Translate

திங்கள், செப்டம்பர் 17, 2012

ஐகோர்ட்டில் வழக்கு: டி.இ.டி. தேர்வு தள்ளி போகுமா?


 


  சென்னை: டி.இ.டி., மறுதேர்வு, அக்டோபர் 3ம் தேதி நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என தெரியாததால், தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை, 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) எழுதிய, 5.5 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வில் தோல்வி அடைந்தவருக்கு, அக்டோபர் 3ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
அக்டோபரில் நடக்கும் தேர்வில், புதிய தேர்வர் பங்கேற்க முடியாது என, டி.ஆர்.பி., ஏற்கனவே அறிவித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இம்மனுவிற்கு விரிவாக பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 17ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.
    தேர்வுத் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென புதிய தேர்வர்களை அனுமதித்தால், புதிதாக விண்ணப்பம் வழங்குவது, கூடுதலாக கேள்வித்தாள் அச்சடிப்பது என, பல்வேறு பணிகளை, டி.ஆர்.பி., செய்ய வேண்டியிருக்கும். இப்பிரச்னை குறித்து, தமிழக அரசுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த குழப்பங்களால், அக்டோபர் 3ம் தேதி, திட்டமிட்டபடி டி.இ.டி., தேர்வு நடக்குமா என்ற குழப்பத்தில், தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக