Translate

புதன், ஆகஸ்ட் 22, 2012

ஐ.ஐ.டி. பேராசிரியர்களின் விரிவுரையை வீடியோவாக பார்க்கும் வாய்ப்பு

டெல்லி: இந்தியாவின் புகழ்பெற்ற ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் பயில வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் விரிவுரைகளை கேட்டு பயன்பெறும் வாய்ப்பை அளித்துள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்.
ண்PTஏள் எனப்படும் தேசிய தொழில்நுட்ப வழி கற்றலின் கீழ் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.சி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்களின் விளக்க உரைகள் வீடியோக்களாகவும், டி.வி.டி.க்கள், பவர் பாயின்ட் பிரசன்டேஷன் மற்றும் PDF வடிவில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையிலும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இவற்றை www. youtube. com/iit அல்லது nptel. iitm. ac. in ஆகிய இணைய தளங்களில் இருந்து பெற்று கொள்ளலாம்.
பொறியியல் மாணவர்கள் மட்டுமல்லாமல், மேலாண்மை, அறிவியல் உள்ளிட்ட பல பிரிவு மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் செய்முறை விளக்கங்களுடன் கூடிய பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களின் விகிதம் குறைவாக இருப்பதாகவும், அப்படியே ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை சரிகட்டவே இதுபோன்ற முயற்சிகளை மனிதவள மேம்பாட்டு ஆணையம் எடுத்துள்ளது.
இந்த புதிய கல்வி முறை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்குகளும் ஐ.ஐ.டி.யில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள கல்லூரிகள் கிராமப்புறங்களிலேயே பெருமளவில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் இது போன்ற புதிய முயற்சிகளை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே இதனை வடிவமைத்த பேராசிரியர்களின் கருத்தாக இருக்கிறது.

                                                                            Courtesy-Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக