Translate

வியாழன், செப்டம்பர் 20, 2012

அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றி

     பாலசோர்: அணு ஆயுதம் ஏந்திச் செல்லும், அக்னி - 4 ஏவுகணை, ஒடிசா மாநிலம் வீலர்ஸ் தீவில் இருந்து, நேற்று விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இது, 4,000 கி.மீ., தூரம் சென்று, இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.

    இதுகுறித்து, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு அதிகாரிகள், பாலசோரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அக்னி - 4 ஏவுகணை, வீலர்ஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ள, தானியங்கி செலுத்தி மூலம் காலை, 11:45 மணிக்கு, விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை, அணு ஆயுதத்துடன், 4,000 கி.மீ., தூரம் வரை சென்று, இலக்கை தாக்கி அழிக்கக் கூடியது. அதிவேக தகவல் தொடர்பு சாதனம் மற்றும் டிஜிட்டல் கன்ட்ரோல் வசதி கொண்ட, உயர் செயல்திறனுடன் இயங்கக்கூடிய கம்ப்யூட்டர், அக்னி - 4 ஏவுகணையை கட்டுப்படுத்தி வழி நடத்தும் பணியை மேற்கொண்டது. இதுவரை இல்லாத வகையில், நவீன தொழில்நுட்பங்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள, இந்த அக்னி ஏவுகணை, முந்தைய தயாரிப்புகளை ஒப்பிடுகையில், எடை குறைவானது. இரண்டு கட்டமாகச் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் எரிபொருள் கட்டமைப்பு, 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கக் கூடியது. பல்வேறு கட்டங்களில் தீவிர சோதனை செய்யப்பட்டு தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கு முன், கடந்த, 2011ம் ஆண்டு, நவம்பர் 15ம் தேதி நடந்த அக்னி ஏவுகணை சோதனையும், வெற்றிகரமாக முடிந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

                                                                          Courtesy-Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக