Translate

வியாழன், அக்டோபர் 04, 2012

இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்புகளை மேம்படுத்த விரும்பம்:அமெரிக்கா


வாஷிங்டன், அக். 3 -அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில், ஆசியப் பகுதியின் வளர்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ராணுவ ஒத்துழைப்புகள் குறித்து அவர் கூறியதாவது:-

உலகின் முக்கியப் பகுதியாக விளங்கும் ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்புகளை மேம்படுத்த விரும்புகிறது.

இந்தியா ஆசியா நாடுகளுடன் நட்புறவில் மிகுந்த செல்வாக்குடன் இருப்பதாக அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளது. ராணுவத்தை பொருத்த வரையில் சீனாவுக்கு இப்பகுதியில் முக்கியப் பங்கு உள்ளது என்பதை நாங்கள் நம்புகிறோம். இப்பகுதியில் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
                                                                                                                                                  Courtesy-Vituthalai.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக