அய்தராபாத், அக்.22-பல்லுயிர் பெருக்க
பாதுகாப்புக்கு இரண்டு மடங்கு நிதி அளிக்க அய்தராபாத் மாநாட்டில் உலக நாடு
கள் சம்மதம் தெரிவித் தன.
அய்தராபாத் நகரில், அய்.நா. சபையின் பல்
லுயிர் பெருக்க பாது காப்பு மாநாடு ஒரு வார காலமாக நடந்து முடிந் தது. இந்த
மாநாட்டை முதன் முதலாக இந் தியா நடத்தியது. இந்த மாநாட்டில் 172 உலக
நாடுகளிலிருந்து 2 ஆயி ரத்து 500 பிரதிநிதிகள், 3 ஆயிரம் உள்ளூர் பணி
யாளர்கள், 77 அமைச் சர்கள், துணை அமைச் சர்கள் கலந்துகொண் டனர்.
இந்த மாநாட்டில், அழிந்துவரும் பல்லு
யிர்களை அழிவிலிருந்து தடுப்பதற்கு தேவை யான நடவடிக்கை களை மேற்கொள்வ தற்கு
அளிக்கிற நிதியை இரண்டு மடங்காக அதி கரிக்க பல்வேறு நாடு களும் சம்மதம்
தெரி வித்தன.
குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள், சர்வ
தேச அளவில் பல்லுயிர் பெருக்கம் தொடர் பான இலக்கை அடை வதற்கு தேவையான
நடவடிக்கைகளை எடுப் பதற்கு அளிக்கிற நிதியை இரு மடங்காக்க முன்
வந்தன.சரகாஸ்சோ கடல், டோங்கா தீவுகள், பிரேசில் கடலோரப் பகுதிகள்ஆகியவை
கடல் பகுதியில் கடலுயிரிகளை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்துவதற்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும்.
பல்லுயிர் பெருக்க கன்வென்சன் நிர்வாக
செயலாளர் பிரவ்லியோ பெரைரா பேசுகையில், பல்லுயிர் பெருக்க கன் வென்சன்
விதிகளை அமல் படுத்த உலக நாடு கள் சம்மதம் தெரிவித் துள்ளன. இவற்றை செயல்
படுத்துவதில், பல்வேறு நாடுகளும் முன்னோக்கி செல்வதை பார்க்கி றோம் என்று
கூறினார்.
இந்த மாநாட்டில் மத் திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நட ராஜன் கலந்து கொண்டு பேசுகையில்
பல்லுயிர் பெருக் கத்தை பொறுத்தமட்
டில்மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை களை தற்போதைய பொருளாதார நெருக் கடிகள்
தடுத்து விட முடியாது. மாறாக, பூமி யில் உள்ள அனைத்து உயிர்களும் சார்ந்து
வாழ்வதற்கு ஏற்ற வகை யில், தடையற்ற சுற்றுச் சூழல் சேவைகளை உறுதி செய்கிற
வகை யில், கூடுதல் நிதி முத லீடு செய்வதற்கு எங்க ளுக்கு ஊக்கம் கிடைத்
துள்ளது'' என கூறினார்.
அய்.நா.சபையின் துணைச்செயலாளரும்,
சுற்றுச்சூழல்திட்ட செயல் இயக்குனரு மான ஆசிம் ஸ்டெயினர் பேசும்போது,அய்
தராபாத்தில்இந்த மாநாடு, ஆழ்ந்த சிந்த னைமிக்க விவாதங் களுடன்
முடிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நாகோயாவில் (ஜப்பான்) நடைபெற்ற
மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை முன்னோக்கி எடுத்துச்
சென்றுள்ளது. பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற் றுக்கு
முன்னுரிமைஅளிக்க வேண்டும்என்பதை அனைத்து நாடுகளும் உணர்ந்து, கூடுதல் வாக்
குறுதிகளை அளித்துள் ளன என்று கூறினார்.
Courtesy-vituthalai.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக