தமிழகத்தில்
உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் இருந்து முப்பருவ
பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பாடத்திட்டத்தின் கீழ் ஒரு
பருவத் தேர்வுக்கு அதாவது காலாண்டு வரை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஒரே
ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு புத்தகத்திலேயே 5
பாடங்கள் அமைந்திருக்கும். அரையாண்டுத் தேர்வுக்கு இரண்டாவது பருவப்
புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அது முடிந்ததும் 3வது பருவப்
பாடப்புத்தகத்தை எடுத்துச் சென்று படிக்க வேண்டும்.
பாடச்
சுமையும், பாடப்புத்தகங்களின் சுமையும் குறைக்கப்பட வேண்டும் என்ற
நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ள முப்பருவப் பாடத்திட்டத்தின் சாராம்சம்
குறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.1 முதல் 8ம் வகுப்பு வரையிலான முப்பருவப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடங்கள் குறித்து அறிந்து கொள்ள இங்கே கிளிக்செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக