Translate

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

இந்திய மாணவர்களின் முதல் விருப்பம் அமெரிக்கா

                வெளிநாட்டு கல்வி என்றாலே, இந்திய மாணவர்களின் நினைவுக்கு முதலில் வருவது அமெரிக்கா. பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்கள் இருந்தபோதும், அதுவே அமெரிக்காவே, மாணவர்கள் மத்தியில் தற்போதும் முதலிடத்தில் இருக்கிறது.
பொருளாதார சிக்கல்களால் குறைந்துபோன வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல சிக்கல்கள் இருந்தாலும், மாணவர்கள் அமெரிக்காவை தேர்வுசெய்ய காரணம், தங்களுக்கான கல்வி மற்றும் வாழ்க்கை அனுபவம் அமெரிக்காவில் விரிவான அளவில் கிடைப்பதால்தான்.
உயர்கல்வி அமைப்பு
அமெரிக்காவில், 4000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை, கம்யூனிட்டி கல்லூரிகள், தனியார் மற்றும் பொது பல்கலைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நாட்டில் வழங்கப்படும் இளநிலைப் பட்டமானது 4 வருட காலஅளவைக் கொண்டது. அமெரிக்காவில் கல்லூரிகளைத் தேடும் மாணவர்கள் மத்தியில் இந்த அம்சம்தான் முதலிடத்தில் உள்ளது.
இன்னொரு வகையில் பார்த்தால், கலை அல்லது அறிவியல் துறையில் அசோசியேட் பட்டம் பெறுவதை மாணவர்கள் விரும்புகிறார்கள். அசோசியேட் பட்டம் என்பது கம்யூனிட்டி கல்லூரிகளால் வழங்கப்படும் 2 வருட படிப்பிற்கான பட்டமாகும். கம்யூனிட்டி கல்லூரிகளால் வழங்கப்படும் இந்த அசோசியேட் பட்டம் என்பது பல வெளிநாட்டு மாணவர்களால் விரும்பப்படுவதற்கு காரணம், தனியார் மற்றும் பொது கல்லூரிகளை விட இங்கே கட்டணம் குறைவு என்பதும், படிக்கும் காலகட்டமும் குறைவு என்பதுமே.
ஏனெனில், அமெரிக்காவில் கல்வி கட்டணம் என்பது மிகவும் அதிகம். இந்த அசோசியேட் பட்டம் பெற்றபிறகு, ஒரு மாணவர், தனக்கான வேலையைத் தேடிக் கொள்ளலாம் அல்லது 4 வருட இளநிலைப் பட்டப் படிப்பை தொடர்ந்து படித்து நிறைவு செய்யலாம்.
மாணவர் சேர்க்கை முறைகள்
அமெரிக்க கல்வி நிறுவனங்கள் பொதுவாக, மாணவர்களிடம் நம்பத்தன்மையை எதிர்பார்ப்பவை. இளநிலைப் படிப்பில் சேர வேண்டுமெனில், ஒருவரின் பள்ளி சான்றிதழ்கள் தெளிவாக சரிபார்க்கப்படும் மற்றும் முதுநிலைப் படிப்பில் சேர வேண்டுமெனில், ஒருவரின் இளநிலை படிப்பின்போதான 4 வருட செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும்.
தேர்வு மதிப்பெண்கள், டோபல் மதிப்பெண்கள், () களில் ஒரு மாணவரின் ஆர்வம் மற்றும் பங்களிப்பு, பரிந்துரை கடிதங்கள் போன்றவை, அமெரிக்க கல்வி நிறுவனத்தில் ஒரு மாணவர் இடம் பிடிப்பதை உறுதிசெய்யும் அம்சங்கள்.
செலவினங்கள்
படிக்கும் கல்வி நிறுவனம் மற்றும் பாடப்பிரிவை பொறுத்து, ஒரு வருடத்திற்கு, 18000 முதல் 50000 வரை செலவாகிறது.
பிரபலமான பாடப்பிரிவுகள்
இன்ஜினியரிங், கணிப்பொறி அறிவியல் மற்றும் பயோடெக்னாலஜி போன்றவை மிகவும் பிரபலமான படிப்புகள். மேலும், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் மற்றும் சிவில் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
வேலை வாய்ப்புகள்
ஒருவரின் படிப்பு முடிந்தபிறகு, தேவையான இன்டர்ன்ஷிப்பை முடிக்க, Curricular Practical Training(CPT) மற்றும் Optional Practical Training(OPT) ஆகியவற்றின் அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். இதன்மூலமே, ஒரு மாணவர், 12 மாதங்கள் அமெரிக்காவில் பணியாற்ற முடியும்.
மேலும், ஒரு மாணவர், 17 மாதங்கள் வரையிலான நீட்டிப்பை ஒரு தடவை பெற முடியும். ஆனால், இந்த நீட்டிப்பு சலுகையானது, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக