இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமையைப் பெற்ற தமிழ்ப் பெண்மணி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1886-1968).பெண்கள்
படிப்பதே அபூர்வம் என்ற அந்த காலக்கட்டத்தில் 13-ம் வயதில் எட்டாம்
வகுப்பை முடித்தார். புதுக்கோட்டையில் மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார்.
கல்லூரியில் ஒரே மாணவியாக படித்தார். அவருடன் படித்தவர்களில்
ஒருவர்தான் தீரர் சத்தியமூர்த்தி. சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து
1912-ம் ஆண்டு மருத்துவப் பட்டதாரியானார் முத்துலட்சுமி ரெட்டி. சென்னை
அடையாறில் அவ்வை இல்லம் ஏற்படுத்தி ஆதவரவற்ற பெண்களுக்கு வழிகாட்டினார்.
அடையாறில் தற்போது இயங்கி வரும் புற்றுநோய் மருத்துவமனையைச் சொந்த
முயற்சியில் நிறுவினார்.எந்த வசதியும் இல்லாமல் பல்வேறு
தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி ஒரு பெண்ணால் இந்த அளவிற்கு உயர
முடியும் என்றால், எல்லா வசதி வாய்ப்புகளும், ஊக்குவிக்கும் இருக்கும் மாணவ
மணிகளாக உங்களால் எந்த அளவிற்கு உயர முடியும் என்பதை சிந்தியுங்கள். தடைக்கற்களையே
படிகட்டுகளாக மாற்றும் போது... உங்களுக்கு எதிரே உள்ள படிகட்டுகளில் ஏறி
சாதனை படைப்பது என்பது எவ்வளவு எளிதான விஷயம்.. சாதிப்பீர். வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக