Translate

ஞாயிறு, செப்டம்பர் 02, 2012

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு அவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2 லட்சமாக அதிகரித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.சமூக மற்றும் பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும் வகையில் கொள்கைகளை வகுத்து, அதற்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ஏனைய திட்டங்களுடன் மாநில அரசின் 10-ம் வகுப்புக்கு மேற்பட்ட படிப்புக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கென அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சம்  நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.இந்த உச்ச வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்தவும், நடப்புக் கல்வியாண்டு முதலே இதனை நடைமுறைப்படுத்தவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.34.83 லட்சம் செலவு ஏற்படும்.நரிக் குறவர்கள் என்கிற குருவிக்காரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் பழங்குடியினரைப் போன்று உள்ளதைக் கருத்தில் கொண்டு நரிக் குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக