Translate

புதன், மே 02, 2012

UGC EXTENDEDUPTO MAY FOURTH FOR EXAM

யூ.ஜி.சி நடத்தும் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதி தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 4 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

02-05-2012 அன்று வெளியிட்டது
கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவுசெய்வதில் பட்டதாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைக் குறித்து யூ.ஜி.சி.யின் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புதிய தலைமுறை விளக்கம் கேட்டது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்க முற்படுவதால் இணையதளத்தில் நெரிசல் ஏற்படுவதாக யூ.ஜி.சி விளக்கம் அளித்தது. இந்தப் பிரச்னை காரணமாக விண்ணப்ப தேதியை மே நான்கு வரை நீட்டிப்பதாகவும் யூ.ஜி.சி தெரிவித்தது. மே இரண்டாம் தேதிக்குள் வங்கி வரைவோலை எடுத்தவர்கள், ஆஃப்லைன் முறையில் விண்ணப்ப படிவத்தை எடுத்து, பின்னர் அதனைப் பூர்த்தி செய்து அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தேர்வு மையத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் யூ.ஜி.சி தெரிவித்தது. விரிவுரையாளர் தகுதித் தேர்வை எழுத இதுவரை கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த தேர்வில் முதல் முறையாக பதிலை தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக