சமூகத்தில் மாணவர்கள்
ஒழுக்கமுடையவர்களாக இருக்க பெற்றோ ர்கள் முன்மாதிரியாக இருப்பது அவசியம்,
என காவல் துணை கண்காணிப்பாளர் அனிதா கூறினார்.நஞ்சநாடு அரசு
மேல்நிலைப் பள்ளியில் வாழ்வியல் ஒழுக்க விழிப்புணர்வுக் கூட்டம்
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமையாசிரியர்
எல்.லட்சுமணன் தலைமை வகித்தார். காவல் துணை ஆய்வாளர் பிரேமலீலா, ஆசிரியை
ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.என்.சி.சி அலுவலர்
க.சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உதகை
புற நகர் காவல் துணை கண்காணிப்பாளர் அனிதா பேசியது:கல்வியறிவு,
தொழில்நுட்ப வளர்ச்சி, தனிமனித சுதந்திர விழிப்புணர்வு உள்ளிட்ட
காரணங்களால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், இவற்றை தவறான வழியில் பயன்
படுத்தும்போது தனிமனித ஒழுக்கம் சீரழிகிறது. முதன்முதலில் குழந்தைகள்
பெற்றோருடன் வாழ்வதால் அவர்கள் மனதில் அவர்களது செயல்கள் ஆழமாகப்
பதிகின்றன.குழந்தைகள் முன்பு சண்டை போடுவது, தகாத
வார்த்தைகளை பயன்படுத்துவது, புகைபிடித்தல், மது அருந்ததுல் உள்ளிட்ட
செயல்கள் குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கும். இத்தகைய சூழலில் வாழும்
குழந்தைகள் வளர் இளம் பருவத்தை அடையும் போது பல்வேறு தீய பழக்கங்களுக்கு
எளிதில் ஆளாகின்றனர்.காலத்தின் சூழலுக்கு ஏற்ப வளர் இளம்
பருவத்தினரின் மனநிலை அறிந்து பெற்றோர் செயல்படவேண்டும். இல்லையெனில், மன
அழுத்தம், தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்னைகளுக்கு குழந்தைகள் ஆளாகி
தற்கொலை எண்ணங்களுக்கு அது வழிவகுக்கும். எனவே, சமூகத்தில் மாணவர்கள் சுய
ஒழுக்கம் கொண்டவர்களாக மாற பெற்றோர் முன்மாதிரியாக இருப்பது அவசியம்.குடும்பச்
சூழலை தவிர்த்து பள்ளிகள், பொது இடங்களில் மாணவர்களுக்கு ஏற்படும்
பிரச்னைகளுக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக