Translate

செவ்வாய், ஜூலை 17, 2012

பாரதியார் பல்கலையில் விண்வெளி அறிவியல் பாடப்பிரிவு துவக்க திட்டம்-17-07-2012

          கோவை:“விண்வெளி திருவிழாவை தொடர்ந்து, மாணவர்களின் ஆர்வத்துக்கு உதவும் வகையில், அரசு ஒப்புதல் பெற்று, விண்வெளி அறிவியல் குறித்த புதிய பாடப்பிரிவுகள், பல்கலையில் விரைவில் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
              அவர் கூறியதாவது:விண்வெளி அறிவியல் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, அனைத்து தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், விண்வெளி திருவிழாவை பார்வையிட்டுள்ளனர். விண்வெளி அறிவியல் குறித்து தெரிந்து கொள்ள, மாணவர்கள் கொண்டிருந்த ஆர்வம், ‘நாசா’ விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியது.
மாணவர்களின் ஆர்வத்துக்கு உதவும் வகையில், அரசு ஒப்புதல் பெற்று, விண்வெளி அறிவியல் குறித்த புதிய பாடப்பிரிவுகள், பல்கலையில் விரைவில் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ‘ஸ்பேஸ்-பெஸ்ட்-2012’ திருவிழா வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. எதிர்காலத்தில், விண்வெளி அறிவியலில், தமிழக மாணவர்கள் சாதிக்க, இத்திருவிழா அடிப்படையாக விளங்கும் என, நினைக்கிறேன். இவ்வாறு<, துணைவேந்தர் தெரிவித்தார்.
         விண்வெளி திருவிழா நிறைவு
    அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையம் (நாசா), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.,) சார்பில், பாரதியார் பல்கலை வளாகத்தில், கடந்த 9ல் துவங்கிய, விண்வெளி திருவிழா ‘ஸ்பேஸ் பெஸ்ட் -2012’, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
   விண்வெளி திருவிழாவை முன்னிட்டு, பல்கலையின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த, கண்காட்சி அரங்குகளில், விண்வெளி ஆய்வு குறித்த தகவல்கள், ராக்கெட் மாடல்கள், வானிலை மாற்றத்தை கண்டுபிடிக்க உதவும் வகையில், பிரத்யேக கருவி பொருத்தப்பட்ட பலூன் பறக்கவிடுதல், பாரா கிளைடிங் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றன.
   சென்னை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் சார்பில், கண்காட்சி வளாகத்தில், கோளரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இதில், வரும் 2061ல் நடக்க உள்ளதாக கருதப்படும், சூரிய கிரகணத்தின் போது, நிலவில் இருந்தபடி பூமியை பார்க்கும் வகையில், உருவாக்கப்பட்ட குறும்படம் திரையிடப்பட்டது; அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது.
                                                                        Courtesy-Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக