Translate

சனி, செப்டம்பர் 08, 2012

நெதர்லாந்தை மறந்துவிட வேண்டாம்...

          வெளிநாட்டு கல்வி என்றால், பொதுவாக நினைவுக்கு வராத நாடு நெதர்லாந்து. ஆனால் அங்கே, பல சிறப்புத்தன்மை வாய்ந்த தரமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
    உயர்கல்வி அமைப்பு
         இந்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் 2 வகைப்படும். ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகங்கள் என்பவைதான் அவை. ஆராய்ச்சிப் பணிகளில் ஆர்வமுள்ள மாணவர்கள், ஆராய்ச்சி பல்கலையையே தேர்வுசெய்ய வேண்டும்.
மாணவர் சேர்க்கை முறைகள்
       மாணவர் சேர்க்கை நடைமுறைகள் பொதுவாக பல்கலைக்கு பல்கலை மாறுபடும். இளநிலைப் படிப்பில் சேர வேண்டுமானால், நல்ல மதிப்பெண் மற்றும் கல்வி செயல்பாடுகளுடன், பள்ளி மேல்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
முதுநிலைப் படிப்புகளைப் பொறுத்தவரை, இளநிலைப் படிப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், TOEFL, IELTS போன்ற தேர்வுகளில், தேவையான அளவு மதிப்பெண்களைப் பெற்று தேறியிருக்க வேண்டும். இவைத்தவிர, வேறு சிலவகைத் தேர்வுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
புகழ்பெற்ற படிப்புகள்
        வேளாண்மை, காற்று, தண்ணீர் மற்றும் கட்டடக்கலை ஆகிய துறைகள் மீதான ஆராயச்சியில் நெதர்லாந்து புகழ்பெற்றது. எனவே, இத்துறைகள் சார்ந்த படிப்புகள் இங்கு பிரபலம். பசுமை ஆற்றல், மண் அறிவியல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் போன்றவையும் பெயர்பெற்ற படிப்புகளே.
செலவினம்
      ஒரு வருடத்திற்கான இளநிலைப் படிப்பு கல்வி கட்டணம் 9000 முதல் 15000 யூரோக்கள் வரை ஆகிறது. முதுநிலைப் படிப்பிற்கு 10000 முதல் 18000 யூரோக்கள் வரை செலவாகிறது. அதேசமயம், தங்கும் செலவுகள் சற்று அதிகம் என்றே கூறலாம். மாதத்திற்கு 600 முதல் 700 யூரோக்கள் வரை செலவாகிறது.
வேலை வாய்ப்புகள்
       வாரத்திற்கு 8 மணிநேரங்கள் வரை பகுதிநேரமாக ஒரு மாணவர் பணியாற்றலாம். விடுமுறை காலத்தில் முழுநேரமாக பணியாற்றலாம். 1 வருட மாணவர் நீட்டிப்பு விசாவானது, ஒரு மாணவர் தனக்கு பொருத்தமான பணியைத் தேட உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக