ஆமதாபாத்: ""குஜராத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்காக, நான்
மன்னிப்புக் கேட்க மாட்டேன். அதேநேரத்தில், நான் குற்றவாளி எனில், என்னை
தூக்கிலிடுங்கள்,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மன்னிப்பு கோர மாட்டேன்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப்
பின், குஜராத் மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில், நான்
என்ன சொன்னேன் என்பதை, நீங்கள் சரி பாருங்கள். 2004ம் ஆண்டில், பத்திரிகை
ஒன்றுக்கு நான் பேட்டி அளித்தேன். அதில், "வன்முறைகளுக்காக நான் ஏன்
மன்னிப்புக் கேட்க வேண்டும். வன்முறைகளுக்கு எனது அரசு காரணம் எனில், என்னை
பொது இடத்தில் தூக்கிலிடலாம்' எனக் கூறியிருந்தேன். அதையே இப்போதும்
சொல்கிறேன். குஜராத் வன்முறைகளுக்காக நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்.
நான் குற்றவாளி என்றால், என்னைத் தூக்கிலிடுங்கள். அதேநேரத்தில், நான்
அப்பாவி என நிரூபிக்கப்பட்டால், எனது கவுரவத்தை சீர்குலைத்ததற்காக,
ஊடகங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். அரசியல் நிர்பந்தங்களுக்காக என்னை
குற்றவாளியாக்கினால், அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நான்
குஜராத் மாநிலம் மற்றும் அதன் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை காட்டி
வருகிறேன். பிரதமர் ஆவதைப் பற்றி நினைக்கவில்லை. இவ்வாறு நரேந்திர மோடி
கூறியுள்ளார்.எப்.ஐ.ஆர்., தேவை: நரேந்திர மோடியின் பேட்டி தொடர்பாக, மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், ""குஜராத் வன்முறை சம்பவத்தில், தனக்கு எதிராக விசாரணை நடைபெற வேண்டும் என, முதல்வர் நரேந்திர மோடி விரும்பினால், அவர் அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். 12 ஆண்டுகளாக, முதல்வராக இருக்கும் மோடி மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியவில்லை எனில், அவரை எப்படி நீங்கள் குற்றவாளி என நிரூபிக்க முடியும். யார் அவரை தூக்கிலிட முடியும்,'' என்றார்.
COURTESY-DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக