Translate

வெள்ளி, அக்டோபர் 19, 2012

அரசு பள்ளி மாணவர்களுக்கு 30 தகவலுடன் "ஸ்மார்ட் கார்டு'

சிவகங்கை: அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முகவரி உட்பட 30 தகவல்கள் அடங்கிய "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கான பணி நடக்கிறது.

ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவருக்கும் அடையாள அட்டையை போன்று போட்டோவுடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவர்களின் பெயர், முகவரி, வகுப்பு, ஜாதி, குடும்ப வருமானம், உடன் பிறந்தவர்களின் விவரம் உட்பட 30 தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்குரிய படிவம் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலுள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மாணவர்களின் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அக்.,30க்குள் இப்பணியை முடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதன்பின், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு "ஸ்மார்ட் கார்டு' வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ""அடையாள அட்டைக்கு பதிலாக "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகிற
                                                                                 
                                                 நன்றி--தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக