தமிழ்நாட்டில் மொத்த மின்தேவை 11,500மெகாவாட். ஆனால் கிடைக்கும் மின்சாரம் 7,456 மெகா வாட் மட்டுமே. பற்றாக் குறை 4,500 மெகாவாட். இதனால்வரலாறு காணாதஅளவுக்கு மின்தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது.
சென்னை தவிர, மாவட்டங்களில் 18 மணி நேரம் வரை மின் வெட்டு நிலவுகிறது. அப்படியிருந்தும் நிலை மையை சமாளிக்க முடிய வில்லை. கடுமையான மின்பற்றாக்குறை நீடிப் பதால் சென்னையில் நேற்று முதல் 2 மணி நேரம் மின்தடை அமல் படுத்தப்பட்டுள் ளது.
கடந்த 2 நாட்களாக சென்னைமற்றும் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளில் பயன்படுத்தும் மின்விசிறி, ஏசி உள் ளிட்ட மின்சாதனங் களின் பயன்பாடு குறைந் துள்ளதால் மின்தேவை 1,000 மெகாவாட் குறைந் துள்ளது.
இதுகுறித்து மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழக உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை யினால் பேன், ஏசி பயன் பாடு குறைந்துள்ளது. இதனால் மொத்தமுள்ள மின் தேவையில் 1,000 மெகா வாட் குறைந்துள் ளது. இது நிரந்தரமா னது அல்ல. வெயில் அடிக்க தொடங்கிவிட் டால், மீண்டும் மின் தேவை கூடிவிடும். எனவே தொடர்ந்து மழைபெய் தால்மின்தேவை குறைந்து, சீரான மின் வினியோகத்துக்கு வழி வகுக்கும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக