Translate

சனி, ஆகஸ்ட் 04, 2012

காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி-- TIME SIMILAR TO THE EYE-DUTY IS EQUAL TO THE GOLD

காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? என்பதற்கான டிப்ஸ் பற்றி கீழே காணலாம். * ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான் என்ற கால அளவு மாறப் போவதில்லை. அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள். *உங்களுடைய பயனுள்ள நேரம் எங்கு வீணாக செலவிடப்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக சிலர் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவார்கள் அல்லது இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பார்கள் அல்லது டிவி பார்ப்பதில் நேரத்தை செலவிடுவார்கள். இவற்றில் எவ்வகையில் உங்களுடைய நேரம் வீணாகசெலவிடப்படுகிறது என்பதை அறிந்து தவிர்த்து விடுங்கள். *நீங்கள் சரியான கால அளவை பின்பற்றுவதை, இலக்காக வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது நடத்தையில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, நான் காலை 10 மணிக்கு இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என உங்களது நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் மட்டும் போடாமல், அதை செயல்படுத்த முனையுங்கள். *தினமும் எழும் நேரம் மற்றும் உறங்கும் நேரம் உள்ளிடவற்றை சரியான முறையில் வகைப்படுத்தி கொள்ளுங்கள். *மற்றர்வர்கள் கிண்டல் செய்வார்களோ என அஞ்சி, உங்களது கால அளவை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களது வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்யுங்கள். *இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள். 

  TIME SIMILAR TO THE EYE-DUTY IS EQUAL TO THE GOLD

 Period similar to the eye. Golden is a proverb. Accordingly, we do realize the value of the job better and faster, to do the right moment. Time Machine is very important in today's world. Time to let loose, leaving the equivalent of life lost. How long should you follow? How to manage? Tips to be found below. * 24 hours a day is not going to change the time scale. So if you decide in advance what to do. * Where is your effective time spent in vain to discover. For example, some mobile phone or TV and spend more time in a long time to meet and talk or spend time in the internet. Your time in any of these வீணாகசெலவிடப்படுகிறது Avoid that. * If you follow the right amount of time, can be targeted. This occurs through a change in your behavior. For example, I want to do this work that morning at 10 o'clock to divide your time. Importantly, only asked for time to follow, it munaiyunkal process. * Day time and sleeping time ullitavarrai arising in the right way to classify. * Marrarvarkal fear that makes fun of, do not change the amount of your time. As usual, post your job on time. * Finally, do not waste your time waiting for anyone. 

                                           -KALVIKOODAL..

2 கருத்துகள்: