Translate

வியாழன், செப்டம்பர் 06, 2012

நூறு நாள் வேலை திட்டம் 150 நாள் ஆகிறது !

புதுடில்லி: தேசிய அளவில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதை சமாளிக்கும் வகையிலும் கிராமபுற மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டிய முயற்சியாகவும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்திட மத்திய அரசு திடமிட்டுள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டியது இருக்கும்.
மத்திய அரசின் கனவு திட்டமான தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி கெண்டு வரப்பட்டது. இதன் மூலம் கிராமங்களில் விவசாயப்பணிகள் இல்லாத காலங்களில்,அரசுப்பொதுப்பணிகளை மேற்கொள்ள கிராமவாசிகளுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து கிராமவாசிகளுக்கு இந்த திட்டத்தில் பணியாற்றிய பின்னர் நாள் ஒன்றுக்கு கூலி ரூ.120 வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் நல்லவரவேற்பினை பெற்றுள்ளதால், கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வறட்சியை சமாளிக்க உதவும்:


இந்நிலையில் இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும்விதமாக 100 நாட்கள் என்பதனை 150 நாட்களாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த நிதியாண்டில் 2011-12-ம் ஆண்டில் 33 ஆயிரம் கோடியினை நிதி ஒதுக்கியுள்ளது.தற்போது பருவமழை பொய்த்துவிட்டதால் சில மாநிலங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. இம்மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் வேலை நாட்களை 100 -ல் இருந்து 150 நாட்கள் உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் அரசுக்கும் நல்ல பெயர் :

இது தெடர்பாக மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையிலான அதிகாரப்பூர்வ அமைச்சரவை குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடக்கிறது. இக்கூட்டத்தில் பருவமழை பெய்யாத மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. வறட்சி பாதித்த மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில் வேலை நாட்களை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட உள்ளன. இதன் மூலம் மழையில்லாமல் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் பலன் அடைவர். காங்கிரஸ் அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என நிதிதுறை ஆலோசகர்கள் தங்களின் ஆலோசனையை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

1 கருத்து:

  1. Indian prime minister"s P.A. says we should farming 5% only enough....SO THEY eradicate the individual farming ..in our ....mother land....

    பதிலளிநீக்கு