Translate

வியாழன், செப்டம்பர் 13, 2012

வெளிநாட்டு கல்வி - கனடா ஒரு மாற்று

கடந்த 2008-09ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், கனடாவிற்கான மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2009-10ம் ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் குறைந்துவிட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் படிப்பிற்கு பிந்தைய விசா நெருக்கடி போன்றவை, கனடாவை நோக்கி அதிக மாணவர்களை தள்ளுகிறது.


உயர்கல்வி அமைப்பு
இளநிலைப் படிப்புகள் 4 வருட காலமும், முதுநிலைப் படிப்புகள் 2 வருட காலமும் கொண்டவை. பி.எச்டி ஆய்வை மேற்கொள்ள விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா ஒரு சிறந்த இடம். ஏனெனில், அந்நாட்டு அரசாங்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
சில கனடா பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் மாதத்திலும், மற்றவை ஜனவரி மாதத்திலும் மாணவர் சேர்க்கை செயல்பாடுகளை மேற்கொள்கின்றன.
புகழ்பெற்ற படிப்புகள்
பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, விமானப் போக்குவரத்து, அனிமேஷன், ஹாஸ்பிடாலிடி மற்றும் பயோடெக்னாலஜி போன்றவை கனடாவில் புகழ்பெற்ற படிப்புகளாக இருந்தாலும், இந்திய மாணவர்கள் கனடாவில், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளை மேற்கொள்ளவே விரும்புகிறார்கள்.
மேலும், கணினி மென்பொருள், டெலிகாம் மற்றும் மருத்துவம் தொடர்பான படிப்புகள் போன்றவையும் கனடாவில் புகழ்பெற்றவை.
செலவினங்கள்
கனடியக் கல்லூரிகள் அதிகளவில் நிதியுதவிப் பெறுபவை. அங்குள்ள பல்கலைகளில் இளநிலைப் படிப்புகளுக்கு, வருடத்திற்கு சராசரியாக ஒரு வருடத்திற்கு 15000 முதல் 24000 கனடிய டாலர்கள் வரை செலவாகின்றன. கம்யூனிட்டி கல்லூரிகளைப் பொறுத்தவரை, 1 வருடத்திற்கு சுமார் 12000 கனடிய டாலர்கள் செலவாகின்றன.
நிரந்தர தங்கும் வசதி
ஒருவர் பலவகைகளில், நிரந்தர தங்குதல் அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும். இவற்றில், Federal skilled worker category, the Canadian experience class, the Investor category போன்ற பல வகைகள் உள்ளன. தேவையான தகுதிகள் மற்றும் காரணங்கள் இருந்தால், நிரந்தர தங்குமிட அனுமதியானது கனடாவில் எளிதாக கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக