Translate

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

பாதி இதயத்துடன் 4 மாதமாக வாழும் குழந்தை

இங்கிலாந்தில் பாதி இதயத்துடன் பிறந்த குழந்தை ஒன்று கடந்த 4 மாதமாக வாழ்ந்து வந்துள்ளது மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அதாவது, குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆன பிறகுதான், மற்றக் குழந்தைகளைப் போல நம் குழந்தை இல்லை, அதற்கு ஏதோ பிரச்னை உள்ளது என்று அதன் தாய் மருத்துவமனைக்கு அழைத்து வந்து பல்வேறு சோதனைகள் செய்ததில், அந்த குழந்தையின் ஒரு பகுதி இதயம் வளரவேயில்லை என்பது தெரிய வந்துள்ளது.பொதுவாக இதுபோன்ற குழந்தைகள் பிறந்ததும் இறந்துவிடும், அல்லது சில நாட்களிலேயே இறந்துவிடும். சில குழந்தைகளுக்கு மட்டும் பிரச்னை கண்டறியப்பட்டு உடனடியாக மருத்துவ சிகிச்சை துவங்கினால், உயிர் வாழ வாய்ப்புள்ளது. ஆனால் இது எல்லாவற்றையும் விஞ்சிவிட்டது என்கிறார்கள் மருத்துவர்கள்.ஒரு பக்க இதயம் வளராததால், நுரையீரலுக்கு போக வேண்டிய ரத்தத்தின் அளவு குறைந்து குழந்தை மூச்சுவிட சிரமப்படும். இந்த குழந்தையும் பிறந்ததில் இருந்தே அடிக்கடி அழுதுகொண்டே இருந்துள்ளது. ஆனால், அதற்கு இவ்வளவு பெரிய காரணம் இருக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்கிறார் அதன் தாய். இக்குழந்தைக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக