Translate

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

சிரிச்சு... வையுங்க!



கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே வரும் கப்பல் மோதிவிடக் கூடாதென்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.  ""உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப் பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்''  இதற்கு, ""ஸôரி... நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.  ""நான் கப்பல் மாலுமி. நீ உன்னுடைய வழித்தடத்தை மாற்றிக் கொள்'' என்றான் மாலுமி.  ""நான் கடல் பிரதேச மனிதன். நீ உன்னுடைய பாதையை மாற்றிக் கொள்'' என்று பதில் வந்தது.  ""இது யுத்த கப்பல். நான் அதன் கேப்டன். நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்'' என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.  ""இது லைட் அவுஸ். உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப நாங்கள் இதை மாற்றிக் கொள்ள முடியாது'' என்று பதில் வந்தது.* * * அம்மா சுவையான ப்ளம் கேக் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாள். முதல் கேக்கை யார் சாப்பிடுவது என்ற ஆவலில் 5 வயது சுரேசும், 3 வயது நவீனும் காத்திருந்தார்கள். கூடவே யாருக்கு முதல் கேக் என்ற போட்டியும் இருந்தது. அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்த அம்மா சொன்னாள்: ""ஒருவேளை இந்த இடத்தில் கடவுள் அமர்ந்திருந்தால் முதல் கேக்கை என்னுடைய தம்பி எடுத்துக் கொள்ளட்டும். நான் வேண்டுமானால் காத்திருக்கிறேன்'' என்று சொல்லியிருப்பார்.  உடனே சுரேஷ் சொன்னான்: ""அப்படியானால் நவீன், நீதான் இப்போது கடவுள்''* * * கடைசி நேரத்தில் ரயிலைப் பிடிக்க அவசர அவசரமாக ஓடிவந்த தம்பதியரில் கணவன் சொன்னான்: ""கூடவே வீட்டில் உள்ள புக் ஷெல்பையும் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்''  ""பைத்தியமா உங்களுக்கு? புக் ஷெல்ப்பை எதற்காகத் தூக்கி வர வேண்டும்?'' மனைவி கேட்டாள்.  ""அதற்குள்ளேதான் நாம் பயணம் செய்ய வேண்டிய ரயில் டிக்கெட் இருக்கிறது'' என்றான் கணவன். * * * விருந்தொன்றில் கலந்து கொண்ட வயதான பெண்மணியொருத்தி அங்கு வந்திருப்பவர்கள் அணிந்திருந்த அரைகுறை ஆடைகளைப் பற்றி வருத்தப்பட்டுப் பக்கத்திலிருந்தவரிடம் சொன்னார். ""இந்தக் காலத்துப் பெண்களுக்கு வர வர எப்படி உடையணிய வேண்டுமென்ற விவஸ்தையே இல்லை. பையனோட ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்து கொள்கிறார்கள். பையன்களைப் போலவே கிராப் வெட்டிக் கொள்கிறார்கள். அந்தப் பெண்ணைப் பாருங்கள். ஆணா? பெண்ணா? என்பது கூடத் தெரியவில்லை''  பக்கத்திலிருந்தவர் பொறுமையுடன் சொன்னார்: ""அவள் என்னோட பெண்தான்'' திடுக்கிட்ட வயோதிக பெண்மணி, ""ஓ... சாரி... நீங்கள்தான் அவளோட அப்பா என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்'' என்று வருத்தப்பட்டார்.  ""பரவாயில்லை. நான் அவளோட அப்பா இல்லை. அம்மா'' என்றார் பக்கத்திலிருந்தவர். * * * தேசீய நெடுஞ்சாலைப் பணியாளர் ஒருவர் வயதான விவசாயி ஒருவரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.  ""உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்'' என்றார்.  ""சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்'' என்றார் விவசாயி.  ""நான் நெடுஞ்சாலைத் துறைப் பணியாள். எனக்கு எங்கு வேண்டுமானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் கொடுத்தது'' என்றார் பணியாளர்.  ""அதற்கு மேல் உங்களிஷ்டம்'' என்று கூறிய விவசாயி பேசாமல் வயல் வரப்பில் அமர்ந்தார்.  வயலுக்குள் சென்ற பணியாளர் சிறிது நேரத்துக்கு எல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். அவருக்குப் பின்னால், முரட்டுக் காளை ஒன்று துரத்தி வந்ததை விவசாயி பார்த்தார். தன்னைக் காப்பாற்றும்படி அலறிய பணியாளரிடம் விவசாயி சொன்னார்:  ""சீக்கிரமாக உங்கள் அடையாள அட்டையை எடுத்து அதனிடம் காட்டுங்கள்''    * * *  உயர் கல்வி படிப்பில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு.  கூட்டு விவாதம் அனைத்திலும் பிரமாதமாக வெற்றி பெற்ற மாணவன் ஒருவன் இறுதியாக நேர்முக தேர்வுக்காகச் சென்றிருந்தான். அந்த மாணவன் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தான். அதனால் பொறுமையிழந்த நேர்முகத் தேர்வு அதிகாரி அவனை எப்படியும் மடக்கிவிட வேண்டும் என்பதற்காக, ""இப்போது உன்னிடம் பத்து சுலபமான கேள்விகள் கேட்கலாமா அல்லது ஒரே ஒரு கடினமான கேள்வி கேட்கலாமா என்பது குறித்து நீயே தீர்மானித்துச் சொல்'' என்றார். சில விநாடிகள் யோசித்த மாணவன், ""ஒரே ஒரு கடினமான கேள்வி கேட்பதையே விரும்புகிறேன்'' என்றான்.  ""அதிர்ஷ்டம் உன் பக்கம் இருக்கட்டும். நீ விரும்பியபடியே ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்'' என்று கூறிய அதிகாரி, ""முதலில் வருவது பகலா? இரவா? எது என்று சொல்'' என்றார். ஒரு கணம் திகைத்த அந்த மாணவன், ""முதலில் வருவது பகல்'' என்றான். ""எப்படி?'' என்று கேட்டார் அவர்.  ""ஸôரி சார்... நீங்கள் கேட்பதாகச் சொன்னது ஒரே ஒரு கேள்விதான். இரண்டாவது கடினமான கேள்வியை நீங்கள் கேட்டு இருக்கக் கூடாது'' என்றான் மாணவன்.  உடனடியாக அவன் மேற்கொண்டு படிக்க அனுமதி வழங்கப்பட்டது.    * * *    இரவு நேரத்தில் அந்த நகருக்கு வந்த ஒரு பெண் தங்குவதற்கு எந்த ஓட்டலிலும் அறைகள் கிடைக்காமல், தவித்துக் கொண்டிருந்தாள். கடைசியில் ஓர் ஓட்டலில் அவள் மீது பரிதாபப்பட்ட ஓட்டல் உரிமையாளர், ""இந்த ஓட்டலில் தங்கக் கூடிய அறை ஒன்று உள்ளது. அதில் விமானப் படை வீரனொருவன் தங்கியிருக்கிறான். நீ வேண்டுமானால் அவனுடன் தங்கிக் கொள்ளலாம். ஆனால் அவன் பயங்கரமாகக் குறட்டை விடுவதாக பக்கத்து அறைகளில் உள்ளவர்கள் புகார் கூறியுள்ளனர். உனக்கு ஆட்சேபணையில்லை என்றால் தங்கிக் கொள்'' என்றார்.  ""எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. நான் அவனுடனேயே தங்கிக் கொள்கிறேன்'' என்று அவள் சொல்லிவிட்டுச் சென்றாள்.  மறுநாள் காலை சிற்றுண்டிக்காக அவள் வந்தபோது, ஓட்டல் உரிமையாளர் கேட்டார்: ""நேற்றிரவு எப்படி நன்றாகத் தூங்கினாயா?'' என்று கேட்டார்.  ""பரவாயில்லை. எப்படியோ அட்ஜெஸ்ட் செய்து கொண்டேன்'' என்றாள்.  ""எப்படி?'' என்று கேட்டார்.  அவள் சொன்னாள்: ""அறைக்குள் நான் சென்றவுடன் அவன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். நான் அவனுடைய கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டேன். பின்னர் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய்'' என்று அவன் காதருகில் சொல்லிவிட்டு நான் படுத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு அவன் தூங்கவே இல்லை. ராத்திரி முழுக்க விழித்தபடியே படுக்கையில் அமர்ந்தபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்''  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக