Translate

ஞாயிறு, செப்டம்பர் 02, 2012

டிவி பார்ப்பதை தவிர்த்து நாளிதழ் படிக்க ஆலோசனை

               திண்டுக்கல்: ஆதிதிராவிடர் விடுதிகளில் டிவி பார்ப்பதை தவிர்த்து, மாணவர்கள் நாளிதழ்கள் படித்து அறிவு வளர்க்க வேண்டும் என தேசிய நலக்குழு உதவி இயக்குனர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் விடுதிகளை தேசிய நலக்குழு உதவி இயக்குனர் ராமசாமி ஆய்வு நடத்தி வருகிறார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: விடுதிகளில் சமையல் அறை, கழிப்பறை, தங்கும் அறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுற்றுச்சூழலை பராமரிக்க, சுற்றுப்புறங்களில் தோட்டங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகளின் குறைகளை விடுதி வார்டன்கள் கேட்க வேண்டும். நோய் வாய்ப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும். சுத்தமான குடிநீர் அனைத்து விடுதிகளிலும் தர வேண்டும். பெண்கள் விடுதிகளில், பாதுகாப்பு முக்கியம்.
மாணவர்கள் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களில் மூழ்கி, தங்கள் அறிவை மழுங்கடிக்க கூடாது. நாளிதழ்களை வாங்கி அவர்களை படிக்க செய்ய, வார்டன்களுக்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

                                                                    Courtesy-Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக