Translate

ஞாயிறு, அக்டோபர் 21, 2012

செவ்வாய் கிரக மணலில் ஒரு ஒளி

வாஷிங்டன், அக். 21- அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி என்ற ஆய்வு கூட விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அங்கு நிலை நிறுத்தப்பட்ட கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தை படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பியது.  அங்கு பாறையை வெட்டி எடுத்து பல கோணங்களில் படங்கள் எடுத்து அனுப்பியது. இந்த நிலையில் தற்போது முதன் முறையாக செவ்வாய் கிரகத்தின் மணலை தோண்டி எடுத்து ஆய்வு செய்து வருகிறது.
அது குறித்த படத்தில் வெள்ளை நிறத்தில் ஒளிரக் கூடிய பொருள் இருப்பது தெரிந்தது. இது நாசா விஞ்ஞானிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு எடுத்து அனுப்பப்பட்ட படத்தில் இது போன்று ஒளிரும் பொருள் தெரிந்தது. அப்போது இது கியூரியாசிட்டி விண்கல கருவியின் உடைந்த பாகமாக இருக்கலாம் என கருதினர்.
தற்போது மணல் படத்திலும் ஒளிரும் பொருள் தெரிவதால் அது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு வித்தியாசமான கனிம பொருள் என கணித்துள்ளனர். எனவே அது குறித்து ஆய்வு நடத்த செவ்வாய் கிரகத்தின் மற்றொரு பகுதியில் மணலை வெட்டி எடுத்து ஆய்வு செய்யுமாறு கியூரியாசிட்டி விண்கலத்துக்கு விஞ்ஞானிகள் கட்டளை பிறப்பித்துள்ளனர்.
                                                                                           -Vituthalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக