Translate

ஞாயிறு, ஜூன் 10, 2012

குழந்தைத் தொழிலாளர்

குழந்தைத் தொழிலாளர்



குழந்தைத் தொழிலாளருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பொதுவான முதல் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் அனைத்தும் 19ம் நு£ற்றாண்டின் முதல் பாதியில் பிரிட்டனில் அமல்படுத்தப்பட்டது.ஒன்பது வயதுக்குட்பட்பட்ட குழந்தைகள் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஒருநாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
        குழந்தைத் தொழிலாளர் (child labour) என்பது தொடர்ந்து, நீடித்தப் பணியில் குழந்தைகள் தொழிலாளர்களாக ஈடுபடுவதைக் குறிக்கிறது. எல்லா நாடுகளிலும் சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரிய சர்வதேச நிறுவனங்களில் கூட இக்கொடுமை நடைபெறுகிறது. கஹதோதக் குழந்தைத் தொழிலாளர் பணியமர்த்தப்படுவது வரலாற்றுக் காலத்தில் கூறப்பட்டாலும், உலகளாவிய கல்வி முறை, தொழில்துறையில் ஏற்பட்ட வேலை மாற்றம், வேலையாளர்களுக்கும், குழந்தைகளின் உரிமைகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துக்களால் குழந்தைத் தொழிலாளர் முறை தற்போது உலகெங்கும் பரவியுள்ளது.
              வளர்ச்சியடைந்த பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளரின் வயது மாறுபட்டதாக உள்ளது. பள்ளி வேலை மற்றும் வீட்டு வேலை தவிர பிற வேலைகளுக்கு குழந்தைகள் பணியமர்த்தக்கூடாதென வளர்ச்சியடைந்த நாடுகள் கூறுகின்றன.[1] குறிப்பிட்ட வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கண்டிப்பாக பணியமர்த்தக்கூடாது. இந்த குழந்தைத் தொழிலாளர் வயது வித்தியாசமும் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, 16 வயது நிறைவு பெறுவதற்கு முன்பாக குழந்தைகளைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதுடன், பெற்றோரின் சம்மதமில்லாமல் வேலைக்கு அனுமதிக்கக்கூடாது என்பதாகும்.


 தற்போதைய நிலை

2006ம் ஆண்டில் வியட்நாம், ஹோ சி மின் நகரத்தில் கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்யும் இளஞ்சிறுவன்
குழந்தைத் தொழிலாளர் முறை உலகின் பல்வேறு பகுதிகளிலும், தொழிற்சாலை[2] மற்றும் சுரங்கங்களிலும் உள்ளது. பாலியல் தொழில், குவாரி, விவசாயம், பெற்றோரின் தொழிலில் உதவுதல் மற்றும் சிறிய வணிகத்தில் (உணவுப் பொருள் விற்பனை) குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். சில குழந்தைகள் சுற்றுலா வழிகாட்டியாகவும், ஓட்டல் மற்றும் கடைகளில் வெயிட்டர்களாகவும் வேலை செய்கின்றனர். சில குழந்தைகள் அட்டை தயாரித்தல், ஷூக்களை பாலீஷ் செய்தல், குடவுனில் பொருட்களை அடுக்குதல், சுத்தம் செய்தல் போன்ற கடினமான பணிகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். தொழிற்சாலை மற்றும் இனிப்புகடைகளில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் முறைப்படுத்தப்படாமல், மறைமுகமாக பணிக்கு உட்படுத்தப்படுகின்றனர். தெருக்களில் பொருட்களை விற்பனை செய்தல், விவசாயப் பணி செய்தல் போன்ற மறைமுகப் பணிகளில், தொழிலாளர் ஆய்வாளர்களின் கண்காணிப்பு இல்லாத இடங்களிலும், பத்திரிக்கைகளின் கண்களுக்கு எட்டாத வகையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். எந்த தட்பவெப்பநிலையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் குறைந்த சம்பளத்தில் குடும்பச் சூழ்நிலைக்காக பணிபுரிகின்றனர்.[3]
யுனிசெப்அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட, 158 மில்லியன் சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைத் தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.[4]ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புகள் குழந்தைத் தொழிலாளரின் உழைப்புச் சுரண்டலை கவனத்தில் கொண்டுள்ளது.[4][5] ஐ.நா., குழந்தைகள் உரிமை பாதுகாப்பின் உடன்படிக்கை 32வது விதியில் கூறப்பட்டுள்ளதாவது,
... அபாயகரமான தொழல்கள் அல்லது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் தொழில்கள், குழந்தைகளின் உடல், மனம், பழக்கவழக்கத்தில் அபாயம் தரும் தொழில்கள் மற்றும் சமூகமேம்பாட்டைத் தடுக்கும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுவதை மாநிலக் கட்சிகள் கண்டறிய வேண்டும். ஏற்கனவே உலகம் முழுவதிலும் 250 மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.[4]
         1990 ஆம் ஆண்டுகளில் சோமாலியா மற்றும் ஐக்கிய நாடுகளைத் தவிர உலகில் உள்ள பிற நாடுகள் அனைத்தும் குழந்தைகள் உரிமைக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. சோமாலியாவை வழிநடத்தும் அரசாங்கம் இல்லாததால், தாமதமாக 2002 ஆம் ஆண்டு சோமாலியா அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உறுதியான சர்வதேச  மொழிகளில் சட்ட விரோதமான குழந்தைத் தொழிலாளர் முறையை ஒத்த  விதியை சி.ஆர்.சி வழங்கியது. எப்படி இருந்தாலும் அந்த உடன்படிக்கை குழந்தைத் தொழிலாளர் விதி மீறலை உருவாக்கவில்லை. .
காம்பியாவில் டயரை (சக்கரம்) சரிசெய்யும் சிறுவன்
ஏழைக்குடும்பங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் வருமானத்தைச் சார்ந்துள்ளனர். சிலநேரங்களில் குடும்பத்திற்கான வருமானமே குழந்தையிடமிருந்து தான் என்ற நிலையில் உள்ளனர். தொழில்துறையில் இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால் மறைக்கப்பட்டு விடுகிறது. குழந்தைத் தொழிலாளர் விவசாயம் தொடர்பான பிற பணிகளிலும், நகர்ப்பகுதிகளில் வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையானது குழந்தைகளுக்கான குறுகிய கால வருமானம் மற்றும் நீண்ட கால பயன்கள் என்ற இரண்டு சவால்களை வலியுறுத்த வேண்டியுள்ளது. குறிப்பிட்ட வயது வரை வேலை பார்க்கக்கூடாது என்பதை சில இளையோர் உரிமை குழுக்கள் எதிர்க்கின்றன. அவர்களின் விருப்பங்கள் மறுக்கப்படுவதாகவும், மனித உரிமை மீறலாகவும், பணத்திற்காக வேலை செய்யவும் இளையோர்கள் விரும்புகின்றனர்.
            1999 ஆம் ஆண்டு உலகளவில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான ஓர் இயக்கம் உருவெடுத்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். 1998 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த இயக்கம் உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, அதிகளவு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் பங்கேற்க வைத்தது. ஜெனிவாவில் நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் அமைப்பு கருத்தரங்கில் இந்த இயக்கம் நிறைவுபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் குழந்தைத் தொழிலாளர் அமைப்பு உடன்படிக்கையை ஆதரித்தும், குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான அணுகுமுறையும் எதிர்த்தும் பேசினர். தொடர்ந்த ஆண்டில் இந்த உடன்படிக்கையானது ஜெனிவாவில் நடந்த குழந்தைத் தொழிலாளர் அமைப்பு கருத்தரங்கில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் அமைப்பு வரலாற்றில், இன்று 169 நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்டதற்கு உலகளவில் நடந்த விழிப்புணர்வே மிகப்பெரிய காரணமாகும்.
குழந்தைத் தொழிலாளர் பொருளாதாரம் என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதார மறுபார்வையில் கவுசிக் பாசு மற்றும் பாம் ஹோவாங் வான் ஆகியோர், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முக்கியக் காரணம் குடும்ப வறுமையே என்ற வாதத்தை முன்வைத்தனர். மேலும் குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டத்துக்கு எதிராக, முதலாளிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் முறையை தடைசெய்யும் போது பெரியோர்களுக்கு அதே வேலைக்கு அதிக சம்பளம் தரவேண்டியுள்ளது. இந்தியா மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. சிஏசிஎல் (CACL) மதிப்பீட்டின் படி இந்தியாவில் மட்டும் 70 முதல் 80 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய அளவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்தப்படுவதை தடைசெய்யும் சட்டம் இருந்தாலும், அவ்வப்போது சட்டம் புறக்கணிப்புக்குள்ளாகிறது ஹேன்ஸ், வால் மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் இனிப்பகங்களில் 11 வயது குழந்தைகள் கூட ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலை செய்கின்றனர்.
          ஆசியாவில் 61 சதவீதமும், ஆப்பிரிக்காவில் 32 சதவீதமும், லத்தீன் அமெரிக்காவில் ஏழு சதவீதமும், அமெரிக்காவில் ஒரு சதவீதமும், கனடா, ஐரோப்பா மற்றும் செழிப்பான நாடுகளிலும் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆசியாவில் நடைபெறும் வேலையில் 22 சதவீத வேலையானது, குழந்தைத் தொழிலாளர்களாலும், லத்தீன் அமெரிக்காவில் 17 சதவீத வேலை, குழந்தைத் தொழிலாளர்களாலும் செய்யப்படுகின்றன. குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை விகிதம் நாட்டுக்கு நாடும், நாடுகளுக்குள்ளேயும் நிறைய அளவில் வேறுபட்டு காணப்படுகின்றன.
குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க வேண்டுமானால் காவல்துறையினர், தொழிற்சாலைகளுக்கு அடிக்கடிச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

 தற்போதைய குழந்தைத் தொழிலாளர் சம்பவங்கள்

மொராக்கோவில் உள்ள அயிட் பென்ஹாடோவில் தறி வேலை செய்யும் இளஞ்சிறுமி (மே 2008)
      பி.பி.சி., சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. பி.பி.சி.யின் பனோரமா தொலைக்காட்சித் தொடரில் துணிகள் உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர் ஈடுபடுத்துவதை பிரைமார்க் குறும்படமாக வெளியிட்டுள்ளது. பி.பி.சி.யின் பனோரமா தொலைக்காட்சித் தொடரில் நான்கு டாலர் மதிப்புள்ள எம்பிராய்டரி சட்டையை மையமாக வைத்து குறும்படம் தயாரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர்கள் கேள்வி கேட்கின்றனர். கையினால் செய்யப்பட்ட எம்பிராய்டரி சட்டைக்கு நான் ஏன் நான்கு டாலர் பணம் தரவேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இது கையால் தயாரிக்கப்பட்டது என்பது பதில். இவ்வளவு குறைந்த விலைக்கு இதை தயாரித்தது யார் என்பது அடுத்த கேள்வி... எனத் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வன்முறையும், அதிகளவில் நடைபெறுவதையும் விளக்கியது. நிகழ்ச்சியின் முடிவில் தொடர்புடைய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்கு சப்ளை செய்யும் கம்பெனிக்கான விதிகள் மறுஆய்வு செய்யப்பட்டன.
          லிபேரியாவில் பயர்ஸ்டோன் டயர் அன்ட் ரப்பர் கம்பெனியின் ரப்பர் தோட்டத்துக்கு எதிராக உலகளவில் பிரச்சாரம் வெடித்தது. ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள், அதிகளவு உற்பத்தி செய்வதற்கு வற்புறுத்தப்பட்டனர். ஆனால் சம்பளம் மிகவும் பாதியாகப் பெற்றனர். இதனால் பல தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை பணிக்கு அழைத்து வந்தனர். சர்வதேச குழந்தைகள் உரிமை நிதியானது பயர்ஸ்டோன் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. நவம்பர் 2005 ஆம் ஆண்டு ரப்பர் தோட்டத்தில் வேலைபார்த்த தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்காக இந்த [[பயர்ஸ்டோன் டயர் மற்றும் ரப்பர் கம்பெனிக்கு எதிரான (வெர்சஸ்) சர்வதேச குழந்தைத் தொழிலாளர் நிதியம்|வழக்கு]] தொடரப்பட்டது. 2007 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி, நீதிபதி தனது தீர்ப்பில் பயர்ஸ்டோன் நிறுவனத்தின் இயக்கத்தை நிறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் குழந்தைத் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான வழக்கு பதிய அனுமதித்தார்.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனப் பிரதிநிதி ஜூன்னத் கான் என்பவர் காவல்துறை, தொழிலாளர் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகச் செயல்பட்டார். அதனால் டில்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் சோதனையிடப்பட்டன. டில்லி, சீலாம்பூரில் மக்கள் நெருக்கம் மிகுந்த சேரிப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட நூறு எம்பிராய்டரி தொழிற்சாலைகளில் இருந்து 480 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அடுத்த சில வாரங்களில் அரசு, பத்திரிக்கைத் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் தீவிரமாக கிளர்ந்தெழுந்தனர். 5 முதல் 6 வயதுடைய குழந்தைத் தொழிலாளர்களை அடிமை முறையிலிருந்து விடுவித்தனர். இந்த மிகப்பெரிய சோதனையானது மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை இருப்பதை, உலகத்தின் கண்களைத் திறக்கச் செய்தது.
எம்பிராய்டரி தொழிற்சாலையில் நடந்த மிகப்பெரிய சோதனையானது (2007 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி) சண்டே அப்சர்வர் பத்திரிக்கையில் வெளியிடப்படவில்லை. பி.பி.ஏ., இயக்கத்தினர் இதைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். காப் கிட்ஸ் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக காப் நிறுவனம் தனது அறிக்கையில் ஒத்துக்கொண்டது. குழந்தைத் தொழிலாளர் குறித்த இத்தனை பதிவுகள் இருந்தாலும், எல்லா கட்சிகளும் அக்கறை காட்டினாலும், எஸ்.டி.எம்., மட்டும், குழந்தைத் தொழிலாளர் அடிமைகளாக, பிணையமாக இருப்பதை கண்டுகொள்ளவில்லை. இந்த மோதல்களால் பிபிஏ நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான குளோபல் மார்ச் அமைப்புத் தலைவர் டில்லி உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதிக்கு இரவு 11 மணிக்கு தங்களது கடிதம் மூலம் முறையிட்டனர். http://www.globalmarch.org/gap/appeal_letter_KS.php குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு மேம்போக்காக செயல்பட்டது. மேலும் குழந்தை உரிமை அமைப்புகளின் மீது அரசு பழிவாங்கும் போக்கை கடைபிடித்தது.http://www.globalmarch.org/gap/High_Court_order.php
குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான குளோபல் மார்ச் அமைப்பும் பி.பி.ஏ., அமைப்பும் காப் இன்க் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களிடம் ஒப்பந்தம் செய்தன. இனிப்பகங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை தடுத்து நிறுத்தவும், புதிய வழிமுறைகளை ஏற்படுத்தவும் செயல்பாட்டை உருவாக்கின. இதன்படி காப் இன்க் நிறுவனத்தில் மூத்த துணைத்தலைவர் டான்ஹென்கே தனது அறிக்கையில், நாங்கள் தெளிவாக அறிக்கையை உருவாக்கி வருகிறோம். இந்த குழந்தைகள் தற்போது உள்ளூர் அரசாங்கத்தின் கண்காணிப்பில் உள்ளன. தற்போது குழந்தைகளுக்கு பள்ளியில் வேலைக்கான பயிற்சி அளித்து, அதற்கான சம்பளம் வழங்கப்படும். மேலும் அக்குழந்தைகள் முறையாக பணிபுரிவதற்கான வயதை அடையும் வரை இம்முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். நாங்கள் உள்ளூர் அரசாங்கத்துடனும், குளோபல் மார்ச்சுடனும் இணைந்து செயல்பட்டு, எங்களது விற்பனையாளரின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்றார். http://www.globalmarch.org/gap/letter_to_VP_GAP.php http://www.globalmarch.org/gap/gap_statement.php
அக்டோபர் 28 ஆம் தேதி, வடஅமெரிக்காவில் உள்ள காப் நிறுவனத்தின் தலைவர் மார்க்கா ஹான்சேன் கூறுகையில், நாங்கள் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்கிறோம். இது எங்களுக்கு பேரம் பேசும் விஷயமல்ல. நாங்கள் ஆழ்ந்த அக்கறை செலுத்துகிறோம். இக்குற்றத்திற்காக வருந்துகிறோம். நாங்கள் தவறிழைத்தவர்களாக நிரூபிக்கப்பட்டுள்ளோம். காப் நிறுவனம், தனது வரலாற்றில் இம்மாதிரியான சலால்களை சந்தித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் எங்களது அணுகுமுறையும் தவிர்க்க முடியாதது. 2006 ஆம் ஆண்டில் காப் நிறுவனம் 23 தொழிற்சாலைகளுடன் மூடப்பட்டது. எங்களது விற்பனையாளர்கள் 90 பேர் உற்பத்தியில் குறைபாடு இருப்பதாகவும் சொல்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் நாங்கள் எச்சரிக்கையுடன், வேலைக்கான ஆர்டரை நிறுத்தி விட்டு, குறைபாடுடைய பொருட்கள் விற்பனைக்குச் செல்வதற்கு முன்பாக நிறுத்திவிட்டோம். நாங்கள் எங்களது சப்ளையர்களுடன் உடனடி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து எங்களது கொள்கைகளை வலுவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
             ஆகஸ்டு 2008 ஆம் ஆண்டு அயோவா தொழிலாளர் ஆணையர் டேவிட் நெய்ல் ஒரு அறிவிப்பு செய்தார். எங்களது துறையானது விவசாயம் தொடர்பான துறையிலும், இறைச்சி பேக்கிங் செய்யும் நிறுவனத்திலும் இமிக்ரேஷன் மற்றும் கஸ்டம்ஸ் துறையினர் சோதனையிட்ட போது, 57 சிறுவர்கள் வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறைச்சி பேக்கிங் செய்யும் நிறுவனத்தில் விதிமுறைக்கு எதிராக 14 வயது சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. நெய்ல் தனது அறிவிப்பில் இந்த வழக்கை மாநில அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பினார். தனது துறை விசாரணையில், நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாத, அதிர்ச்சியான விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளன என்றார். குற்றச்சாட்டை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட நஷ்டம் தான் இது என்று விவசாயம் செய்பவர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள் வாதிட்டு தங்கள் உரிமைகளை கோரினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டுநெசவுத் தொழிற்சாலையில் அதிகளவில் 40,000 குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என கண்டறியப்பட்டது. குழந்தைத் தொழிலாளர்களை தறி உரிமையாளர்கள் அடிமைகளாக நடத்தினர். கிராமப்புற கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது ரைட் நிறுவனத்துடன் இணைந்து குழந்தைத் தொழிலாளர்களுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 2007 ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைத்துள்ளது.
குழந்தைத் தொழிலாளர்கள் சாக்லேட் செய்யப் பயன்படும் கோகோ பவுடர் தயாரிப்பில் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கோகோ பொருளாதாரத்தைக் காண்க

 குழந்தைத் தொழிலாளர்களை பாதுகாத்தல்

மைனேவில் உள்ள பண்ணையில் குழந்தைத் தொழிலாளர்கள் (அக்டோபர் 1940 ஆண்டு)
மக்களின் மனப்பாங்கு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் குழந்தைத் தொழிலாளர் குறித்த அக்கறை தற்போது அதிகரித்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த பொருட்களை வாங்குவதை புறக்கணித்தால் அது இன்னும் கூடுதல் விளைவை ஏற்படுத்தி விடும். ஏனென்றால் தற்போது பார்த்து வரும் சாதாரண வேலையை விட்டு, உடல், மன ரீதியாக வேதனை தரும் பாலியல் மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவில் குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு, வங்கதேசத்தில் உள்ள ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்த 50 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு அந்த குழந்தைகள் கல் வெட்டுதல், கடினமான பணி மற்றும் பாலியல் தொழிலுக்குச் சென்றனர். இந்த தொழில்கள் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையை விட மிக மிக அபாயகரமானது. இதை யுனிசெப்ஆய்வு செய்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்களைப் புறக்கணிப்பது என்பது அவர்களின் நீண்ட கால வாழ்வியல் முறைகளை சிதைக்கிறது என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
மில்டன் பிரைட்மான் கூற்றின் படி, தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பாக எல்லாக் குழந்தைகளுமே விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். தொழிற்புரட்சியின் போது பண்ணைத் தொழிலில் இருந்து தொழிற்சாலைக்கு இடம்பெயர்ந்தனர். கூடுதல் நேரத்துக்கான சம்பளம், மற்றும் சம்பள உயர்வால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவதற்கு பதிலாக பள்ளிக்கு அனுப்பினர். சட்டம் இயற்றுவதற்கு முன்பாகவும், பின்பாகவும், குழந்தைத் தொழிலாளர் முறை மெல்ல குறைந்தது.

            ஆஸ்திரேலியன் பள்ளி பொருளாதார நிபுணர் முர்ரே ரோத்பார்டு தனது அறிக்கையில், பிரிட்டீஸ் மற்றும் அமெரிக்க குழந்தைகள் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னும், பின்னும் வேலை கிடைக்காத போது எண்ணற்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் விருப்பப்பட்டு, மகிழ்ச்சியுடன் தொழிற்சாலை பணிகளுக்குச் சென்றனர்.
               எப்படியிருந்தாலும் பிரிட்டீஸ் வரலாற்று சமூக ஆர்வலர் இ.பி. தாம்சன், வீட்டு வேலை செய்யும் சிறுவர்களுக்கும், தொழிலாளர் சந்தையில் பங்கேற்கும் சிறுவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்கியுள்ளார். தொழிற்புரட்சி அனுபவத்தால் ஏற்பட்ட பயனால் தற்போதைய நடைமுறைகள் -குறித்தும் விவாதிக்கப்பட்டன.[15] மேற்கத்திய சமூகத்தில் குழந்தைகளின் நிலை பற்றி எழுதிய பொருளாதார வரலாற்று ஆய்வாளர் ஹியூஜ் கன்னிங்ஹாம் கூறுகையில்,
20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில், வளர்ந்த நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை குறையும் என 50 ஆண்டுகளுக்கு முன்பான கணிப்பில் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அப்படியில்லை. மீண்டும் வளர்ந்த நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பெருகியுள்ளனர். இது தேசிய அளவிலான அல்லது உலகளாவிலான பொருளாதாரத்தைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறது.
தொழிலாளர் ஒருங்கிணைப்பாளரும், மேற்கத்திய குழந்தைகள் அமைப்பின் தலைவரும், தொழிற்சாலை தொழிலாளர் அமைப்பின் நிறுவன உறுப்பினருமான பிக் பில் ஹேவுட் கூறுகையில், குழந்தைகளின் விளையாட்டு நேரத்தை, உழைப்பாக சுரண்டுபவர்கள் தான் மிக மோசமான திருடர்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
       ஹூஸ்டன் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் தாமஸ் டி கிரிகாரி, கேட்டோ நிறுவனத்தில் வெளியிட்ட கட்டுரையில், தொழில்நுட்பமும், பொருளாதார மாற்றமும் குழந்தைகளை தொழில்துறையிலிருந்து விலக்கி, பள்ளிகளுக்கு மாற்றும் சிறந்த ஆக்கப் பொருளாகும். ஹூஸ்டன் பல்கலைக்கழகம் இதனால் அக்குழந்தைகள் பெரியவர்களாக நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழமுடியும். ஆனால் வங்கதேசம் போன்ற ஏழைநாடுகளில், 19 ஆம் நுற்றாண்டின் கடைசி வரையில், குடும்பப் பொருளாதாரத் தேவைக்காக குழந்தைகள் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தேவைக்கான போராட்டம் நிறைவுபெறும் போது, அவை வெவ்வேறு அரசியல் காரணங்களால் மீண்டும் குழந்தைத் தொழிலாளர் முறை தலைதூக்குகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக