Translate

சனி, செப்டம்பர் 29, 2012

கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம்: உயர் கல்வித்துறை துணை தலைவர்

மதுரை: "தமிழக உயர்கல்வித் துறையில் ஆராய்ச்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு திட்டங்கள் செயல்படுகின்றன" என அத்துறையின் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் தெரிவித்தார்.
மதுரை காமராஜ் பல்கலையில், "பல்கலை மற்றும் கல்லூரிகளில் உயர்தர வசதிகளை உருவாக்குவது&' தொடர்பான தேசிய கருத்தரங்கை, நேற்று துவக்கி வைத்து சிந்தியா பாண்டியன் பேசியதாவது:
பல்கலை மற்றும் கல்லூரிகளில் உயர்தர வசதிகளை உருவாக்குவது மட்டுமின்றி, திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அப்போது தான் "அறிவுசார்&' மாணவர்கள் கிடைப்பார்கள். ஆராய்ச்சிகள் மூலம் புது கண்டுபிடிப்புகளையும், அதற்குச் சாதகமான சூழ்நிலையையும் உயர் கல்வி துறையில் ஏற்படுத்த வேண்டும்.
ஆராய்ச்சியில், உலக தரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் தகுதி 3.5 சதவீதம் மட்டுமே. எனவே, அறிவுசார்ந்த ஆசிரியர்களும், மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகளும் அவசியம். இதற்காக, உயர்கல்வி துறையில், தமிழக அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
"விஷன் 2023" திட்டத்தில் பல்கலையில் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், திறன் சார்ந்த மேம்பாட்டு வளர்ச்சிக்காக, தலா 4.74 கோடி வீதம், 47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பப் பாடங்களை தெரிவு செய்யும் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், அரசு மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், திறமையான ஆசிரியர், மாணவர் வெளிநாட்டு கல்வி முறையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக