Translate

வெள்ளி, அக்டோபர் 26, 2012

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் டெங்கு காய்ச்சல் பரவியது: பொதுசுகாதாரத்துறை தகவல்

............
சென்னை, அக்.26-பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீரினால் பரவும் நோய்கள் மற்றும் நோய்களை கண்டறியவும் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் சென்னையில் உள்ள மருத்துவத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக ரூ.2.75 கோடி மதிப்பில் பிரமாண்டமான கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

பொது சுகாதாரத்துறையின் தலைமை அலுவலகத்திற்காக கட்டப்படும், இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன், பகல் பொழுதில் மின்சார சிக்கனத்திற்காக அலுவலகத்திற்குள் சூரியஒளி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதி திட்டத்தின் கீழ் ஆறு மாடி கட்டிடம் கட்ட பொது சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.

இதுவரை பொது சுகாதாரத்துறைக்கு என்று தனியாக கட்டிடம் இல்லாத நிலை இருந்துவந்தது. பொது சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பிரிவுகள் தற்போது மருத்துவத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது.

புதிய கட்டிடம் கட்டிமுடித்த உடன், அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைத்து புதிய கட்டிடத்தில் செயல்படும் வகையில் மாற்றப்பட உள்ளது. வரும் நிதியாண்டில் முதல் தளம் கட்டும் பணி தொடங்க உள்ளது.   பொது சுகாதாரத்துறையில் மட்டும் 40 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களது செயல்பாடுகளை ஆராயவும், ஆய்வு செய்யவும் மாநில தலைமை இயக்குனர் அலுவலகத்தில் மாதம் தோறும் ஆய்வு கூட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை-இயக்குனர்களுக்கான ஆய்வு கூட்டம் நடக்கிறது.

பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடக்கிறது. டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்யப்படுகிறது. கள அதிகாரிகள் பங்கேற்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக அழிக்க பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டது. முதல் கட்ட ஆய்வில் டெங்கு காய்ச்சலுக்கு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

எப்போதும் இல்லாத அளவு பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்திவிட்டு, குப்பைகளில் போடுகின்றனர். இதனால் பிளாஸ்டிக்குகளில் மழை தண்ணீர் தேங்குவதால் அதில் கொசு முட்டையிட்டு பெருகுகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவுவதாக தெரியவந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நோய் கண்டவர்களுக்கு போதிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

திங்கள், அக்டோபர் 22, 2012

சூரிய ஒளி மின்சாரத்தில் ஒளிரும் கிராமம்

மத்திய பிரதேச மாநிலம் மீர்வாடா கிராமம் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை மின்சாரத்தையே பார்த்திராத ஒரு கிராமமாக இருந்தது. இங்குள்ள வீடுகளில் வெளிச்சம் தருவது மண்ணெண்ணெய் விளக்குகளும், தீவட்டிகளும்தான்.

பள்ளிக்குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தனர். ஆனால் இன்று அந்த கிராமத்தின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மண்ணெண்ணெய் விளக்குகளும், தீவட்டிகளும் விடை பெற்றுவிட்டன. இன்று அனைத்து வீடுகளிலும் மின் விளக்குகள் ஒளிருகின்றன. இவற்றுக்கு சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுக்கப்படுகிறது.

இந்த மாற்றம் திடீரென எப்படி ஏற்பட்டது? ஒரு ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த சோலார் மின் உற்பத்தி செய்யும் சன் எடிஸன் என்ற நிறுவனம், இந்தக் கிராமத்தில் சோதனை அடிப்படையில் சோலார் மின் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தியது.  அது வெற்றிகரமாக அமைந்ததாலும், கிராம மக்களிடம் வரவேற்பு பெற்றதாலும், இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

மீர்வாடா கிராமத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும், தெரு விளக்குகளுக்கும் போதிய அளவுக்கு சூரிய ஒளி மின்சாரம் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள பள்ளி மாணவ- மாணவிகள் மின்சார விளக்கின் அடியில் இருந்து பாடம் படிக்கின்றனர்.

இரவு நேரத்தில் இந்த கிராமம் சூரிய ஒளி மின்சாரத்தால் ஒளிருகிறது. மின்வெட்டு, மின் தொகுப்பில் ஏற்படும் கோளாறு இவற்றில் எதுவும் இந்த கிராம மக்களை பாதிக்காது. நாடே இருளில் மூழ்கினாலும், மீர்வாடா போன்ற சூரிய ஒளி மின்சார கிராமங்கள் மட்டும் ஒளிர்ந்து கொண்டு இருக்கும்.

வெயிலை அதிகம் ஈர்க்க கருப்பு சோலார் பலகைகள்



சோலார் பலகைகள் எனப்படும் சூரிய மின் பலகைகள் ஆழ்ந்த நீல நிறத்தில் காணப் படுகின்றன.  உலகெங்கிலும் சூரிய மின் பலகைகள் இந்த நிறத்தில் தான் காணப் படுகின்றன. கூடிய விரைவில் இவை நல்ல கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படலாம். அதற்குக் காரணம் உண்டு

இப்பலகைகள் மீது சூரிய ஒளி படும் போது ஒளியானது மின்சாரமாக மாற்றப் படுகிறது. சூரிய ஒளி என்பது போட்டான்களே. இந்த போட்டான்களைத் தான் சூரிய மின் பலகைகள் கிரகிக்கின்றன. போட்டான்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதுவரை ஆழ்ந்த  நீல நிறத்தை பயன்படுத்தி வந்தார்கள்.

அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் உள்ள நாட்கோர் டெக்னாலஜி என்ற நிறுவனம் அட்டைக் கரி என்று சொல்வோமே அந்த அளவுக்கு கருப்பாக உள்ள சோலார் செல்களைக் கொண்டு சூரிய மின் பலகையைத் தயாரித்து சோதித்துப் பார்த்தது. வழக்கமான சூரிய மின் பலகைகள் சூரிய ஒளியில் அடங்கிய போட்டான்களில் 96 சதவிகிதத்தையே கிரகிப்பதாகக் கூறப்படுகிறது.

இத்துடன் ஒப்பிட்டால் கருப்பு நிற சோலார் செல்கள் 99.7 சதவிகித அளவுக்கு போட்டான்களைக் கிரகிப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்த வித்தியாசம் வெறும் மூன்று சதவிகிதமே என்றாலும் கருப்பு சோலார் செல்களைப் பயனபடுத்தும் போது கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.

கருப்பு நிற சோலார் மின் பலகைகள் குறித்து இத்தாலி, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

வேண்டாம்.... ஹீலியம் பலூன்!

இப்போதெல்லாம் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் வீட்டில் ஏதாவது விழா என்றால் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களை வாங்கி ஆங்காங்கு கட்டி விடுகிறார்கள். சென்னை உட்பட பெரிய நகரங்களில் இவ்வகை பலூன்களை விற்பதற்கென ஏஜன்டுகள் உள்ளனர். இவை பார்ட்டி பலூன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மேலை நாடுகளில் கேட்கவே வேண்டாம். விதவிதமான ஹீலியம் பலூன்கள்.விலங்குகள் உருவத்தில் பெரிய பெரிய பலூன்கள், உலோகப் பூச்சு கொண்ட பல வித வண்ணம் தீட்டப்பட்ட பலூன்களும் உண்டு.

ஹீலியம் என்பது  ஒரு வகை வாயு. அது தீப்பிடிக்காதது. அந்த வாயு நிரப்பப்பட்ட பலூனின் நூலை விட்டால் அது  உயரே போய்விடும். ஹைட்ரஜன் வாயுவைப் போலவே ஹீலியம் வாயுவும் காற்றைவிட லேசானது. ஆகவே தான் ஹீலியம் பலூனும் ஹைட்ரஜன் பலூனைப் போலவே  நூலை விட்டால் மேலே போய் விடும்.ஆகவே பார்ட்டிகளில் ஹீலியம் பலூன்களைக் கொத்து கொத்தாகக் கட்டி வைப்பார்கள்.

ஹீலியம் என்ற வாயு  உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில் தான். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூலஸ் ஜான்சன்  என்ற வானவியல் விஞ்ஞானி பூரண சூரிய கிரகணத்தை ஆராய் வதற்காக சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்திருந்தார். ஆந்திர மாநிலத்தில் குண்டூரில்  1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி அவர் சூரிய ஒளியின் நிறமாலையை ஆராய்ந்த போது மஞ்சள் நிற வரியைக் கண்டார்.

பின்னர் அதே ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி  நார்மன் லாக்கியர் இந்த விஷயத்தை மேலும் ஆராய்ந்து அதுவரை அறியப்படாத தனிமத்தை   அது காட்டுகிறது என்றார். இந்த இருவரும் ஹீலியத்தைக் கண்டுபிடித்தவர்களாகக் கருதப்படுகின்றனர். அந்த தனிமத்துக்கு ஹீலியம் என்று பெயர் வைக்கப்பட்டது. கிரேக்க மொழியில் ஹீலியம் என்றால் சூரியன். முதலில் சூரியனில் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பிறகே பூமியில்  கண்டுபிடிக்கப்பட்ட தனிமம் உண்டென்றால் அது ஹீலியம் ஆகும்.

உலகில் மிக நீண்ட காலமாக  ஹீலியம் உற்பத்தியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமெரிக்காவில் நிலத்துக்கு அடியில்  காணப்படும் எரிவாயுப் படிவுகளிலிருந்து ஹீலியம் எடுக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் அமெரிக்கா கடந்த பல ஆண்டுகளில் பல நூறு கோடி லிட்டர் அளவுக்கு ஹீலியம் வாயுவை சேமித்து வைத்து வந்தது.

இந்த சேமிப்புகளில் கணிசமான பகுதியை காலி செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்தே ஹீலியம் நிறைய அளவில் மார்க்கெட்டுக்கு வந்தது. அதன் முக்கிய விளைவுகளில் ஒன்றுதான் ஹீலியம் பலூன்கள். எதுவும் தாராளமாக, எளிதில் கிடைக்கிறது என்றால் அப்பொருள் அர்த்தமில்லாமல் வீணடிக் கப்படும். ஹீலியம் வாயு விஷயத்தில் இது பொருந்தும்.

ஹீலியம் வாயு இயற்கை வளங்களில் ஒன்று. ஆனால் இது ஒன்றும் எல்லா இடங்களிலும் கிடைப்பது அல்ல. அண்மைக்காலமாக அல்ஜீரியா விலும் ரஷியாவிலும் கிடைக்கிறது. ஹீலியம் வற்றாமல் கிடைக்கக்கூடிய பொருள் அல்ல என்பதால் உலகில் பல நிபுணர்களும் ஹீலியத்தை வீணடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஹீலியம் பற்றிய விசேஷ ஆராய்ச்சிக்காக 1996 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கார்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் ரிச்சர்ட்சன் கூறுகையில்.  ஹீலியம் பலூன்கள் மூலம் ஹீலியம் வீணடிக்கப்படுவதைக் கண்டித்துள்ளார்.

பார்ட்டி பலூன்கள் மூலம் ஹீலியம் வீணாக்கப்படுவதை பிரிட்டனில் உள்ள ரூதர்போர்ட் ஆப்பிள்டன் ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானி ஓலெக் கிரிசெக் கண்டித்துள்ளார்.

மற்றும் பல நிபுணர்களும் ஹீலியம் பார்ட்டி பலூன் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.  ஸ்கேன் எடுக்கின்ற பெரிய கருவிகளில் காந்தங்களைக் கடுமையாகக் குளிர்விக்க ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது.அண்மையில் ஹிக்ஸ் போசான் துகளைக் கண்டுபிடித்த  ஆராய்ச்சிக்கூடத்தின் சுமார் 1600 காந்தங்களைக் கடுமையாகக் குளிர்விக்க ஹீலியம் பயன்படுத்தப்படு கிறது.

மற்றும் பல ஆராய்ச்சிக்கூடங்களுக்கு ஹீலியம் முக்கியமாகத் தேவைப்படுகிறது. இன்று ஹீலியத்தை வீணாக்கினால் எதிர்காலத்தில் ஹீலியம் கிடைப்பது திண்டாட்டமாகி விடலாம் என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

ஆனால் சுற்றிலும் ஆங்காங்கு கட்டப்பட்ட ஹீலியம் பலூன்களின் நடுவே மது மயக்கத்தில் உரத்த குரலில் கூச்சலிட்டபடி பார்ட்டியைக் கொண்டாடுவோரின் காதில் இதெல்லாம் விழுமா?

ஒற்றை தலைவலிக்குக் காரணம்?

ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது.
காரணம்:
குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுணர்வு ஆனந்தம்.
அறிகுறிகள்:
இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள் தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.
1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.
3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.
4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.
செய்ய வேண்டியவை:
1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.
2. 2-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.
2. வெயிலில் அலைவது.
3. காரமான உணவு வகைகள்.
4. வயிறு முட்ட சாப்பிடுதல்.
5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை.

பல்லுயிர் பெருக்க பாதுகாப்புக்கு 2 மடங்கு நிதி: அய்தராபாத் மாநாட்டில் உலக நாடுகள் முடிவு

அய்தராபாத், அக்.22-பல்லுயிர் பெருக்க பாதுகாப்புக்கு இரண்டு மடங்கு நிதி அளிக்க அய்தராபாத் மாநாட்டில் உலக நாடு கள் சம்மதம் தெரிவித் தன.
அய்தராபாத் நகரில், அய்.நா. சபையின் பல் லுயிர் பெருக்க பாது காப்பு மாநாடு ஒரு வார காலமாக நடந்து முடிந் தது. இந்த மாநாட்டை முதன் முதலாக இந் தியா நடத்தியது. இந்த மாநாட்டில் 172 உலக நாடுகளிலிருந்து 2 ஆயி ரத்து 500 பிரதிநிதிகள், 3 ஆயிரம் உள்ளூர் பணி யாளர்கள், 77 அமைச் சர்கள், துணை அமைச் சர்கள் கலந்துகொண் டனர்.
இந்த மாநாட்டில், அழிந்துவரும் பல்லு யிர்களை அழிவிலிருந்து தடுப்பதற்கு தேவை யான நடவடிக்கை களை மேற்கொள்வ தற்கு அளிக்கிற நிதியை இரண்டு மடங்காக அதி கரிக்க பல்வேறு நாடு களும் சம்மதம் தெரி வித்தன.
குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள், சர்வ தேச அளவில் பல்லுயிர் பெருக்கம் தொடர் பான இலக்கை அடை வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப் பதற்கு அளிக்கிற நிதியை இரு மடங்காக்க முன் வந்தன.சரகாஸ்சோ கடல், டோங்கா தீவுகள், பிரேசில் கடலோரப் பகுதிகள்ஆகியவை கடல் பகுதியில் கடலுயிரிகளை  பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும்.
பல்லுயிர் பெருக்க கன்வென்சன் நிர்வாக செயலாளர் பிரவ்லியோ பெரைரா பேசுகையில், பல்லுயிர் பெருக்க கன் வென்சன் விதிகளை அமல் படுத்த உலக நாடு கள் சம்மதம் தெரிவித் துள்ளன. இவற்றை செயல் படுத்துவதில், பல்வேறு நாடுகளும் முன்னோக்கி செல்வதை பார்க்கி றோம் என்று கூறினார்.
இந்த மாநாட்டில் மத் திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நட ராஜன் கலந்து கொண்டு பேசுகையில்
பல்லுயிர் பெருக் கத்தை பொறுத்தமட் டில்மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை களை தற்போதைய பொருளாதார நெருக் கடிகள் தடுத்து விட முடியாது. மாறாக, பூமி யில் உள்ள அனைத்து உயிர்களும் சார்ந்து வாழ்வதற்கு ஏற்ற வகை யில், தடையற்ற சுற்றுச் சூழல் சேவைகளை உறுதி செய்கிற வகை யில், கூடுதல் நிதி முத லீடு செய்வதற்கு எங்க ளுக்கு ஊக்கம் கிடைத் துள்ளது'' என கூறினார்.
அய்.நா.சபையின் துணைச்செயலாளரும், சுற்றுச்சூழல்திட்ட செயல் இயக்குனரு மான ஆசிம் ஸ்டெயினர் பேசும்போது,அய் தராபாத்தில்இந்த மாநாடு, ஆழ்ந்த சிந்த னைமிக்க விவாதங் களுடன் முடிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நாகோயாவில் (ஜப்பான்) நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது. பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற் றுக்கு முன்னுரிமைஅளிக்க வேண்டும்என்பதை அனைத்து நாடுகளும் உணர்ந்து, கூடுதல் வாக் குறுதிகளை அளித்துள் ளன என்று கூறினார்.
                                                                                                             Courtesy-vituthalai

.

நகைச்சுவை


"ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."!!!

***********
கேடி  : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.
கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.
கேடி  : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது

***********
இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"
"படத்தோட பேரு?"
"ஜிம்மி ரிடர்ன்ஸ்
 
 

எப்பவுமே அடுத்தவங்களுக்கு உதவி பண்ணனும்-ஜோக்ஸ்

"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."
"எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"


டீச்சர்: உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்: 96 பேர்...
டீச்சர் : என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என்  கூட  பிறந்தவங்களை  சொன்னேன்  ...

"ராமு, எப்பவுமே அடுத்தவங்களுக்கு உதவி பண்ணணும்"
"பண்றேன், ஆனா, அவங்க யாருக்கு உதவி பண்ணுவாங்க?"
"அவங்களும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுவாங்க"
"அவங்கதான் அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்களே, நாம ஏன் பண்ணணும்?"
"சரி, நீ அவங்களுக்கு உதவி பண்ணு, அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்ணட்டும்"
"பண்றேன், ஆனா, நாம அவங்களுக்கு உதவி பண்றோம், அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்க… அடுத்தவங்க என்ன பண்ணிகிட்டு இருக்காங்க?"

"கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?"
"காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்

ராமன்: என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?
சோமன்: அதுவா, லஞ்ச் டயம் என்பதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க!!!

தளபதி : மன்னா நம் அரன்மனையைச்சுற்றி கன்னிவெடிகள் புதைத்து வைத்துள்ளனர்..
மன்னர் : அப்படியா!!! உடனடியாக வெடிகளை அகற்றிவிட்டு கண்ணிகளை அழைத்து வாருங்கள்..

"திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா...
வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?
திருடன்: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்."

"கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன்: எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!

"மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...
கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு
Once Banta Singh attended an Interview.

Interviewer : Give me the opposite words.
Banta Singh : Ok
Interviewer : Made in India
Banta Singh : Destroyed in Pakistan
Interviewer : Good... Keep it Up
Banta Singh : Bad.... Put it Down
Interviewer : Maxi Mum
Banta Singh : Mini Dad
Interviewer : Enough! Take your Seat
Banta Singh : Insufficient! Don't take my seat
Interviewer : Idiot! Take your seat
Banta Singh : Clever! Don't take my seat
Interviewer : I say you get out!
Banta Singh : You didn't say I come in
Interviewer : I reject you!
Banta Singh : You appoint me
Interviewer : ....!!!!!!!
 
ஆபிசர்: பியுஸ் போயி ஒரு மாசம் ஆகுது இப்ப வந்து கம்ளைண்ட் குடுக்கறீங்க?
தமிழ்நாடு குடிமகன்: சாரி சார். பவர் கட்டுன்னு நெனச்சுட்டேன்..

நோயாளி என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க டாக்டர்!
டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!
நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!"

"வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?
திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன். 

அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன,
ஆனா உன் ரூம் லைட்டே எரியல?....: ... ....- 
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!!!

"வீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..
திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...
 

எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்..ஜோக்ஸ்

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
அறனி - ஏன்டி நிர்மலா " டாக்டர் எனக்கு எழுதிய லவ் லெட்டர் என் கணவரின் கையில் அகப்பட்டுவிட்டது
நிர்மலா - "அப்படியா அப்புறம் என்னாச்சு"?
அறனி - அதில என்ன எழுதி இருக்குன்னு தெறியாம அதக் கொண்டுபோய் மெடிக்கல் ஷாப்பில மருந்து வாங்கிட்டு வந்துட்டார்....

வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்

பயணி -1 :என்ன  சார் திடீர்னு ரயிலு நின்னுடுச்சு
பயணி -2 : டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.
பயணி-1 : எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது  தடுமாறி கீழே விழும்னு நினைச்சேன்.

அவர் :நேத்து உங்க காருக்கு எப்படி Accident   ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"

தோழி : 1:உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார்.. 
தோழி :2 :ஓ அதுவா நான் மேக்கப்பை கலைச்சிட்டேன் அதுதான்  
அம்மா : இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு ஒழுங்காக இருக்காங்களோ
அவங்களுக்கு நானொரு பரிசு தரப்போறேன்
பிள்ளைகள் : போம்மா இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை
எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்

டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி     சா‌ப்‌பிடறதை ‌
நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.
நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?.

போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

விற்பனையாளர் : இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி
வாங்குபவர் : நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''
 

வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே..ஜோக்ஸ்!

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?" "சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

"எந்த ஐட்டம் கேட்டாலும் இல்லைன்னு சொல்றே, அப்புறம் என்ன எழவுக்கு மெனுகார்டை கொடுத்தே?" "ஒவ்வொரு ஐட்டத்தோட பேரையும் சொல்லி, இல்லைன்னு சொன்னா எனக்கு வாய் வலிக்குமே சார்."

நீதிபதி: ஏம்பா. இவ்வளவு பெரிய திருட்ட நீ மட்டும் தனியாவா செஞ்ச? குற்றவாளி: ஆமா ஐயா. இப்ப காலம் கெட்டுக் கிடக்குது. யாரையும் நம்ப முடியல...

மனைவி: என்னங்க பட்டாசு வாங்கப் போறேன்னு சொல்லிட்டு.. வெடிச்ச பட்டாசை எல்லாம் பொறுக்கிட்டு வர்றீங்க? கணவன்: அந்தக் கடைக்காரன் பழைய பட்டாசைக் கொடுத்து ஏமாற்றிவிடுவான்னு சொன்னாங்க. அதனால்தான் ஒவ்வொரு பட்டாசையும் வெடிக்குதான்னு வெடிச்சுப் பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன், எப்படி என் சாமர்த்தியம்!

ஸ்கூல் வாத்தியார நம்ம கிரிக்கெட் டீம் கோச்சா போட்டது தப்பாப்போச்சு!" "ஏன்?" "பிளேயர் சரியா விளையாடலைன்னா 'போய் உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வா'ன்னு சொல்றாரு!"

"இவர்தான் நம்ம புதிய சி.இ.ஓ. முதன்முதலா நம்ம ஆஃபீசுக்கு வந்துருக்காரு! ஸ்ரீநிவாசன் இவரை அழைச்சுட்டு போய் உட்கார வையுங்க!" "என்ன சார் இது? இவ்வளவு வயசு ஆனவருக்கு இன்னும் உட்கார கூடவா தெரியாது?"

"என்னடா ரொம்ப கவலையா இருக்கே?" "பின்ன என்னடா? அந்த பேங்க்ல லட்சக்கணக்கில் பணம் இருக்கு.. ஆனா அவசரத்திற்கு எடுக்க முடியலையே?" "ஏன் ஏடிஎம் கார்ட் தொலைஞ்சு போச்சா.. இல்ல செக் புக் இல்லையா?" "நீ வேற எனக்கு அந்த பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லடா"

மனைவி: புது டெலிபோன் டைரக்டரி எடுத்துக் கொண்டு ஒருவன் வந்துள்ளான்! கணவன்: அவனிடம் வேண்டாம்னு சொல்லு, நான் இன்னும் பழசையே படித்து முடிக்கவில்லை!

"ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?" "பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்."

கணவன்: குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா...? மனைவி: இல்லே... அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார்....

"சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துக்கிட்டது தப்பாப் போச்சு.. "ஏன்? "படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..

"ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?" "பிறர் சிரிக்கும்படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க."

"போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு...." "அதுக்கென்ன....?" "குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டுவேன்னு ஒரே தகராறு பண்றாரு..."

ஒருவர்: நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன் மற்றவர்: அப்புறம்? ஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்..

உங்களில் யார் கவுண்டமனி...


சுரேஷ்: டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா....
நரேஷ்: அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா....


இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார். பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்

கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?"
"கோழியினால்தான் முட்டை வந்தது"
"எப்படி?"
"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை

 'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?'
'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு
சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'


நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். 
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். 
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், 
ஐயா.



ஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது.... 
தலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்? 
ஆசிரியர் : கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டயிருந்து கடன் வாங்கணும்னு சொன்னா.. நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான். 
தலைமை ஆசிரியர் : ?!?!

"ஐயா, எனக்கு ஏழு குழந்தைகள்... உற்பத்திக்கேத்தபடி சம்பளம் கூட்டிக் கொடுங்க." "அந்த உற்பத்திக்கெல்லாம் சம்பளம் கூட்டித் தரமுடியாது... பேக்டரியிலேயே உற்பத்தியைக் கூட்டினவங்களுக்குத்தான் சம்பளம் கூட்ட முடியும்."

"ஏங்க டூ வீலர இவ்ளோ வேகமா ஓட்டிக்கிட்டு வர்றீங்க.. அந்த தெரு திருப்பத்துல உங்க மனைவி விழுந்துட்டாங்க பாருங்க.." "ஓ.. அப்படியா? நான் தான் என் காது செவிடாகி விட்டதுன்னு நெனச்சிக்கிட்டேன்."

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்? 
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்பவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.

கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் முதல்லேயிருந்தே ஒத்து வரல்லேன்னு எப்படிச் சொல்றீங்க?" "தேனிலவுக்கே ரெண்டு பேரும் தனித்தனியா போனாங்கன்னா பாத்துக்கயேன்."

"என் மருமகக்கிட்டே கோயில் மாதிரி வீட்டை வெச்சிக்கணும்னு சென்னது தப்பாப் போச்சு." "ஏன்? என்னாச்சு...?" "வாசல்லே ஒரு உண்டியலை வெச்சிட்டா."

நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க? 
டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு. நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம். 
டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்? 
நர்ஸ்: ???

"என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?" "தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலாபாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!"
 

ஜோக்ஸ் கனவன் மனைவி..


தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன்

ஆனால் நீ இல்லை...
பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு "எருமை மாடு" என்று!
சில உண்மைகள் கசகத்தான் செயும் ....

***********************
அமலா: சச்சின் க்கும் என் கனவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்!
கமலா: என்ன அது?
அமலா: சச்சின் "சதம் அடிப்பார்" என் கனவர் "சாதம் வடிப்பார்"!
கமலா: !!!???

***********************
சாமி… நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்…?”
அடப்பாவி… நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?”
நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க

**********************
சாப்பிடும்போது கூட உன் கனவருக்கு ஆபிஸ் ஞாபகமா?
எப்படிச் சொல்றே?
உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்

***********************
இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா

********************
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி: என்னங்க, இந்த நேரத்துல...
புருஷன் : ஒரு அதிசயம் நடந்துருச்சி..
பொண்டாட்டி: என்ன அதிசயம்?
புருஷன் : ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுது. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி : தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றிங்களா, மூடிகிட்டு படுங்க..

**************
புருஷன் : !!!!!!!????
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி

**************

கனவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு!
குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க?
மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்

**************

வேலைக்காரியை பிடிச்சுக்கிட்டு அழுவுறாரே உன்
புருஷன், ஏன்?
வேலைக்காரிகிட்டே சிரிச்சுப் பேசாதீங்கன்னு சொன்னேன்,
அதான்!

*************
ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குள்க்கிறே?
யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!

*************
என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.

*************
மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கனவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கனவன்: நடுவுல நீ வந்துட்ட..
  

ஜோக்ஸ் டாக்டர்..

ஏன்யா விஷத்தை சாப்பிட்டே?”
வயித்துவலி தாங்கமுடியலே டாக்டர். சாகதான் சாப்பிட்டேன்.”
நீ ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுக்கறே… நாங்க எதுக்கு இருக்கோம். இங்க வந்து அட்மிட் ஆனா நாங்களே அதைப் பார்த்துக்குவோமில்லே!

டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு
மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி
இருக்கு?
நோயாளி…- பரவாயில்லை குணமாயிட்டுது
டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லை
ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு
வந்தடறேன்….

 டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.

ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் ஒரு வாரம் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : !!!




 நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"

உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?

நர்ஸை டாவடிக்க ஏதாவது ஒரு நோய் பெயரைச் சொல்லிட்டு இந்தாளு அடிக்கடி வர்றான்!”

“டாக்டர் தான் போலின்னா பேஷண்ட்டுமா?”

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !




டாக்டர் : நூறு பர்சன்ட் கரெக்டான நேரத்துக்குத்தான் உங்க தாத்தாவைக் கூட்டி வந்திருக்கீங்க!

அவன் : என்ன டாக்டர், அவ்வளவு மோசமான பண நெருக்கடியா உங்களுக்கு?

”ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'

'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'
உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க !'


டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது.....

காட்டுங்க உங்க பர்ஸை !'
 


மனைவி : நேத்து ஆ‌பி‌ஸ் போ‌னீ‌ங்களே, ஆனா இன்னிக்குத்தான் வீட்டுக்கு வர்றீங்க?
கணவன் : நான் பாட்டுக்கு தூங்கிட்டே இருந்துட்டேன், என்னை யாருமே எழுப்பல அதான்.


என்ன உன் கணவர் ஆபிஸ்லேயிருந்து வந்து, பக்கத்து
வீட்டு கதவைத் தட்டறாரு?
தூக்கம் சரியா கலையலை போல..!

நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க?
டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு.
நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம்.
டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்?
நர்ஸ்: ???


என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா

‎"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்." "அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?"
"மாமூலன்!"

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!

காட்டுவாசி: மாசாலாவைக் கொஞ்சம் தூக்கலா போடணுமா…ஏன்..?
அண்டாவில் மனிதனை வேக வைக்கும் காட்டுவாசி:-
இவன் மண்டையிலே மசாலாவே இல்லையாம்

பேரன்:- அம்மம்மா... பள்ளி விளையாட்டுப்போட்டியில நான் 200 m ஓடபோறன் என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க!
அம்மம்மா:- கவனம் மெதுவா ஓடுப்பா!!
பேரன்:- உங்கிட்ட போய்.

எதுக்கு போலீஸ்காரர்
தபால்காரர் கூட சண்டை போடறாரு?"
"தந்தி வந்துருக்குனு சொல்ரதுக்கு பதில்,
தொந்தி வந்துருக்குனு சொல்லிட்டாராம்!

மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க…?
வரதட்சணைக் கேட்டா கேஸ் போடுவோம்..!


டாக்டர்! எனக்கு பல் ஆடுது!" "எந்த பாட்டுக்கு?"

"இருள் இருள்" என்று சொல்லிக் கொண்டு சும்மாயிருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிசெய்.. (நாங்களும் தத்துவம் சொல்லுவம்ல)
 
 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்........
என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.........
வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்..........
அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.........

மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்?
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

டீச்சர்: "நான் ஒரு கொலை செய்துவிட்டேன்" இதன் 'எதிர்காலம்' என்ன.?
மாணவன்: நீங்கள் ஜெயிலுக்குப்போவீர்கள்

படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…
படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,
படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..
படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : இதுக்குத் தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!
படிச்சவன்: ? ? ? ? ?

தளபதி ; மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?....
அரசன் : வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொள்வோம்..

என்ன இது..ஃபேஷன் ஷோவுல மாடல்கள் எல்லாம் தலையிலே
ஒரு மூட்டையோட, மண்ணெண்ணை கேனைத் தூக்கிக்கிட்டு
நடந்து வர்றாங்களே…?
இது 'ரேஷன் ஷோ'வாம்..!

உடம்புல எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லுறீங்க..அப்புறம்
எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க..?
-
வெயிலுக்கு குளிர்ச்சியா நாலு நர்ஸூங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னுதான்..!

நீங்க கொடுத்த செக், பேங்க்ல பணம் இல்லைனு சொல்லி
திரும்ப வந்துடுச்சி…!
பொய் சொல்றாங்க! கேஷியர்கிட்டே நிறைய பணம் இருக்கு,
நானே பார்த்தேன்..!

சில உண்மைகள்..
முதல் உண்மை  : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !
,
,
,
,
,
,
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால !
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

பூனை மற்றொரு பூனையிடம், 'அதோ போகுதே அதுதான் என்
'மாமியாவ்'..!

 

ஞாயிறு, அக்டோபர் 21, 2012

செவ்வாய் கிரக மணலில் ஒரு ஒளி

வாஷிங்டன், அக். 21- அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி என்ற ஆய்வு கூட விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அங்கு நிலை நிறுத்தப்பட்ட கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தை படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பியது.  அங்கு பாறையை வெட்டி எடுத்து பல கோணங்களில் படங்கள் எடுத்து அனுப்பியது. இந்த நிலையில் தற்போது முதன் முறையாக செவ்வாய் கிரகத்தின் மணலை தோண்டி எடுத்து ஆய்வு செய்து வருகிறது.
அது குறித்த படத்தில் வெள்ளை நிறத்தில் ஒளிரக் கூடிய பொருள் இருப்பது தெரிந்தது. இது நாசா விஞ்ஞானிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு எடுத்து அனுப்பப்பட்ட படத்தில் இது போன்று ஒளிரும் பொருள் தெரிந்தது. அப்போது இது கியூரியாசிட்டி விண்கல கருவியின் உடைந்த பாகமாக இருக்கலாம் என கருதினர்.
தற்போது மணல் படத்திலும் ஒளிரும் பொருள் தெரிவதால் அது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு வித்தியாசமான கனிம பொருள் என கணித்துள்ளனர். எனவே அது குறித்து ஆய்வு நடத்த செவ்வாய் கிரகத்தின் மற்றொரு பகுதியில் மணலை வெட்டி எடுத்து ஆய்வு செய்யுமாறு கியூரியாசிட்டி விண்கலத்துக்கு விஞ்ஞானிகள் கட்டளை பிறப்பித்துள்ளனர்.
                                                                                           -Vituthalai

சனி, அக்டோபர் 20, 2012

மாநகராட்சி பள்ளிகளில் சாக்பீஸ், கரும்பலகைக்கு குட்பை

கோவை: மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
திட்டத்தின் முதல் கட்டமாக மணியகாரன்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதல் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் (ஏ.ஐ.எப்) எனும் அமைப்பின் நிதியுதவியுடன், டிஜிட்டல் ஈக்குவலைசர் எனும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்தகட்டமாக பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகளை துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி., வசதியுள்ள இந்த வகுப்பறைகளில் "டெல்' மற்றும் ஏ.ஐ.எப். அமைப்பின் சார்பில் 25 கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர், டிஜிட்டல் பிளாக்போர்டு, இன்டெர்நெட் இணைப்பு, புரொஜக்டர் உள்ளிட்ட வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் கோவை ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் கூறியதாவது: வருங்காலங்களில் கம்ப்யூட்டர் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட நவீன உலகில், மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து வெளியேறும் மாணவர்களும் நிலைத்து நிற்க, அவர்களுக்கும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப அறிவு முக்கியம்.
மாணவர்களின் கம்ப்யூட்டர்கள், ஆசிரியர் வசமுள்ள கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் இன்டர்நெட் இணைப்பை மாணவர்களால் தவறாக பயன்படுத்த முடியாது.
இன்டெர்நெட் இணைப்பு உள்ளதால், பாடம் தொடர்பான தகவல்கள் மற்றும் படங்களை உடனுக்குடன் "டவுன்லோடு' செய்து படிக்கலாம். இதே வசதியுள்ள பிற மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன், "வீடியோ கான்பிரன்ஸ்' முறையில் பாடம் தொடர்பாக கலந்துரையாடலாம்.
"சாக் அண்டு டாக்' எனும் பழைய கற்பித்தல் முறைக்கும், மனப்பாட கல்வி முறைக்கும் இனி "குட்பை' சொல்லி விடலாம். இத்திட்டம் பெறும் வெற்றியின் அடிப்படையில், மீதமுள்ள பள்ளிகளிலும் துவங்கப்படும். 2014 வரை செயல்படுத்தப்படும் இத்திட்டம், அதன் பின் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
                                                                                 
                                                   நன்றி--தினமலர்.

வெள்ளி, அக்டோபர் 19, 2012

மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி?

வெயிலோ, மழையோ, குளிரோ, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, நமது உடல் தகவமைத்துக் கொள்ளும் இயல்புடையது. அதேபோல, அந்தந்த தட்பவெப்பத்திற்கேற்ப, வைரஸ், பாக்டீரியாக்களால் நோய்களும் அதிகமாக பரவ ஆரம்பிக்கும். தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. அதற்கு முன்பே, ஆங்காங்கே மழை கொட்டத் துவங்கி விட்டது. நோயின் முன்னோடியாக, "டெங்கு' காய்ச்சல் தமிழகம் முழுதும் பரவலாகி விட்டது. இதேபோல மழைக்காலத்தில், பல்வேறு நோய்களும் நம்மைத் தாக்கும். வெயில் காலத்தில் "எறும்பைப் போல' சுறுசுறுப்பாக செயல்படும் நாம், மழைக்காலத்தில் சோம்பல் நிலைக்கு சென்று விடுவோம். திடீர் மழையில் நனையும் போது சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். மழைக்கால நோய்கள், அதிலிருந்து நம்மை பாதுகாப்பது, நோய் வந்தால் எப்படி செயல்படுவதென, "மழைக் காலத் தொடரில்' டாக்டர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.மழைக்கால பொதுவான நோய்கள், அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி.

மழைக்காலம், பனிக்காலம் என்றாலே அதிக சளி, மூச்சுதிணறல், இருமல் தொந்தரவு பரவலாக இருக்கும். நோயாளிகள் இதிலிருந்து தங்களை தற்காத்து கொள்வது அவசியம்.ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் நோய் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது, மழையில் நனையக் கூடாது. மழையில் நனைந்தால் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல், மூச்சு முட்டல் ஏற்படும். இருதய நோயாளிகள் மழை, அதிக குளிரில் செல்லக்கூடாது. அதிக குளிர், ரத்தத் தமனிகளை சுருங்கவைப்பதால், ஆபத்தில் முடியலாம். மாரடைப்பு மற்றும் வால்வு கோளாறு உள்ளவர்களுக்கு அடிக்கடி சளிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பக்கவாதம், மூளை தொடர்பான நோய்கள் இருந்தால், நோயை கூடுதலாக்கி விடும்.சர்க்கரை நோயாளிகள் மழைக் காலத்தில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய முடியாது. எனவே, ரத்த சர்க்கரை கூட வாய்ப்புள்ளது. அந்தநிலையில், உணவுக் கட்டுப்பாட்டை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதிக குளிரில், அதிகாலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யும் போது, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தேங்கிய மழைநீர் மூலம் சிக்குன்குனியா, டெங்கு, பன்றி காய்ச்சல் வரலாம். பன்றி காய்ச்சல் கிருமிகள் (எச்1என்1) அதிக குளிர், மழை சீதோஷ்ணத்தில் அதிகமாக உற்பத்தியாகும். எனவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். பெண்கள், ஈரத்தலையுடன் இருந்தால், "சைனஸ்' தொல்லை ஏற்படும். வைரசால் கண்நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
குளிருக்கு அதிக டீ, காபி குடித்தால் ஆபத்து
பாதுகாப்பில்லாத குடிநீரால் மஞ்சள் காமாலை நோய் தாக்கலாம்.
கொதிக்க வைத்த வெதுவெதுப்பான நீரை குடித்தால், காலரா, வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும், கிருமிகளில் இருந்து நம்மை காப்பாற்றும்.
மழை பெய்யும் போது, சாக்கடை கழிவுநீரும் சேர்ந்துவிடும். தவிர்க்க முடியாமல் நடந்து வந்தாலும், உடனடியாக ஆடையை மாற்றி, கால்களை நன்கு கழுவ வேண்டும்.
மழையில் நனைந்த ஆடைகள் மூலம், தோல்நோய்கள் வரலாம்.
உடல் இயங்குவதற்கு தண்ணீர் அவசியம். குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளிர், மழைக் காலத்தில் உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க, சிலர் அதிகமாக சிகரெட் புகைப்பர், மதுரை அருந்துவர். இவர்களுக்கு மாரடைப்பு, நுரையீரல், கல்லீரல் தொடர்பான நோய்கள் வரலாம்.
காப்பி, டீ அதிகமாக குடித்தால், வயிற்றுப் புண் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளின், கொழுப்புச்சத்து அதிகரிக்க காரணமாகிவிடும்.
                                                                                        
                                                      நன்றி--தினமலர்.