Translate

திங்கள், டிசம்பர் 26, 2011

RAMAN EFFECT


இராமன் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை சர்.சி.வி.ராமன் 1928- ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்பிற்காக இராமனுக்கு 1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பொருளடக்கம்

 

ராமன் விளைவு என்றால் என்ன?

ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.[1] அவை
  • படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;
  • முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;
  • முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்;

பயன்பாடுகள்

இயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் “கைரேகை” யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.
  • பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல்,
  • சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல்,
  • வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிதல்,
  • அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல்,
  • 10 -11 வினாடியே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளை பதிவு செய்வதில் ஒளிவேதியலாளர்கள், ஒளிஉயிரியலாளர்களுக்கு லேசர்-இராமன் நிறமாலையியல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக