Translate

சனி, அக்டோபர் 06, 2012

சுத்தமான தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா கண்டுபிடிப்பு


   நியூயார்க்: நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களை 24 காரட் சுத்த தங்கமாக மாற்றும் பாக்டீரியாவை, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்குலர் ஜெனடிக்ஸ் துணை பேராசிரியர் கசிம் கசெபி மற்றும் எலக்ட்ரானிக் ஆர்ட் மற்றும் இன்டர் மீடியா இணை பேராசிரியர் ஆடம் பிரவுன் ஆகியோர் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கு சில நூறு மைல் தொலைவில் உள்ள சில இடங்களில் கிடைத்த தங்க படிமங்களில் குப்ரியாவிடஸ் மெட்டாலிடியூரன்ஸ் வகை பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இவற்றை ஆய்வுக்கூடங்களில் கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்த தங்க குளோரைடு கரைசலில் வளர்க்க அவர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற்றதுடன், தங்க குளோரைடு கரைசல் 99.9 சதவீத சுத்த தங்கமாகவும் மாறி ஆச்சர்யம் அளித்துள்ளது. விஞ்ஞான ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. எனினும், தங்க சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை விட, ரசாயன முறையில் தயாரிக்கப்படும் இந்த தங்கத்தின் விலை மிகவும் அதிகம் என்கிறார் பிரவுன்.
                                                                                                                 நன்றி--தினமலர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக