Translate

வியாழன், செப்டம்பர் 27, 2012

விதி மீறல் 50 பட்டாசு ஆலைகளுக்கு "சீல்'

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலைகளில், அதிகாரிகள் குழு நடத்திய, 14 நாள் ஆய்வில், 50 பட்டாசு ஆலைகளுக்கு, "சீல்' வைக்கப்பட்டுள்ளது; 296 ஆலைகளுக்கு "நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில், 39 பேர் பலியாகினர். பட்டாசு ஆலைகளில் உள்ள விதி மீறல்கள் குறித்து, ஆறு துறை அதிகாரிகள் அடங்கிய, 11 குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. மாவட்டத்தில், 601 ஆலைகள், வெடி மருந்து கட்டுப்பாட்டு அலுவலக உரிமத்துடனும், 88 ஆலைகள் டி.ஆர்.ஓ., உரிமத்துடனும் இயங்கி வந்தன. 14 நாட்களில், 346 பட்டாசு ஆலைகளில், அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியுள்ளது. இதில், வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலக உரிமத்துடன் இயங்கி வந்த, 45 ஆலைகளுக்கும், டி.ஆர்.ஓ., உரிமத்தில் இயங்கிய, ஐந்து பட்டாசு ஆலைகளுக்கும், அதிகாரிகள், "சீல்' வைத்துள்ளனர். டி.ஆர்.ஓ., உரிமத்தில் இயங்கும், 82 ஆலைகள் மற்றும் வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலக உரிமத்தில் இயங்கும், 214 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என, விளக்கம் கேட்டு, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. கடைசியாக, சிவகாசியை சேர்ந்த, ஐந்து ஆலைகளுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக