்தையை கேட்டார்; சரவணன் கொடுக்கவில்லை. இதன்பின், இருவரும், குழந்தையை அவ்வப்போது துன்புறுத்தினர்.

தகவல் தெரிந்ததும் குழந்தையை மீட்ட, "சேவ்' அமைப்பு தலைவர் ஆலோஷியஸ் கூறியதாவது: சரவணன் வீட்டின் அருகில் இருந்தவர்கள், ஹெல்ப் லைன் 1098க்கு தொடர்பு கொண்டனர். அப்பகுதிக்கு சென்று விசாரித்த போது, குழந்தை மீது துணியை போட்டு அழைத்து வந்த விஜி, "கடந்த வாரம் ஒரு விபத்தில் சிக்கியது. அதனால், முகமெல்லாம் காயமாகியுள்ளது' என்றார். முகத்தை திறந்து காண்பிக்க மறுத்தார். போலீசை அழைப்போம் எனக் கூறியதும், குழந்தையை காண்பித்தார். சிகிச்சைகாக குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். "கோபம் வந்தால், சித்தி, ஓடும் கிரைண்டர் முன் முகம் காட்டுவார். சத்தம் போட்டால், கிரைண்டருக்குள் தூக்கி போட்டு உன்னையும் சேர்த்து அரைத்து விடுவேன் என மிரட்டுவார். இரண்டு, மூன்று முறை ஓடும் கிரைண்டரில் என் முகத்தை வைத்து உரசியுள்ளார். தூங்கி எழுந்ததும், குச்சியை வைத்து என் மூக்கின் உட்பகுதியில் இடித்து விடுவார். இரவில் பழுக்க காய்ச்சிய கம்பியை வைத்து கை, கால், பின்புறம் சூடு போடுவார்' என, மருத்துவமனையில் அழுது கொண்டே குழந்தை தெரிவித்தது. இவ்வாறு ஆலோஷியஸ் கூறினார்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லோசனியை பார்க்க சென்ற கலெக்டர் மதிவாணன் கூறும் போது, ""வெளியே சொல்ல முடியாத அளவு குழந்தையை கொடுமைப்படுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லை. மருத்துவமனைக்குள் புகுந்து கழுத்தை நெரித்து கொன்று விடக்கூடும். எனவே, தனியார் மருத்துவமனையிலோ, "சேவ்' அமைப்பு பாதுகாப்பிலோ வைத்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்,'' என்றார். இச்சம்பவத்தையடுத்து, சரவணன், விஜி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

திங்கள், ஜனவரி 02, 2012

எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்களுக்கு முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை


முனைவர்பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உதவித்தொகை வழங்குகிறது.
யு.ஜி.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2010-2011ம் ஆண்டுக்கான முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்களில் 100 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், சமூகவியல், மனிதவியல் பிரிவுகளில் ஆராய்ச்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த உதவித்தொகையைப் பெற, வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். நேரிலோ, தபால் மூலமோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்க, www.ugc.ac.in/pdfss என்ற இணையப் பக்கத்தையும், மேலதிக விவரங்களுக்கு www.ugc.ac.in என்ற இணையப்பக்கத்தையும் அணுகலாம்.
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scholarship : எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்களுக்கு முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description : 

ஸ்ரீ ரத்னா டாடா அறக்கட்டளை உதவித்தொகை


தகுதி:
கல்வி தகுதி: 
(i) மாணவர் இந்தியராக இருக்க வேண்டும்.
(ii) இளநிலை படிப்பில் இரண்டாம் ஆண்டு படிப்பவராகவோ அல்லது முதுகலை பட்டபடிப்பு படிப்பவராகவோ இருக்க வேண்டும்.  
 
விண்ணப்பிக்கும் முறை:  
விண்ணப்பத்துடன் கல்வி கட்டணம் செலுத்திய ரசிது அல்லது தொழில் படிப்பில் சேர்க்கைக்கான கடிதம் மற்றும் கடைசியாக  எழுதிய தேர்வின் மதிப்பெண் நகல் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
 
அறிவிப்பு: செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு. வெளியிடப்படும்.
 
காலக்கெடு : பல்கலை அறிவிப்பில் இடம் பெறும்.
Scholarship : ஸ்ரீ ரத்னா டாடா அறக்கட்டளை உதவித்தொகை
Course : பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
Provider Address : Secretary and Chief Accountant, Sir Ratan Tata Trust, Bombay House, Homi Mody Street, Fort, Mumbai-400 001. http://www.srtt.org/
Description :  

இந்திய ரிசர்வ் வங்கி இளம் மாணவர் பரிசுத் திட்டம்,


இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ., ) இந்திய வங்கித்துறை மற்றும் ஆர்.பி.ஐ.,  மீதான ஆர்வத்தையும் , விழிப்புணர்வையும் ஏற்படுத்த ஆர்.பி.ஐ., இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தை துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆர்.பி.ஐ.,  நாடெங்கிலுமான  போட்டித் தேர்வு வாயிலாக அதிகபட்சம் இளம் மாணவ மாணவிகளை தெரிவுசெய் தேர்வு செய்து மாணவர் உதவி தொகை வழங்க இருக்கிறது.
தகுதி: இந்தியாவில் எந்த அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலும் எந்தப்பாடதிலும் தமது பட்ட படிப்பைத் தொடரும் 18 லிருந்து 23 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் போட்டித் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. தெரிவுசெய் தேர்வு இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ம் தேதி நடைபெறும். தெரிவுசெய் தேர்வின் முடிவுகள் 2011மார்ச் மத்தியில் அறிவிக்கப்படலாம்.
தெரிவுசெய் தேர்வு ஆர்.பி.ஐ., மற்றும் இந்திய வங்கிகளின் பங்கு மற்றும் செயல்பாடுகளை மையமாக கொள்ளும். இத்தேர்வு ஆங்கிலத்திலும், பிற முக்கிய பிராந்திய மொழிகளிலும் நடைபெறும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆர்.பி.ஐ., யின் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகங்களில் 2 முதல் 3 மாதங்களுக்கு செயல் திட்டங்களில் பணியாற்ற வேண்டும் , அந்த காலத்தில் தொகுப்பு உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ 7500/- வழங்கப்படும் . வெளியூர் நபர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிக்கு ஆர்.பி.ஐ., உதவும்.
பரிசாளர்களுக்குஆர்.பி.ஐ., யில் பணி நியமனம் கோர எந்தவித உரிமையும் இல்லை . முந்தைய ஆண்டுகள் எதிலும் ஆர்பிஐ இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்று ஆர்.பி.ஐ., யில் பணிபுரிந்தவர்கள் எவரும் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் அல்ல.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்,
ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசுத் திட்டம்,
செயல் திட்டம் எண் 9277
அஞ்சல் பெட்டி எண் 7639
மலாட்(மேற்கு), மும்பை
(விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 22 , ஆன்லைன் வாயிலாக அக்டோபர்  14ம் தேதிக்குள்) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசு திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் ஆர்.பி.ஐ., இணைய தளம் www.rbi.org.in/youngscholars.aspx  என்கிறஇணைப்பின் கீழும் , "எம்ப்லாய்மென்ட் நியூஸ்" மற்றும் "ரோஜ்கார் சமாச்சார்" பத்திரிக்கைகளிலும் கிடைக்கிறது.
Scholarship : ரிசர்வ் வங்கி இளம் மாணவர்கள் பரிசுத்திட்டம்
Course : 
Provider Address : செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசுத் திட்டம், செயல் திட்டம் எண் 9277 அஞ்சல் பெட்டி எண் 7639 மலாட்(மேற்கு), மும்பை www.rbi.org.in/youngscholars.aspx
Description :  

உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு பரிந்துரை | Kalvimalar - News

உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு பரிந்துரை | kalvikoodal

இந்திய அறிவியல் மாநாடு 3ம் தேதி துவக்கம் | Kalvimalar - News

இந்திய அறிவியல் மாநாடு 3ம் தேதி துவக்கம் /kalvi koodal

ஞாயிறு, ஜனவரி 01, 2012

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை  கொண்ட  சோழபுரம் 

Pongal bonus announced for TN Govt Staffs | பொங்கல் போனஸ் ; ஜெ., அள்ளி கொடுக்கிறார் ; புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி Dinamalar

பொங்கல் போனஸ் ; ஜெ., அள்ளி கொடுக்கிறார் ; புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி

Nobel laureate Venkatraman Ramakrishnan honoured with knighthood | நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் "நைட்ஹூட்' விருது அறிவிப்பு Dinamalar

Nobel laureate Venkatraman Ramakrishnan honoured with knighthood | நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் "நைட்ஹூட்' விருது அறிவிப்பு Dinamalar

தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு

தொடக்க பள்ளிகளில் வேலை நேரம்  அதிகரிப்பு :   நாம் தான் 210  நாட்கள் வேலை செய்யப் போகிறோமே பிறகு எதற்கு இந்த அரை   மணி நேர அதிக வேலை ? நம்மிடம் படிக்கும் மாணவர்கள் ஒன்றும் கல்லுரி மாணவர்களோ  ,வயது வந்த மாணவர்களோ அல்ல .பச்சை மண் இதனை ஒரேயடியாக சிரமப் படுத்துவதும் சரியல்ல .நம் தலைவர்கள்   இதனை பரிசீலித்து ஒன்றிணைந்து செயல்  பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
        

We will depend this power source guess

இது என்ன  என்று ஊகியுங்கள் பார்க்கலாம்

பாம்பு தின்னும் ஊரில்

ஆடி அடங்கும் வாழ்க்கை 

 
 யாருக்கு ?


அநியாயம் புரியாதவனுக்கா ?


அமைதியாக வாழ்பவனுக்கா ?

 
அண்ணா ஹசர 1000 பேர் வந்தாலும்

 
உனக்கு சாவே கிடையாது ஊழலே ,

 
திருகடைஊர் செல்ல வேண்டியதில்லை நீ 


உன்னை பூஜிக்க சாதாராண மனிதனும் வேண்டும் 


இல்லாவிட்டால் அவனை இவ்வுலகம் 


பொல்லாதவன் ஆக்கிவிடுதே 


பைத்தியம் அவனுக்கு பிடித்து விட்டது 


என்றல்லவோ நகைக்கிறது 


அவனும் ஒரு நாள் 


உன்னை பூஜிக்க சாதாராண மனிதனும் வேண்டும் 


இன்றே என்றல்லவோ அவனும் 


வேகமாய் கேவி சிரிக்கிறான் 


பாம்பு தின்னும் ஊரில் தலை எனக்கு 


என்று வெடுக்கென்று தின்பதைப் பார்த்தால் 


அவனை போல் ஒருவன் 


நானும் ஆகி விடுவேன் என்பதில் 


ஊழலளவும் சந்தேகமில்லை 
                           சேது ராமன் .இரா

PITY PLEASE

அம்மா உனது பிள்ளைகளை நீயே கை விடலாமா ?

பாம்பு மட்டுமே தனது குட்டிகளை  உண்ணும் என நம்பியது  தவறோ?

சிங்கம் தனது இறந்த குட்டியை புதைப்பதாக எண்ணி  உண்ணும்,

உன் கீழே  வந்த கோழிக்குஞ்சை கழுகு    போல கிழிக்கலாமா?

தான்   ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அது உன்மையா?                       
                                       சேதுராமன். இரா