அமெரிக்காவின்
தலைசிறந்த அரசியல் அறிஞரும் உலகம் போற்றும் விஞ்ஞானியுமான பெஞ்சமின்
பிராங்கலின் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை கைவிட்டு பத்து
வயதிலே வேலைக்கு பேனவர் என்று உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் நண்பர்களே
அந்த வியத்தகு விஞ்ஞானியின் வரலாற்றை புரட்டிப்பார்ப்போம் .
அமெர்க்காவின்
பாஸ்டன் நகரில் எளியகுடும்பம் ஒன்றில் பிறந்த பிராங்கலின் குடும்ப
வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை கைவிட்டு விட்டு 10 வயதிலே தனது
தந்தையுடன் மெழுகுவர்த்தி தொழிலை மேற்கொண்டார் . ஆனால் அவருக்கு அந்த
தொழில் பிடிக்கவில்லை ஆதலால் அச்சுக்கூடத்தில் வேலைக்கு சேர்ந்தார் . சிறு
வயதிலே அச்சுக்கூடத்தை தனியாக நிர்வாகாம் செய்யும் அளவிற்க்கு திறமையை
வளர்த்துக்கொண்டார் .
பட்டினி இருந்தும் அறிவை வளர்தவர்
அச்சுத்துறையில்
பணியாற்றியதால் பலவகையான் நூலக்ளை வாசிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது .
பள்ளிப்படிப்பை கைவிட்டாலும் தன்னுடைய உணவுச்செலவை குறைத்துக்கொண்டும் சில
நேரங்களில் பட்டினி இருந்தும் பணத்தை மிச்சப்படுத்தி பல வகையான நூல்கள்
வாங்கி படித்தார் தனது இருபது வயதில் தனியாக அச்சுக்கூடத்தை நிறுவி நூல்களை
வெளியிட்டார் .அறிவை வளர்க்கும் தரமான நூல்கள் கிடைக்காமல் தான் பட்ட
கஷ்டங்களை மக்கள் படக்கூடாது என்பதற்காக முதன் முறையாக நடமாடும் நூல்
நிலையம் ஒன்றினை அமைத்தார்
அறிவியல் சாதனைகள்
பிராங்லின்
தனது 38 ஆம் வயதில் அறிவியல் துறையில் நிலைமின்சாரம் ஆராய்ச்சியில்
இறங்கினார் லண்டன் நகரில் மின்புயலின்(Electric storm) போது பட்டம் ஒன்றை
பறக்கவிட்டு மின்னல் மின்னாற்றலால் ஏற்படுகிறது என்று உலகிற்கு அறிவித்தார்
மேலும் இடி இடிக்கும்போது கூர்மையான இரும்பு கம்பியை உயரமான கட்டிடத்தில்
வைத்து அதை ஒரு கம்பி வழியாக பூமியில் செலுத்தும் இடிதாங்கி தத்துவத்தையும்
கூறினார். ஜரோப்பா முழுவதும் இவரது ஆய்வினை அறிந்ததோடு மட்டுமில்லாமல்
உலகின் பல மொழிகளில் மொழிபெயர்த்தும் வெளிட்டனர்.
உலகை திகைக்க செய்த சோதனை
மின்னேற்றத்தை
சேமிக்கும் லெய்டன் ஜார் (leyden jar) எனப்படும் குடுவை உட்புறம் நீரினை
நிரப்பிக்கொண்டார் அதன் வெளிப்புறம் உலோகமுலாம் பூசப்பட்டது. இந்த ஜாடியினை
மின்னேற்றம் செய்தார் பின் ஜாடியில் இருந்து நீரினை கொட்டி விட்டு புதிதாக
நீரினை நிரப்பினார் அப்போதும் ஜாடி மின்னேற்றம் கொண்டு இருந்தது அதுவரை
அறிவியல் உலகம் நீரில் தான் மின்னேற்றம் இருக்கும் என நம்பி வந்தது ஆனால்
தனது லெய்டென் ஜார் சோதனை மூலம் மின்னேற்றம் ஜாடியின் நீரில் இல்லை
கண்ணாடியில் இருந்தது என நிறுவிக்காட்டினார் இந்த தத்துவம்மூலம்
தொலைக்காட்சி , வானொலிகளில் பயன்படும் parallel plate capacitor ஐ
கண்டுபிடித்தார் .
நவீன மின் இயற்பியலுக்கு அடிப்படை
இன்றை
அறிவியல் எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்சாரம் என்று கூறுகிறது இதை பதினேழாம்
நூற்றான்டிலே தனது மின்சாரம் பற்றிய பாய்மக்கொள்கை(Fluid Theory of
Electricity ) யில் பிராங்கலின் கூறியுள்ளார் அதன் சாரம்சம் இதுதான் “
அனைத்து பொருள்களும் ஓரளவு மின் பாய்மத்தை தன்னுள்ளே கொண்டு உள்ளது ஒரு
பொருள் மின் பாய்மத்தை ஏற்க்கவோ அல்லது இழக்கவோ செய்யும் அது பாய்மத்தை
ஏற்றாலும் இழந்தாலும் மின்னேற்றம் கொண்டதாக மாறிவிடுகிறது மின் பாய்மத்தை
ஏற்றால் நேர்மின்னோட்டம், மின்பாய்மத்தை இழந்தால் அது எதிர் மின்னோட்டம் “
பிராங்லின் இந்த தத்துவம் தான் இன்றைய நவீன மின் இயற்பியலுக்கு அடிப்படை
ஏழ்மையால்
பள்ளிப்படிப்பை பத்து வயதிலே நிறுத்திய பெஞ்சமின் பிராங்கலின் அரசியலில்
பல பதவிகளை பெற்று உயர் நிலையை அடைந்ததோடு மட்டுமல்ல அறிவியல் துறையிலும்
பல சாதனைப்படைத்தார் . தனது 85 ஆம் வயதில் இறந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக