Translate

திங்கள், டிசம்பர் 26, 2011

VEERA SAVARKAAR


வினாயக் தாமோதர் சாவர்க்கர்


வினாயக் தாமோதர் சாவர்க்கர்
Savarkar3xt.jpg
வினாயக் தாமோதார் சாவர்க்கர்
பிறப்பு மே 28 1883
பாகூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு பெப்ரவரி 26 1966 (அகவை 82)
மும்பை, இந்தியா
வலீந்து ஏற்ற வலியில்லா மரணம் யூதனேசியா
தேசியம் இந்தியர்
வேறு பெயர்கள் வீர் சாவர்க்கர்
அறியப்படுவது இந்திய சுதந்திரபோராட்ட இயக்கம், இந்துத்வா
கல்வி பெர்குசன் கல்லூரியி, புனே, இளங்கலை பட்டம்
அரசியல் கட்சி இந்து மாகா சபை
சமயம் இறை மறுப்பாளர், இந்துத்வம்
வாழ்க்கைத்
துணை

யமுனா பாய்
பிள்ளைகள் மகன்கள் பிராபாகர் (குழந்தையிலேயே இறப்பு), விஷ்வாஸ் சாவர்க்கர், மகள் பிராபாத்-தாய் சிபுலங்கர் ( அவரின் திருமணத்திற்குப் பின்)
வினாயக் தாமோதர் சாவர்க்கர் (Vinayak Damodar Savarkar) (பிறப்பு மே 28, 1883, பகதூர்- இறப்பு பெப்ரவரி 26, 1966, மும்பை) இந்துத்வா வில் அதிக நாட்டம் கொண்ட இந்திய அரசியல்வாதியும் , சுதந்திர போராட்ட வீரருமான இவர் வீர் சாவர்க்கர் (துணிவுமிக்க சாவர்க்கர்) என அனைவராலும் அறியப்படுகிறார். இந்து தேசியவாதிகளின் மைய உருவமாகக் கருதப்படுகிறார். அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஆங்கில அரசால் சிறைச்சாலையிலிருந்து வெளியே வாழ அனுமதிக்கப்பட்ட பின்னர்,சாதி பேதங்களைக் களைதல் போன்ற சமூக சீர்த்திருத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இவர் ஒரு இறை மறுப்பாளரும் கூட. இவரின் இறுதிகால வாழ்க்கை மாகாத்மா காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட பின்னணியுடன் கூடியது. பின்னர் நீதிமன்றம் இவர் குற்றமற்றவர் எனக்கருதி விடுதலை செய்தது.


 கல்வி மற்றும் புரட்சி
சாவர்க்கரின் புரட்சி அவரின் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் கல்வி பயிலும் பருவத்திலேயே துவங்கியது. அங்குள்ள இந்தியா இல்லத்தில் மாணவர்களுடன் சேர்ந்து அவினவ் பாரத் சங்கம் என்ற சுதந்திர இந்தியா சங்கத்தை உருவாக்கி சுதந்திரத் தாகத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்தினார். 1857 ல் ஏற்பட்ட இந்தியப் பிரிவினையை எதிர்த்து எழுதிய இந்திய சுதந்திரத்திற்கான போர் என்ற நூல் பிரித்தானியரால் தடை செய்யப்பட்டது. 1910 ஆண்டு இந்தியா இல்லத்தில் இருந்த புரட்சியியாளர்களுடன் தொடர்பினால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும் வழியில் பிரான்சின் மார்செய்ல்ஸ் துறைமுகத்தின் அருகே தப்பிக்க முயன்றதால் 50 ஆண்டுகால சிறைத்தண்டணைக் கொடுக்கப்பட்டு அந்தாமான் சிற்றறைச் சிறைக்கு அனுப்பப்பட்டார். இச்சிறையில் இந்து தேசியவாதத்தை வெளிப்படையாக ஆதரித்து கட்டுரை எழுதினார். 1921 ல் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

 சிறந்த பேச்சாளர்

சாவர்க்கர் மிகச் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் இந்து அரசியலையும், சமூக ஒற்றுமையும் பறைசாற்றின. மேலும் சாவர்க்கர் இந்தியா இந்துக்களின் நாடு என்றும் அதை இந்து இராச்சியம் (இந்து ராஷ்டிரியா) என அழைக்க வலியுறுத்தினார். இதன் காரணமாக 1942 ல் அமைக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு (குவிட் இந்தியா முழக்கம்) இயக்கத்தினை எதிர்த்தார். பிரிவினைக்கு ஆதரவளித்த இந்திய தேசிய காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக நிகழ்ந்த காந்தி படுகொலையில் நீதிமன்றம் அவரை குற்றவாளியில்லை என்று விடுவிக்கும் வரை குற்றம்சாட்டப்பட்டவராயிருந்தார். அவரின் இறுதி காலங்களை இந்துத்வாவை தன் எழுத்துக்களின் மூலம் விரிவாக்குவதில் செலவிட்டார்.

 இறப்பு

பிப்ரவரி 26, 1966, யூதனேசியா (Euthanasia) என்ற மருத்துவ சொல்லால் அழைக்கப்படும் வலியில்லா மரணத்தை (கருணைக்கொலை என்றும் கூறுவர்.) வலீந்து (Voluntarily)ஏற்று இறப்பைத் தழுவினார். இவர் இறுதி மரியாதையில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இவர் பயன்படுத்தியப் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக