நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
அறனி - ஏன்டி நிர்மலா " டாக்டர் எனக்கு எழுதிய லவ் லெட்டர் என் கணவரின் கையில் அகப்பட்டுவிட்டது
நிர்மலா - "அப்படியா அப்புறம் என்னாச்சு"?
அறனி - அதில என்ன எழுதி இருக்குன்னு தெறியாம அதக் கொண்டுபோய் மெடிக்கல் ஷாப்பில மருந்து வாங்கிட்டு வந்துட்டார்....
வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்
பயணி -1 :என்ன சார் திடீர்னு ரயிலு நின்னுடுச்சு
பயணி -2 : டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.
பயணி-1 : எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது தடுமாறி கீழே விழும்னு நினைச்சேன்.
அவர் :நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"
தோழி : 1:உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார்..
தோழி :2 :ஓ அதுவா நான் மேக்கப்பை கலைச்சிட்டேன் அதுதான்
அம்மா : இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு ஒழுங்காக இருக்காங்களோ
அவங்களுக்கு நானொரு பரிசு தரப்போறேன்
பிள்ளைகள் : போம்மா இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை
எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்
டாக்டர் : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா மீன், கோழி சாப்பிடறதை
நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்?.
போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.
"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
விற்பனையாளர் : இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி
வாங்குபவர் : நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''
"தினமும்
காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும்
தெரியுதா?" "சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"
"எந்த
ஐட்டம் கேட்டாலும் இல்லைன்னு சொல்றே, அப்புறம் என்ன எழவுக்கு மெனுகார்டை
கொடுத்தே?" "ஒவ்வொரு ஐட்டத்தோட பேரையும் சொல்லி, இல்லைன்னு சொன்னா எனக்கு
வாய் வலிக்குமே சார்."
நீதிபதி:
ஏம்பா. இவ்வளவு பெரிய திருட்ட நீ மட்டும் தனியாவா செஞ்ச? குற்றவாளி: ஆமா
ஐயா. இப்ப காலம் கெட்டுக் கிடக்குது. யாரையும் நம்ப முடியல...
மனைவி: என்னங்க
பட்டாசு வாங்கப் போறேன்னு சொல்லிட்டு.. வெடிச்ச பட்டாசை எல்லாம்
பொறுக்கிட்டு வர்றீங்க? கணவன்: அந்தக் கடைக்காரன் பழைய பட்டாசைக் கொடுத்து
ஏமாற்றிவிடுவான்னு சொன்னாங்க. அதனால்தான் ஒவ்வொரு பட்டாசையும்
வெடிக்குதான்னு வெடிச்சுப் பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன், எப்படி என்
சாமர்த்தியம்!
ஸ்கூல் வாத்தியார
நம்ம கிரிக்கெட் டீம் கோச்சா போட்டது தப்பாப்போச்சு!" "ஏன்?" "பிளேயர்
சரியா விளையாடலைன்னா 'போய் உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வா'ன்னு
சொல்றாரு!"
"இவர்தான் நம்ம
புதிய சி.இ.ஓ. முதன்முதலா நம்ம ஆஃபீசுக்கு வந்துருக்காரு! ஸ்ரீநிவாசன் இவரை
அழைச்சுட்டு போய் உட்கார வையுங்க!" "என்ன சார் இது? இவ்வளவு வயசு
ஆனவருக்கு இன்னும் உட்கார கூடவா தெரியாது?"
"என்னடா ரொம்ப
கவலையா இருக்கே?" "பின்ன என்னடா? அந்த பேங்க்ல லட்சக்கணக்கில் பணம்
இருக்கு.. ஆனா அவசரத்திற்கு எடுக்க முடியலையே?" "ஏன் ஏடிஎம் கார்ட்
தொலைஞ்சு போச்சா.. இல்ல செக் புக் இல்லையா?" "நீ வேற எனக்கு அந்த பேங்க்ல
அக்கவுண்ட்டே இல்லடா"
மனைவி: புது
டெலிபோன் டைரக்டரி எடுத்துக் கொண்டு ஒருவன் வந்துள்ளான்! கணவன்: அவனிடம்
வேண்டாம்னு சொல்லு, நான் இன்னும் பழசையே படித்து முடிக்கவில்லை!
"ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?" "பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்."
கணவன்: குழந்தை ஏன்
அழறான் டாக்டர் ஊசி போட்டாரா...? மனைவி: இல்லே... அவர்தான் சரியான குழந்தை
டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித்
தின்னுட்டார்....
"சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துக்கிட்டது தப்பாப் போச்சு.. "ஏன்? "படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..
"ஏன் சார் ஜோக்
எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?" "பிறர்
சிரிக்கும்படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க."
"போஸ்ட்மேன்
மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு...." "அதுக்கென்ன....?" "குழந்தையோட
வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டுவேன்னு ஒரே
தகராறு பண்றாரு..."
ஒருவர்: நேத்து
ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்
மற்றவர்: அப்புறம்? ஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு
குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்..
சுரேஷ்: டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் ,
அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு
" எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா....
நரேஷ்: அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா....
இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம்
நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார். பரிசோதகர்
படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம்
எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட
ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை
செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்
கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?"
"கோழியினால்தான் முட்டை வந்தது"
"எப்படி?"
"ஒருமுறை
ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும்
வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு
கோழி வரவில்லை
'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?'
'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு
சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'
நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான்,
ஐயா.
ஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது....
தலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்?
ஆசிரியர்
: கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டயிருந்து
கடன் வாங்கணும்னு சொன்னா.. நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன்
வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான்.
தலைமை ஆசிரியர் : ?!?!
"ஐயா, எனக்கு ஏழு குழந்தைகள்... உற்பத்திக்கேத்தபடி
சம்பளம் கூட்டிக் கொடுங்க." "அந்த உற்பத்திக்கெல்லாம் சம்பளம் கூட்டித்
தரமுடியாது... பேக்டரியிலேயே உற்பத்தியைக் கூட்டினவங்களுக்குத்தான் சம்பளம்
கூட்ட முடியும்."
"ஏங்க டூ வீலர இவ்ளோ வேகமா ஓட்டிக்கிட்டு வர்றீங்க.. அந்த
தெரு திருப்பத்துல உங்க மனைவி விழுந்துட்டாங்க பாருங்க.." "ஓ.. அப்படியா?
நான் தான் என் காது செவிடாகி விட்டதுன்னு நெனச்சிக்கிட்டேன்."
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்?
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்பவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் முதல்லேயிருந்தே ஒத்து
வரல்லேன்னு எப்படிச் சொல்றீங்க?" "தேனிலவுக்கே ரெண்டு பேரும் தனித்தனியா
போனாங்கன்னா பாத்துக்கயேன்."
"என் மருமகக்கிட்டே கோயில் மாதிரி வீட்டை வெச்சிக்கணும்னு
சென்னது தப்பாப் போச்சு." "ஏன்? என்னாச்சு...?" "வாசல்லே ஒரு உண்டியலை
வெச்சிட்டா."
நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க?
டாக்டர்:
இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு. நர்ஸ்: டாக்டர்,
இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம்.
டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்?
நர்ஸ்: ???
"என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம்
இருக்காங்களாமே..?" "தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலாபாலுக்காக
இல்லை... லோக் பாலுக்காக!"
தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன்
ஆனால் நீ இல்லை...
பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு "எருமை மாடு" என்று!
சில உண்மைகள் கசகத்தான் செயும் ....
***********************
அமலா: சச்சின் க்கும் என் கனவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்!
கமலா: என்ன அது?
அமலா: சச்சின் "சதம் அடிப்பார்" என் கனவர் "சாதம் வடிப்பார்"!
கமலா: !!!???
***********************
சாமி… நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்…?”
அடப்பாவி… நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?”
நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க
**********************
சாப்பிடும்போது கூட உன் கனவருக்கு ஆபிஸ் ஞாபகமா?
எப்படிச் சொல்றே?
உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்
***********************
இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா
********************
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி: என்னங்க, இந்த நேரத்துல...
புருஷன் : ஒரு அதிசயம் நடந்துருச்சி..
பொண்டாட்டி: என்ன அதிசயம்?
புருஷன் : ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட்
எரிஞ்சுது. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட்
நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி : தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றிங்களா, மூடிகிட்டு படுங்க..
**************
புருஷன் : !!!!!!!????
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி
**************
கனவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு!
குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க?
மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்
**************
வேலைக்காரியை பிடிச்சுக்கிட்டு அழுவுறாரே உன்
புருஷன், ஏன்?
வேலைக்காரிகிட்டே சிரிச்சுப் பேசாதீங்கன்னு சொன்னேன்,
அதான்!
*************
ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குள்க்கிறே?
யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!
*************
என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.
*************
மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கனவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கனவன்: நடுவுல நீ வந்துட்ட..
ஏன்யா விஷத்தை சாப்பிட்டே?”
வயித்துவலி தாங்கமுடியலே டாக்டர். சாகதான் சாப்பிட்டேன்.”
நீ ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுக்கறே… நாங்க எதுக்கு இருக்கோம். இங்க வந்து அட்மிட் ஆனா நாங்களே அதைப் பார்த்துக்குவோமில்லே!
டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு
மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி
இருக்கு?
நோயாளி…- பரவாயில்லை குணமாயிட்டுது
டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லை
ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு
வந்தடறேன்….
டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.
ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் ஒரு வாரம் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : !!!
நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?
நர்ஸை டாவடிக்க ஏதாவது ஒரு நோய் பெயரைச் சொல்லிட்டு இந்தாளு அடிக்கடி வர்றான்!”
“டாக்டர் தான் போலின்னா பேஷண்ட்டுமா?”
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
டாக்டர் : நூறு பர்சன்ட் கரெக்டான நேரத்துக்குத்தான் உங்க தாத்தாவைக் கூட்டி வந்திருக்கீங்க!
அவன் : என்ன டாக்டர், அவ்வளவு மோசமான பண நெருக்கடியா உங்களுக்கு?
”ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'
'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'
உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க !'
டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது.....
காட்டுங்க உங்க பர்ஸை !'
மனைவி : நேத்து ஆபிஸ் போனீங்களே, ஆனா இன்னிக்குத்தான் வீட்டுக்கு வர்றீங்க?
கணவன் : நான் பாட்டுக்கு தூங்கிட்டே இருந்துட்டேன், என்னை யாருமே எழுப்பல அதான்.
என்ன உன் கணவர் ஆபிஸ்லேயிருந்து வந்து, பக்கத்து
வீட்டு கதவைத் தட்டறாரு?
தூக்கம் சரியா கலையலை போல..!
நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க?
டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு.
நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம்.
டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்?
நர்ஸ்: ???
என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா
"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்." "அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?"
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
காட்டுவாசி: மாசாலாவைக் கொஞ்சம் தூக்கலா போடணுமா…ஏன்..?
அண்டாவில் மனிதனை வேக வைக்கும் காட்டுவாசி:-
இவன் மண்டையிலே மசாலாவே இல்லையாம்
பேரன்:- அம்மம்மா... பள்ளி விளையாட்டுப்போட்டியில நான் 200 m ஓடபோறன் என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க!
அம்மம்மா:- கவனம் மெதுவா ஓடுப்பா!!
பேரன்:- உங்கிட்ட போய்.
எதுக்கு போலீஸ்காரர்
தபால்காரர் கூட சண்டை போடறாரு?"
"தந்தி வந்துருக்குனு சொல்ரதுக்கு பதில்,
தொந்தி வந்துருக்குனு சொல்லிட்டாராம்!
மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க…?
வரதட்சணைக் கேட்டா கேஸ் போடுவோம்..!
டாக்டர்! எனக்கு பல் ஆடுது!" "எந்த பாட்டுக்கு?"
"இருள் இருள்" என்று சொல்லிக் கொண்டு சும்மாயிருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிசெய்.. (நாங்களும் தத்துவம் சொல்லுவம்ல)
25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்........
என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.........
வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்..........
அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.........
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்?
கணவன்: அது ஒரு இறந்த காலம்....
டீச்சர்: "நான் ஒரு கொலை செய்துவிட்டேன்" இதன் 'எதிர்காலம்' என்ன.?
மாணவன்: நீங்கள் ஜெயிலுக்குப்போவீர்கள்
படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…
படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,
படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி
: அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த
சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..
படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : இதுக்குத் தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!
படிச்சவன்: ? ? ? ? ?
தளபதி ; மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?....
அரசன் : வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொள்வோம்..
என்ன இது..ஃபேஷன் ஷோவுல மாடல்கள் எல்லாம் தலையிலே
ஒரு மூட்டையோட, மண்ணெண்ணை கேனைத் தூக்கிக்கிட்டு
நடந்து வர்றாங்களே…?
இது 'ரேஷன் ஷோ'வாம்..!
உடம்புல எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லுறீங்க..அப்புறம்
எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க..?
-
வெயிலுக்கு குளிர்ச்சியா நாலு நர்ஸூங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னுதான்..!
நீங்க கொடுத்த செக், பேங்க்ல பணம் இல்லைனு சொல்லி
திரும்ப வந்துடுச்சி…!
பொய் சொல்றாங்க! கேஷியர்கிட்டே நிறைய பணம் இருக்கு,
நானே பார்த்தேன்..!
சில உண்மைகள்..
முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !
,
,
,
,
,
,
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால !
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !
பூனை மற்றொரு பூனையிடம், 'அதோ போகுதே அதுதான் என்
'மாமியாவ்'..!