தமிழகத்தில், 75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து,
வேலைக்காக காத்திருக்கின்றனர். இவர்களில், 36,85,000 பேர் பெண்கள். இந்த
புள்ளி விவரம், கடந்த மார்ச், 31ம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்துள்ளோரின் விவரங்கள்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரில், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோரின் விவரங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமா, ஆசிரியர் பயற்சி முடித்தவர்கள், இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் என, கல்வித் தகுதி வாரியாகவும் விவரங்கள் வேலைவாய்ப்பு இயக்குனரகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் கல்வியில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், 1,79,000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் பொறியியல் இளம்நிலை பட்டம் (பி.இ.,) பெற்றவர்கள், 1,39,000 பேர். முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்
மருத்துவத்தில் இளம்நிலை (எம்.பி.பி.எஸ்.,) பட்டம் பெற்றவர்கள், 12,932 பேர். முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், 4,444 பேர். வேளாண்மைக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், 2,132 பேர். முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், 1,156 பேர். பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள், 8,18,000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வேண்டி பதிவு செய்துள்ளனர்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 29,29,000 பேரும், பிளஸ் 2 முடித்தவர்கள், 20,62,000 பேரும், டிப்ளமாதாரர்கள், 1,74,000 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக