சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 படிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு பிரண்ட்லைன் அமைப்பு கல்வி உதவித்தொகை அறிவித்துள்ளது. இதற்கு அக்டோபர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ், நடத்தி வரும், பிரண்ட் லைனர்ஸ் அமைப்பு, குவைத் இந்திய தூதரகத்தில், சேவை அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம்,ஏழை மாணவர்களுக்கு, கல்விக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான, கல்வி உதவித்தொகை குறித்து, அமைப்பின் தலைவர் சாந்தா மரியம், துணைத்தலைவர் வேலு, செயலர் கீரணிமதி ஆகியோர் கூறியிருப்பதாவது: பிரண்ட் லைனர்ஸ் அமைப்பு, மணிமேகலை பிரசுரத்தின் ஒருங்கிணைப்பில், பாலம் அமைப்பு மூலம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.
உதவித்தொகை பெற விரும்பும் மாணவ, மாணவியர் பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடன், பிரண்ட் லைனர்ஸ் கல்வி உதவித்தொகை, மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் தெரு, தி.நகர், சென்னை௧7 என்ற முகவரிக்கு, வரும் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி--தினமலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக