Translate

வியாழன், செப்டம்பர் 20, 2012

கல்விக்கு நல்ல நாடு நியூசிலாந்து!

உயர்கல்வித் துறையில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக நியூசிலாந்து விளங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில், நியூசிலாந்தில் படித்துவரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 400% அதிகரித்துள்ளது.
உயர்கல்வி அமைப்பு
அந்நாட்டின் 8 அரசு பல்கலைகள், இதர கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக்குகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற கல்லூரிகள் போன்றவை பல்வேறு படிப்புகளை வழங்குகின்றன.
தொழிற்கல்வி, இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் டாக்டோரல் பட்டப்படிப்பு என்று மொத்தம் 4 பிரிவுகளாக இந்நாட்டின் உயர்கல்வியானது பிரிக்கப்பட்டுள்ளது.
சேர்க்கை நடைமுறைகள்
நியூசிலாந்தின் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற நினைக்கும் மாணவர்கள், TOEFL, IELTS போன்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதோடு, சிறந்த கல்வி நிலைய செயற்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும்.
புகழ்பெற்ற படிப்புகள்
பொறியியல், கம்யூட்டிங் மற்றும் ஐடி, டிராவல் மற்றும் சுற்றுலா, ஹாஸ்பிடாலிடி மற்றும் கலைப் படிப்புகள் போன்றவை அந்நாட்டில் வழங்கப்படும் பெயர்பெற்ற படிப்புகள்.
செலவினங்கள்
ஒரு வருடத்திற்கான பாலிடெக்னிக் படிப்பிற்கு ஆகும் செலவானது, 10,000 நியூசி டாலருக்கும், 15,000 நியூசி டாலருக்கும் இடைபட்டது. அதேசமயம், பல்கலைப் பட்டப்படிப்பிற்கு ஆகும் 1 வருட செலவு 18,000 நியூசி டாலருக்கும், 25,000 நியூசி டாலருக்கும் இடைபட்டது.
அதேசமயம், முதுநிலைப் படிப்பிற்கான செலவு 40,000 நியூசி டாலர்கள். அந்நாட்டில் தங்கும் செலவானது, ஒரு வாரத்திற்கு 300 முதல் 350 நியூசி டாலர்கள் வரை ஆகும்.
வேலை வாய்ப்புகள்
நியூசிலாந்தில், முழுநேரமாக 2 வருட படிப்பை முடித்தவர்கள் அல்லது முதுநிலைப் படிப்பில் குறைந்தது 1 வருட படிப்பை முடித்தவர்கள் ஆகியோர், 1 வருட கிராஜுவேட் வேலைத்தேடும் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.
இதன்மூலம், பட்டதாரிகள் அந்நாட்டில் 1 வருடம் தங்கியிருந்து, தங்களுக்கான திறன்மிகு பணியை தேடிக்கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக